Share

Sep 9, 2008

சாரு நிவேதிதா

நேற்று திடீரென்று என் Blog இல் Hitsஅதிகமானதற்கு காரணம் சாரு நிவேதிதா . அவர் தான் படித்ததில் பிடித்தது ஆக என் இணைய விலாசத்தை நேற்று அவருடைய இணையத்தில் குறிப்பிட்டு இருந்தார் . சாரு பற்றி இப்போது நான் எழுதினால் ஏதோ பரஸ்பரம் சொரிந்து கொடுத்த மாதிரி ஆகி விடும் . அவருடைய முதல் நாவலை நான் தான் தமிழ் நாட்டிலே ( இன்றைக்கு அவருடைய சாதனை உலகலாவியது . அதனால் அவர் படைப்பை ' உலகத்திலேயே ' ) முதல் முதலாக விமர்சனம்1990ல்"மேலும் "பத்திரிகை மே மாத இதழில் செய்தவன் . இதற்காக ரொம்ப பெருமைபட்டிருக்கிறேன். இது மாதிரி சந்தோசங்கள் சில எனக்கு உண்டு . அதில் சமீபத்தில் பாவ்லோ கொய்லோ எனக்கு அனுப்பிய இரண்டு மெயில் கூட அடக்கம் . எல்லோருக்குமே சில சின்னசின்ன சந்தோசங்கள் தேவைபடுகின்றென. அவை உண்மையிலேயே பெரிய பாக்யங்கள் என்பது தான் நிதரிசனம் .
சாரு-பாவ்லோ கொய்லோ
சாருவுக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடு உண்டு . ஆனால் அவருடைய மென்மையான , மேன்மையான விஷேசத்வம் பற்றி சொல்ல வேண்டுமானால் கருத்து வேற்றுமை க்காக அவர் யாரையும் வெறுத்ததே இல்லை.
அவருடைய" உன்னத சங்கீதம் "கதையில் தன்னையே சிலுவையில் அறைந்து கொண்ட உன்னத கலைஞன் .
இப்போது நான் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை . என்றாலும் கூட ஒரே ஒரு வார்த்தை ...
The noblest of all writers!

4 comments:

  1. சாருவைப் பற்றி புறம் கூறுவதையே தினப் பொழைப்பாகக் கொண்டு இருக்கும் இலக்கியக் கூட்டத்தில் அவரின் நேர்மையான ஒரு அணி கலனைச் சுட்டிக் காட்டியமைக்கு சாருவின் அதிரடி வாசகன் என்ற முறையில் என் அன்பான நன்றி..



    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. A honest approach on Charu. Thanks.
    Saravana Kumar

    ReplyDelete
  3. //அவருடைய முதல் நாவலை நான் தான் தமிழ் நாட்டிலே ( இன்றைக்கு அவருடைய சாதனை உலகலாவியது . அதனால் அவர் படைப்பை ' உலகத்திலேயே ' ) முதல் முதலாக விமர்சனம்1990ல்"மேலும் "பத்திரிகை மே மாத இதழில் செய்தவன் //

    நான் தீவிர இலக்கியவாசகன் இல்லை என்றாலும்.. சாருவின் முதல் நாவலான “எக்சிஸ்டென்சியலிஷம்..“ நாவலுக்கு “பறை“-யில் நானும் ஒரு விமர்சனம் 90-ல் எழுதி உள்ளேன். இது ஒரு தகவல்தான்.

    அன்புடன்
    ஜமாலன்.

    ReplyDelete
  4. Dear Jamaalan sir,I'm surprised!

    I read your review in Parai 1990.

    But if you check with Pothiya verban ,he will confirm that Parai 1990 was published in the end of 1990.

    Moreover my review of "Existentialismum Fancy baniyanum" was read by me in "Ethirvu" function held in my house before six months it was published in Melum 1990.

    Any how,

    I feel happy to see an important writer's comment in My blog.

    Thanks and Kind regards,

    R.P.Rajanayahem

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.