JK அற்புதமான கமல் ஹாசன் படங்கள் மகாநதி, குருதிப்புனல் இரண்டிற்கும் கலை இயக்குநர்.
விஜயகாந்த் உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் ஆகியவற்றிற்கும் ஆர்ட் டைரக்டர்.
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து
கலை இயக்கம் இவரே.
ராசுக்குட்டி படத்திற்கு ஆர்ட் டைரக்டராக 1992ல் கவுண்டன் புதூரில் ஷூட்டிங் போது
ஜேகே சந்திப்பு பசுமையாக நினைவில்.
கலகலப்பாக உரையாடல். வரைந்து கொண்டே தான் பேசினார்.
2017ல் லலித் கலா அகாடமியில் மீண்டும் பார்த்தேன்.
ராஜநாயஹம் எழுத்தின் அபிமானி.
ஓவியக் கலைஞர் JK
வரைந்த ஓவியம்
"Life line"என்ற தலைப்பில் 2020 ல்
JK வரைந்த (60" x40")acrylc ஓவியம்
வாழ்க்கையை சர்க்கஸ் போராட்டமாக சித்தரித்து..
குடும்ப வாழ்வில் குறுக்கிடுகிற
Extra marital affair ஐ
முன்னிறுத்தி.
அந்த
மூன்றாவது நபர் பாதையில் குறுக்கிடுவாளா? அல்லது தன் வழியில் போய் விடுவாளா? என்கிற
பரபரப்பை ஏற்ப்டுத்தும்
ஒவியம் ..
இடதுபுற
கூடாரத்தின் மேல்
கூரை அருகே ஜோடிகள் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்கிற
Symbolic Tripiz game..
அரங்கில்
வரிக்குதிரை..புலி
என்கிற யதார்த்த
Symbol.
பதைபதைக்கிற கோமாளி..
குரங்கு
என dramatic elements
என்பதாக உருவாக்கப்பட்ட
படம் இது...
Pl enjoy...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.