Share

Mar 7, 2024

அல்ஃபோன்ஸோ தாஸ்

ஓவிய பேராசிரியர் அல்ஃபோன்ஸோ தாஸ்
கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. 
2017ல் வீரசந்தானம் மறைந்த அன்று அவருக்கு அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி வீட்டு முன்னால் நின்று கொண்டு இருந்தார். 
நான் ஒரு ஆட்டோ பிடித்து அவரை அனுப்பி வைத்தேன். 
ஆட்டோகாரரிடம் பணம் நான் கொடுக்க ரொம்ப முனைந்த போது பிடிவாதமாக ‘நீங்கள் கொடுக்க வேண்டாம், ராஜநாயஹம்’ என்று மறுத்து விட்டார். 

அல்ஃபோன்ஸோவும் மறைந்து விட்டார்.

லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P. கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சிக்கு                                   ந. முத்துசாமி, நடேஷ் இருவருடன் நானும் போயிருந்தேன்.


1992ல் ராசுக்குட்டி ஷுட்டிங் போது கவுண்டன் புதூரில் சந்தித்த ஆர்ட் டைரக்டர் JKயை லலித் கலா அகாடமியில் மீண்டும் சந்தித்தேன். மறக்கவே முடியாத ஆளுமை.

அங்கே அப்போது வீர சந்தானமும் வந்திருந்தார். 

முத்துசாமி பழைய நினைவில் மூழ்கி 'அப்பல்லாம் இங்க ரெண்டு பேர் படுத்துக்கிடப்பாங்க' என்று சொன்ன போது,
 ஓவியர் வீரசந்தானம் "அந்த ரெண்டு பேர்ல ஒர்த்தன் நான் தான்"

சந்தானம் இப்படி சொன்ன போது நல்ல கலகலப்பு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.