Share

Jan 9, 2019

Paparazzi and Privacy


கட்சி ஆரம்பிச்சப்புறம் எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போனார்.
கட்சி ஆரம்பிச்சப்புறம் கமல் சிங்கப்பூருல பூஜா குமாரோட..
எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போன விஷயத்தில வெளிப்படைத் தன்மை இருந்தது.
முதல்வரான பின் எம்.ஜி.ஆர். ஜானகி, ஜெயலலிதாவுடன் ஏசியன் கேம்ஸ் பார்த்தார். எம்.ஜி.ஆர் கூச்சப்பட்டதேயில்லை.
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மேல் சபை உறுப்பினர் ஆக முடியவில்லை என்றவுடன் தமிழக மேல் சபையையே கலைத்துவிட்டவர்.
அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி தி.மு.க என்ன தான் ஏகடியம் செய்தாலும் கொஞ்சம் கூட லட்சியம் செய்ததேயில்லை. ஊரும் உலகமும் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
கமல் பூஜா சிங்கப்பூர் டூர் ரகசியம் காக்க முயற்சித்திருப்பது பலிக்காமல் போயிருக்கிறது.
கௌதமியுடன் கமல் சிங்கப்பூரில் இருந்த போது தான் அப்போது Affair பற்றி தெரிய வந்தது. குமுதம் பகீரங்கப்படுத்தியது. அப்போது அவர் அரசியல் வாதி அல்ல.
கமல் சொந்த வாழ்க்கை பற்றி பி.ஜே.பி தமிழக பிரமுகர்கள், தமிழக ஆளுங்கட்சி மந்திரிகள் ஏற்கனவே குத்திக்காண்பித்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.
கமல் வலதுசாரிகளுக்கெதிரான அரசியல் செய்ய நினைப்பவர். வலது சாரிகளோ தீவிர ஆஷாட பூதிகள். ஒழுக்கம் பற்றிய பிரமைகள் நிறைய இவர்கள் மூளையில் சிலந்தி கட்டியிருக்கிறது.
பாவம் கமல். வெளிப்படையாக நடக்க முடியாமல் அரசியல் அவரை படுத்துகிறதா?
Nobody likes being spied on.
Nobody wants the paparazzi ever following them in life.
டயானா சாலை விபத்தில் இறந்த போது ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தி.
”The pursuit is over. Diana has come home.”

All human beings have three lives.Public, private and secret. – Gabriel Garcia Marquez.
அந்தரங்கம் புனிதமானது என்றெல்லாம் என்ன இருக்கிறது. அதுவும் அரசியலில். சாக்கடையில் கல் போடுவது தானே அங்கே பிரதான செயல்பாடு.
கமல் இடது சாரிகளுடன் நல்ல உறவில் இருப்பவர். இடது சாரிகள் தனி மனித ஒழுக்க நியதிகளை தொண்ணூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்கள். W.R.வரதராஜன் இதனால் தற்கொலையே செய்ய நேர்ந்திருக்கிறது.
மனைவி, துணைவி சமாச்சாரமெல்லாம் எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க அரசியல்வாதிகளிடம் தான் ரொம்ப.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.