Share

Jan 7, 2019

சிக்கலும் சவாலும்


விஞ்ஞானத்திலும் காலாவதி சமாச்சாரம்.
விஞ்ஞான உண்மைகள் எல்லாம் கேள்விக்குரியதாகி வருகிறது.
ஐன்ஸ்டினின் E = MC2 தவறு என்று தமிழ் விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் கூறுகிறார். ஆழியாரில் உள்ள உலக சமுதாய சேவா மையத்தின் விஞ்ஞானி இவர்.
சூரியன் முதலான கிரகங்களை விட அண்ட வெளி அடர்த்தியானதாம். கிரகங்களுக்கு அண்டவெலி சீரான சமமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் தான் கிரக நகர்வு. நியூட்டனும் ஐன்ஸ்டினும் இதை முழுமையாக புரிந்திருக்கவில்லையாம். ஆகவே ஐன்ஸ்டின் உலகத்துக்கு சரியான பாதையை காட்டவில்லை என்கிறார் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன்.
’நம்பகத்தன்மை’ என்ற பிரமை எவ்வளவு அற்பமானது என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்க முடியும்? அனுமானம் என்பது விஞ்ஞானத்திலும் விரவியிருக்கிறதா?
மூட நம்பிக்கை, மாயை, கட்டுக்கதைகளுக்கு எதிராக இருக்கும் வெளிச்சம் தான் விஞ்ஞானம் என்ற நிலை கேலிக்குரியதாகிறதா?
ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நிகழ்ந்தேறிக்கொண்டிருப்பது சாமி கொடுத்த வரம். நடேஷ் சாமி கொடுத்த வரம். பெரும் தடைகளையும் இந்த வரம் மீறியதால் டிசம்பர்ட் 15லும் 30ம் தேதியிலும் கூத்துப்பட்டறையில் என் பெர்ஃபாமன்ஸ் நடந்தது.
டிசம்பர் 23ம் தேதியும் நடந்தது.
15ம் தேதி நிகழ்ச்சி நடந்த பின் ஒரு இளைஞன் என் காலில் விழுந்து பரவசப்பட்டான்.
30ம் தேதி உற்சாக அப்ளாஸிற்கிடையே ஒரு கமெண்ட். “சினிமாவில் கூட இப்படி நான் சிரிச்சத்தில்லை சார்.”
ஒரு இருபது வயது பெண் ‘ என்ன சொல்றதுன்னே தெரியல சார். கூத்துப்பட்டறையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரொம்ப பிரமாதம் சார்”
என்று பிரமிப்பு நீங்காத நிலையில் ரோட்டில் என்னைப்பார்த்து சொன்னாள்.
2019 ஜனவரி ஆறாம்தேதியில் கொத்தனாரின் கொத்து வேலை நடந்ததால் தியேட்டரும், வாசல் முன் பகுதியும் கயிறு கட்டப்பட்ட நிலை.
தியேட்டரில் மிஞ்சிய சிறு இடத்தில் ஒரு கழைக்கூத்தாடி போல ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நடந்தது.
எனக்கு தெரு கோணல், மேடை கோணல் என்பதான அதிருப்தியெல்லாம் கிடையாதென்பதால் சவாலாகத்தான் நிகழ்ச்சியை நிகழ்த்திக்காண்பித்தேன்.
ந.முத்துசாமி சார் அந்தக்கால கூத்துப்பட்டறை நிகழ்வுகளை மிகுந்த சிரமத்துடன் தான் ஈடேற்ற முடிந்திருக்கிறது.
க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி முகம் சுளித்திருக்கிறார். அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான இந்த சலுகை அசூயை ஏற்படுத்தியிருக்கிறது. ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி தடுத்து நிறுத்தி விட்டாராம்.
முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று. போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். போஸ் கிருஷ்ணமாச்சாரியை அச்சுதன் கூடலூரும் திட்டுவார். டெல்லிக்கு போன கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். அதாவது pauper.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.