Share

May 25, 2024

மே 24, 2024 இரண்டாவது சந்திப்பு

மே 24,  2024 
வெள்ளிக்கிழமை மாலை. 
பாக்யராஜ் அழைப்பு.
வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியா வீட்டில் 
துறுதுறு, உற்சாக ஆளுமையுடன் கலகலப்பான உரையாடல்.
இரவு பத்து மணி வரை.

ராஜநாயஹம் மணல் கோடுகளாய்.. நூலில் வருகிற 'சமயக்கார பாய்' பற்றி 
இரண்டு முறை அந்த தென்காசி பாய் வசனத்தையெல்லாம் குறிப்பிட்டு ரசித்து பேசினார்.

மணல் கோடுகளாய்.. 
'ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர்' பற்றியும்.

பேசிக்கொண்டிருக்கும் போதே இசை ஆசிரியர் வந்து விட்டார். அவரை வெயிட் பண்ணச் சொன்னார். 
உரையாடல் நீண்ட போது உதவியாளரை அழைத்து ' அவருக்கு போரடித்தால் உள்ளே வந்து உட்காரச் சொல்'
அதன் பின்னரும் உரையாடல் தொடர்ச்சி.

புனை பெயர் கோவை ராஜா 
என்று தான்  இருந்திருக்கிறார். 

பதினாறு வயதினிலே போது பாரதிராஜா 
இவரை ராஜன் என்பார்.
டைட்டில் பெயர் எழுதுவது விஷயமாக
 அசோசியேட் பி. வி. பாலகுரு இவரை அணுகிய போது
யோசித்திருக்கிறார். அம்மா வைத்த அழகான பெயர் பாக்யராஜ். அதையே பால குருவிடம் கொடுத்திருக்கிறார்.
பாரதிராஜா " என்னய்யா இது. பா'க்கி'யராஜ்?"
(இப்போதும் பாக்யராஜ் பெயரை பா'க்கிய'ராஜ் என்று தான் உச்சரிப்பார்.)
K. Bhagyaraj.

ராஜநாயஹம் விலாசத்தை பாக்யராஜ் கேட்டு எழுதி உதவியாளரை கேப் புக் பண்ணச் சொன்னார். 

டாக்ஸி வந்ததும் அடையார் திரும்பல்.

பத்து மணிக்கு மேல் பாக்யராஜ்
 இசைப் பயிற்சி ஆரம்பம்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.