Share

Jul 4, 2024

கும்பகோணம் - திருவையாறு

தி. ஜானகிராமன் படைப்புகளில்                                        முக்குளித்து எழுந்த ராஜநாயஹம்
கும்பகோணம் பார்த்ததில்லை.

கர்நாடக சங்கீத பரம ரசிகன் ராஜநாயஹம்.
திருவையாறு பார்த்ததில்லை.

பார்க்கிற பாக்யம் வாய்த்ததேயில்லை.


எல்லாமே ரொம்ப முக்கியம் தான்..
ஆனா எதுவுமே அவ்வளவு முக்கியமில்ல.

https://www.facebook.com/share/p/2wnVmTZYcuTeuAVR/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/rf9JaPVmmpWaA74n/?mibextid=oFDknk

Jul 3, 2024

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் மூன்று

R.P. ராஜநாயஹம் மூன்று புதிய நூல்கள்

1. டிசம்பர் மார்கழி ஜனவரி

2. தித்தித்தது

3. தூறலாய் சாரல் 

மூன்று புத்தக COMBO முன்பதிவு விரைவில் வெளியிடப்படும்....

அசோக் சாய் ரமணா 
ஜெய்ரிகி பதிப்பகம் வெளியீடு 


கேக்குமா கேக்காதா


கேக்குமா கேக்காதா 


தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு 

Jul 1, 2024

சாக்கையார் கூத்து

சாக்கையார் கூத்து

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி  'Bodyக்கு Intelligence இருக்கு..' 

Light is also an actor. Light also interprets.

"இரண்டு மாதவ சாக்கியார். ஒருத்தருக்கு பூனக் கண்ணு. இன்னொருத்தருக்கு கறுப்புக் கண்ணு" 

மணி மாதவ சாக்கியார். மாதவ சாக்கியார்.

'தொலைவிலிருந்து வருபவனை பக்கத்தில் வரும் வரை பார்ப்பதை' பாவனையில் காட்டியவர் மாதவ சாக்கியார்!

முத்துசாமி திடீர் திடீரென தன் மனதில் ஓடும் காட்சிகளை ராஜநாயஹத்திடம் வெளிப்படுத்துவார்.

ந. முத்துசாமி பொக்கிஷம். 
ராஜநாயஹத்திற்கு பழகக்கிடைத்த பெரும் பாக்யம்.



சாக்கையார் கூத்து கேரள கலை.
கேரள பிராமணர் கலை.
அம்பலவாசிகளான நம்பியாசான், புஷ்பகன்(பூப்பள்ளி), சாக்கியர், பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டன், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள். 

( சோழ நாட்டிலும் சாக்கியார் கூத்து இருந்திருக்கிறதாம்)

ராவணன், அனுமன், விபீஷணன்.
தொன்ம கதாபாத்திரங்கள.

சிலப்பதிகாரம் சாக்கையார் கூத்தை குறிப்பிடுகிறது. 

கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் போரிட்டு ஜெயித்து நாடு திரும்பிய செங்குட்டுவன் 
சௌஜன்யமாய் சாக்கியார் கூத்தை பார்த்து ரசித்திருக்கிறான்.

'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'.

கூத்தில் சாக்கையார் சம்ஸ்கிருத பாயிர சாற்று கவி பாடும்போதும், கடைசியிலும் பின் பக்கம் இடியோசை முழக்கும் மிளாவு  தட்டும் நம்பியார். முழவு இசைக்கருவி.


'நங்கையர்' ( singular )என்ற ஒரு பெண் சாக்கையார் முன் விக்ரகம் போல ஆடாது அசையாது முக பாவமற்று உட்கார்ந்திருப்பாள். அவள் புன்னகை செய்து விட்டால் உடனே சாக்கையார் கூத்து நிறுத்தப்பட்டு விடும். Pack Up!