Share

Jul 22, 2024

சினிமா எனும் பூதம் நூல்


கீதப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்:

சினிமா எனும் பூதம் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத புத்தகம், 

இப்புத்தகம் வாங்குபவர்கள் இரண்டு பிரதி வாங்குவது நன்று, ஒன்று யாராவது படிக்கிறேன் என வாங்கிப்போனாலும் ஒன்று நாம் படிக்க தங்கும், இப்புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் திரும்பத் தரமாட்டார்கள் என்பது கண்கூடு, 

காரணம் ஒவ்வொரு திரை ஆளுமையைப் பற்றிய ஆசிரியரின் தனித்துவமான பார்வை மற்றும் சொற்சிக்கனமான நடையில் எழுதிய ஆழ்ந்த தீர்க்கமான வரிகளைக் கொண்ட கட்டுரைகள் அவை, 

அதற்குள் எத்தனை எத்தனை cross reference, எதுவும் திணித்தலின்றி இயல்பாக பட்டறிவால்  எழுதப்பட்டவை, 

சென்னையின் அண்ணா நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களில்  சினிமா எனும் பூதம் படிக்க ஆவண செய்ய வேண்டும்,

இனி சினிமா பற்றி புத்தகம் எழுதுபவர்கள்  தம் சினிமா பற்றிய புத்தகத்தை மீள் பிரசுரம் செய்ய விழைபவர்கள் இந்த புத்தகத்தை படித்து விட்டு புத்தகம் வெளியிட வேண்டுமா? அது இத்தனை தரமாக வருமா?  என நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.

இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் சிறிதும் கிடையாது, 
ஆட்டுப் புழுக்கை போல ஆண்டுக்கு ஆண்டு சித்திரை மாதம்  புத்தகங்கள் வெளி வருகின்றன,
அதில் இத்தனை தரமாக தனித்துவமாக புத்தகம் வருவது துர்லபம்.

முன்பு சினிமா எனும் பூதம் படித்துவிட்டு எழுதியது இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159287132876340&id=750161339

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.