Share

May 7, 2024

நல்ல தூக்கத்தில இருக்றப்ப எழுப்பி விட்டுட்டீங்க...

ஐந்து மாதங்களில் எவ்வளவெல்லாம் எழுதக் கிடைத்திருக்கிறது.
 ராசுக்குட்டி (1992)

ஜெமினி கணேசனுடன் இருந்த
ஐந்து மணி நேரத்தில் கூட எழுத நெறய்ய கிடைத்ததுண்டு. (1994)

ஷூட்டிங் போது கோபிச்செட்டிப்பாளையம், மேட்டூர் இரண்டு ஊர்களிலும் லாட்ஜ்களில் தங்கும்படி இருந்திருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் எமரால்ட் ஹவுஸ், எஸ்.கே. லாட்ஜ் இரண்டிலுமே.
எஸ்.கே. லாட்ஜில் இருந்த போது 
அதி காலை ஐந்தரை மணி - காலைக்கடன் அவசரமாக முடித்து, குளித்து தலை துவட்டிக்கொண்டிருக்கும் போது அறைக்கதவு தட்டப்படுகிறது. 

ராஜநாயஹத்துடன் இன்னொரு உதவி இயக்குநர். அடுத்ததாக ரெஸ்ட் ரூமில் தயாராகிக்கொண்டிருந்தான்.

நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு விசித்திரமாக " எனக்கு மூளை ஜில்லுனு ஆயிடுச்சுங்க. இங்க நம்ம ரெண்டு பேரும் முன்னால எப்பயோ சந்திச்சிருக்கோங்க. எனக்கு உறுதியா நல்லா தெரியுதுங்க. எனக்கு திடீர்னு மூளை ஜில்லுனு இருக்குங்க. எப்பன்னு தெரியலங்க. ஆனா உறுதியா இதே எடத்துல நம்ம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோங்க"

'என்னடா இது Teja Vu. படுத்து தூங்கு.'

" போன பிறவியில இதே எடத்துல நிச்சயமா Meet பண்ணியிருக்கோம். மூளை ஜில்லுனு இருக்குதுங்க "

" படுத்துக்க படுத்துக்க தூங்கணும்"

இவன் தான் ' வீட்ல இருந்து செலவுக்கு பணம் அனுப்றோம்னு சொன்னாங்கங்க. நான் வேண்டாம். நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன் " னு அடிக்கடி சொல்வான்.

Spend பண்ணா Loss வரத்தானே செய்யும்.

நான் லாட்ஜூக்கு எதிரே இருந்த எஸ்.டி.டி. பூத்துக்கு கிளம்பி படிகளில் இறங்குகிறேன்.

மேஜர் சுந்தர்ராஜன் ரிஸப்ஸனில். புன்னகையுடன் முகாலோபனம். தலையை ஆட்டுகிறார். ஏதோ படத்துக்காக வந்திருக்கிறார். கோபிச்செட்டிப்பாளையம் மற்றொரு கோடம்பாக்கம் தான்.

எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்தை நெருங்கும் போது 'நிழல்கள்' ரவி.
அவர் நடிக்கிற படத்தின் தயாரிப்பு நிர்வாகி
யிடம் நிழல்கள் ரவி " என்னண்ணே, நல்லா தூங்கிட்டு இருக்கும் போது 'உங்களுக்கு ஃபோன்' னு எழுப்பி விட்டுட்டீங்க. 'கால்' எனக்கில்லண்ணே. என்னண்ணே. போங்கண்ணே"

கோபப்படாமல் மென்மையாக சலித்துக் கொண்டார்.

சென்னையில் இருந்து ரவிக்கு ஃபோன் என்றதும் இவரையும் எனக்கு முன்னே பூத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்கள்.

ராசுக்குட்டி தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த ரவி அந்த சமயம் சென்னையில் 
காஸ்ட்யூம் சி.கே. கண்ணன் வீட்டில் வாடகைக்கு இருந்தார்.

 ராசுக்குட்டி ப்ரொடக்ஸன் மேனேஜர் ரவிக்கு லாட்ஜ் எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்திற்கு சென்னையில் பஞ்சு அருணாசலம் சினிமா கம்பெனியில் இருந்தோ அல்லது பாக்யா ஆபிஸில் இருந்தோ ஃபோன். அவரை பூத்திற்கு அழைத்து வரச்சொல்லி ஃபோன். 
ரவி சென்னைக்கு ஃபோன் போட்டு விவரம் கேட்டுக் கொள்ளலாம். ஏதோ முக்கிய அவசரம். ஆனால் ரவியை இருள் பிரிகிற நேரத்தில் லாட்ஜில் எந்த ரூம். தேட முடியவில்லை. 
"நீங்கள் வந்து பேசுங்கள். நம்பர் குறித்து வைத்திருக்கிறோம்."
ராஜநாயஹம் கூட ராசுக்குட்டி யூனிட். அதனால் எழுப்பி விட்டார்கள். 
நடுநிசி தாண்டி ஷூட்டிங் முடிந்த பின்னர் இரவு சாப்பிட்டு பிறகு படுக்கை.

எஸ்.டி. டி பூத் ட்ரங்க் கால் சமாச்சாரம் எப்போதும் அண்டாக்கா கசம் ஆபூக்கா கசம் தான்.

பூத்தில் காத்திருக்கும் போது தங்கியிருந்த அறையில் இருந்த அந்த மற்றொரு உதவி இயக்குநர் "என்னங்க, டாக்ஸி உங்களுக்காக வெயிட்டிங்குங்க. உடனே வாங்க. கிளம்புங்க."

.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.