ஆறடி மூன்று அங்குலம் உயரம் நிர்மல் குமார். Gigantic.
கோன் ஐஸ் விற்கிறார்.
இருபது ரூபாய்.
"வெண்ணிலா வேணுமா? ஸ்ட்ராபெரி வேணுமா?
இல்ல ரெண்டுமே கலந்து வேணுமா?"
எந்த தொழில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இவர் கோன் ஐஸ் விற்பது
பார்க்க விசித்திரமாக.
தூய தமிழில்
விளம்பர பலகை -
"பனிக்குழையம்".
கோன் ஐஸ் மட்டுமே விற்கிறாரா? குண்டு சோடா இருபது ரூபாய்.
மதுரையில் இருந்தே வரும் ஜிகர்தண்டா எண்பது ரூபாய்.
ஆனால் குமரனோடு சம்ஸ்கிருத 'ஸ்ரீ' சேர்த்து "ஸ்ரீ குமரன் பனிக்குழையம்". தனித்தமிழ் அக்கறையெல்லாம் இல்லை.
All who are not on the rock are in the sea.
ஆஃபிஸர் ஆகிருதி.
ஏன் போலீஸ் வேலைக்கு போகவில்லை?
' போலீஸ் வேலைக்கு போகக்கூடாதுன்னு அம்மா தடுத்துட்டாங்க."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.