Strange reply அடிக்கடி யாரிடமிருந்தாவது கேட்க நேர்கிறது.
"இப்ப இந்த வருஷ விகடன் தீபாவளி மலர்ல நீங்க லாரி பேக்கர் பத்தி எழுதியிருந்தீங்கள்ள?
இதே விகடன் தீபாவளி மலர்ல
எஸ். வி. ரங்காராவ் பற்றி கட்டுரை எழுதியிருக்கேன் "
நாசர் விசித்திர பதில் "லாரி பேக்கருக்கும், எஸ். வி. ரங்காராவுக்கும் என்ன சம்பந்தம்??"
இது போல் நடிகர் ராஜேஷிடம் அவரறிந்த ரெண்டு பேரை குறிப்பிட்டு கேட்ட கேள்வி
" இவங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?"
கிடைத்த விநோத பதிலான கேள்வி
" என்னோட வேலய அப்புறம் யார் பாக்கறது?"
குழப்பமா ஏதாவது எங்காவது இப்படி அர்த்தமில்லாமல் கேட்க நேரும் போது 'புரியல என்ன சொல்றீங்க?'ன்னு
எப்போதுமே விளக்கம் தெரிந்து கொள்ள திரும்ப எதுவும் விசாரிப்பதில்லை.
"The pendulum of the mind oscillates between sense and nonsense, not between right and wrong."
- Carl Jung
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.