பெசண்ட் நகர் பீச் வாக்கிங் போகும் போது
ரோட்டில்
மங்கல காட்சி.
மணமுடித்து புதுப்பெண் காலில் மெட்டி அணிவிக்கும் புது மாப்பிள்ளை.
மணமகன் மெட்டி மாட்டிய பின் சாஸ்த்ரப்படி புதுப் பெண்ணுக்கு வானத்தைக் காட்டி
'அதோ பார் அருந்ததி' சொல்வதை
பள்ளியில் ஆசிரியர் ஜெயராமய்யர்
mono actingல் நடித்தே காட்டுவது பசுமையாக நினைவில்.
அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதோ இல்லையோ, வானத்தைக் காட்டி சொல்கிற சடங்கு.
மனம் நிறைந்த வாழ்த்துகள்
'Poor and Content is rich, and rich enough'
- Shakespeare
Othello
'How apt the poor are to be proud'
- Shakespeare
Twelfth Night
.....
Thoatta Jegan comment :
"Sir, around 2005-2006.. I toured Kerala.. In Thekkadi, I saw a marriage in a vinayakar temple.. மொத்தம் 4 பேர் தான்.. பையன், பையன் அப்பா, பொண்ணு, பொண்ணோட அம்மா.. மலையாளி.. ஒரு நிமிசத்துல கல்யாணம்.. கலங்கிட்டேன்.. கழுத்துல மாலை.. வெறும் திருநீறு வச்சுவிட்டான்.. அதான் கல்யாணம்.. மாத்தி மாத்தி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.. பார்த்த உடனே, கலங்கிட்டேன்.. உலகம் சுற்றுவதே நின்னது போல இருந்துச்சு.. மலை வாழ் மக்கள் போல இருந்தாங்க.. என்னடா இவ்வளவு தானா கல்யாணம், இதுக்கேன் இவ்வளவு ஆடம்பரம்னு got stunned.. அப்ப நூறு ரூபா தாள்கள் தான் அதிகம்.. கூப்பிடாத விருந்தாளியா 500/- கொடுத்தேன்.. அப்ப அது அதிகம் தான்.. அவங்களும் கலங்கிட்டாங்க.. அந்த பையனுக்கும் என்னை விட சின்ன வயசு தான் இருக்கும்.. இதை பார்த்தவுடனே அது நியாபகம் வந்திடுச்சு.. A great beauty is in simplicity..."
ராஜநாயஹம் பதில்:
அருமை, பிரமாதம் ஜெகன்.
இந்த புதுப்பெண் புது மாப்பிள்ளை இதுவே தான். நீங்கள் எழுதியபடி தான்.
விரித்து எழுத விருப்பமில்லாமல் மூன்றே வரிகளாக.
வாழ்த்தி ஆசி வழங்கிய போது கண் கலங்கி குரல் தழுதழுத்தது.
ஐம்பது ரூபாய் தான் கொடுக்க முடிந்தது.
இருபது வருடங்களுக்கு முன் நீங்கள் கொடுத்த 500 ரூபாய் பெருந்தொகை.
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.