ஆதாமின்ட தட்டு கட.
கலாச்சாரம் பேணும் மலையாளி புரோட்டா, புட்டு சாப்பிடும் கடை சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆர்ம்ஸ்ட்ராங்க் முதல் முதலாக நிலாவில் கால் வைத்தவுடன் அங்கே ஒரு நாயர் கையில் டீ கெட்டிலுடன் கேட்டாராம். “எந்தா சாரே.. சாயா வேணுமோ? கட்டன் சாயா..”
ஆதாமின்ட தட்டு கடயில் புரோட்டா பீஃப் சாப்பிட்டு விட்டு பக்கத்து ஸ்டாலில் ஒரு காஃபி
( ஸ்டால் பேர் Mud coffee.) மண் டம்ளரில் காஃபி குடித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த ஒரு டோனட் ஷாப் வாசலில் ஒருவர் பைக்கில் வந்து இறங்கினார். பைக்கில் அவருடன் ஒரு பக் டாக். Pug dog. A bundle of love gift-wrapped in fur.
அந்த பக் நாயை அப்படியே பைக்கில் அமர வைத்து விட்டு கடைக்குள் அவர் கடைக்குள் போய் விட்டார்.

சமத்து. அப்படியே உட்கார்ந்திருந்தது.
டீ சர்ட், ஷாட்ஸ் போட்டு அசத்தலா இருக்கு. ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்.
பைக் நின்ற இடத்தில் மண் தரையில் ஒரு Stray dog படுத்திருக்கிறது.
இதுவும் படு சமத்து தான். கால பைரவர்.
டீ சர்ட், ஷாட்ஸ் போட்டு அசத்தலா இருக்கு. ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்.
பைக் நின்ற இடத்தில் மண் தரையில் ஒரு Stray dog படுத்திருக்கிறது.
இதுவும் படு சமத்து தான். கால பைரவர்.
’சொர்க்கத்தில் இருந்து நரகம் வரை, இங்கு சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை. வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை.’ சேடப்பட்டியானுக்கு கண்ணதாசன் பாடல். மதுரை பக்கமெல்லாம் எஸ்.எஸ்.ஆரை சேடப்பட்டியான் என்பார்கள்.
தரையில் படுத்திருந்த தெரு நாய் கடலிலாவது என்றாவது குளித்திருக்குமா? There is always a stray dog somewhere that stops me being happy.
கூத்துப்பட்டறை தெருவில நம்ம வெள்ளக்கண்ணு இப்ப என்ன செய்யுதோ? That street dog Vellakannu is a nicer one than some other persons there.
பக் நாய் பற்றி சுவாரசியமான ஒன்று சொல்லப்படுவதுண்டு. The Pug is a living proof that God has sense of humour.
பக் நாய் பற்றி சுவாரசியமான ஒன்று சொல்லப்படுவதுண்டு. The Pug is a living proof that God has sense of humour.
மறக்க முடியாத வோடஃபோன் விளம்பரத்தில் பிரபலமானது கூட ஒரு பக் நாய்.
செல்வப்பரம்பரையினரால் சீராட்டி வளர்க்கப்பட்டாலும் பக் ஏன் ஏதோ பெரும் துக்கத்தில், மீளாத்துயரில் இருப்பது போல தோற்றம் தருகிறது?
’விரலுக்கு தகுந்த வீக்கம்ப்பா’ன்னு சொல்லுமோ? ’வீட்டுக்கு வீடு வாசப்படி. என் கஷ்டம் உனுக்கெப்பட்டி தெரியும்.எனுக்குத்தான் தெரியும்.’னு சொல்லுதோ? என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்? ’You should get into my shoes to know my sorrows. போப்பா..போ..’
இந்த செல்ல நாய்க்கு காலில் ஷூ போட ஏன் மறந்தார்கள்?

Speak to the animals, birds, reptiles and trees. They talk.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.