புத்தகத்திற்கு அட்டை போடும் சம்பிரதாயம் எல்லா ஜூன் மாதங்களிலும் நித்திய கடமை. இதை சிறுவனான காலம் தொட்டு செய்தேயில்லை. அட்டை போடத் தெரியாது.
மகன்கள் கீர்த்தி, அஷ்வத் இருவருக்கும் அம்மா தான் பள்ளிப் புத்தகங்கள் அட்டை போட்டு லேபிள் ஒட்டுவாள்.
கூத்துப்பட்டறையில் தேங்காய் உரிக்கிற உபகரணத்தை பார்த்திருக்கிறேன்.
ந. முத்துசாமி அதை எடுக்கச் சொன்னார். கூர் முனையில் காய்ந்து போயிருந்த தென்னங்காயை குத்தச்சொன்னார்.
'இப்ப இப்டி பண்ணுங்க' 'அப்டி பண்ணுங்க'
விபரம் முத்துசாமி சொல்ல சொல்ல..
சொன்னதை செய்த போது தேங்காய் தரிசனம். ஆஹா, தேங்காய் உரிப்பது இவ்வளவு சுலபமா?!
பத்து தேங்காய் அடுத்தடுத்து உரித்த போது குதூகலம்.
முத்துசாமி பயிற்சி எல்லாமே இப்படித்தான்.
எத்தன சாமி வந்தாரோ எத்தன சாமி போனாரோ அத்தன சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ
புகைப்படம்: முத்துசாமி கொண்டாடிய கடைசி பிறந்த நாள்.
கருநீலச்சட்டை ராஜநாயஹம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.