மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க. எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "
ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்தியாவின் முதல் ஜனாதிபதி பற்றி சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன். பாபு ராஜேந்திர பிரசாத் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம். சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம்.
அருந்ததி ராய் God of Small things நாவலில் Anecdote:
தகப்பனுக்கு இரட்டை குழந்தைகள். பீட் Optimist. ஸ்டுவேர்ட் Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது.
அப்பா ஸ்டூவேர்ட் க்கு வாட்ச், சைக்கிள் பரிசு கொடுத்தார். பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை. சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது. அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான்.
பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார். சரி.பீட் என்ன செய்கிறான். அப்பா அவன் ரூமுக்கு போன போதுஅந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட். இவர் ஆர்வத்துடன் 'பீட்,என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு உற்சாகமாக பீட் சொன்னான் 'குதிரையைத் தேடிகொண்டிருக்கிறேன் அப்பா. இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம் குதிரை இருக்கும் தானே?'
கிரா பேசும்போது நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார். "குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா"
"முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு.மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்" - வெங்கட் சாமிநாதன்
"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள்என்னால் வர முடியாது" - நகுலன்
சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில் ஜோக்: சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள்.
சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்னுமே இல்லையே. உனக்கு எதற்கு ப்ரா?'
சர்தாரிணி ' யோவ், போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர். நான் ஏதேனும் கேட்டேனா?'
"A lot of lies are going around the world and the worst of it is, half of them are true" - Winston Churchill.
இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான்.
2008 post
மீள் பதிவு
.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.