Share

May 30, 2024

பழய பாட்டுக

சரோஜாதேவி தலையசைத்து ரசித்து கேட்பது
" இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ண இழுத்து வளச்சி என்ன பாரு புரியும்"
" பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?"

....


கல்யாண சாப்பாடு போடவா பாட்டுல

"புது மனையில் குடி வைப்பேன்
முதல் இரவு முடிய விழித்திருப்பேன்"
தங்கச்சி கல்யாணம் அண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்.

கல்யாணம் முடிஞ்சு பின்னால 
தனியா புது வீட்ல தங்கச்சிய குடியமர்த்தறதெல்லாம் அண்ணன் கடம தானே.

அண்ணனுக்கு கல்யாண வேல அலுப்பு கொஞ்ச நஞ்சமா?
அசதியில அடிச்சுப் போட்ட மாதிரி படுத்து நல்லா தூங்கி காலயில முழிக்காம என்னது இது? 

கல்யாணத்தன்னக்கி அண்ணங்காரன்
' முதல் இரவு முடிய விழித்திருப்பேன் 'னு பிடிவாதம் பிடிக்றதெல்லாம் 
ரொம்ப ஓவர். வீம்பு தான?

நீ எதுக்குய்யா முழிச்சேயிருக்கனும்? 
என்னய்யா ஒன் பிரச்ன?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.