க. நா. சு கடைசி நூல் 'கலை நுட்பங்கள்' முன்றில் வெளியீடாக மா. அரங்கநாதன் மூலம் அச்சில் வந்தது.
உடனே சுடச்சுட வாங்கினேன். க. நா. சு புகைப்படம் இன்னும் நினைவிருக்கிறது.
க.நா.சு கலை நுட்பங்களை மஹாதேவனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.
க.நா.சுப்ரமண்யம் தன்னிடம் பேசியதை விட மகன் மஹாதேவனிடம் தான் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருந்தார் என்று அரங்கநாதன் எழுதியிருக்கிறார்.
க.நா.சு.வுக்கு அரங்கநாதன் மகன் மஹாதேவன் மீது விசேஷ பிரியம் இருந்திருக்கிறது.
பிரமிள் கூட மஹாதேவனிடம் நல்ல நட்புடன் இருந்தார்.
2019 ஏப்ரல் 28ம் தேதி
வழக்கறிஞர் பா. அசோக் மூலம் சோமு நூற்றாண்டு விழாவில் சந்திப்பின் போது சொன்னதை மறக்கவே முடியாது.
" உங்களுக்கு Surprise.1988ல் ராஜநாயஹம் எழுதிய கடிதம் இப்போதும் என்னிடம் இருக்கிறது"
2020 ஏப்ரல் கொரானா காலத்தில் ராஜநாயஹத்திற்கு செல் பேசியில் நீதியரசர் மஹாதேவன்
" ஒரு உதவி செய்வீர்களா?"
என கேட்டார்.
தொடர்ந்து சொன்ன வார்த்தைகள்
அரு மருந்து
" ராஜநாயஹம், நீங்க நல்ல கலைஞர். நொறுங்கிப் போய் இருக்கீங்க. எழுந்து நிக்கணும்."
ராஜநாயஹம் எழுந்து நிக்கணும் என்பது தான் வணக்கத்துக்குரிய
பொறுப்பு தலைமை நீதியரசர் மஹாதேவன் கேட்ட உதவி.
வாத்சல்யம்.
நெகிழ்ந்து, விக்கித்த நிலை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.