மதுரை பிரபல வழக்கறிஞர் பா. அசோக்:
"R.P. ராஜநாயஹம் அவர்களின் நான்கு நூல்கள்....
தழல் வீரம்,
காரணச்செறிவு,
கிளர்ந்தெழும் தாபம்,
அதி மதுர மதுர
இசை, இலக்கியம், வாசிப்பு, சினிமா, அரசியல், அனுபவம் என தனது பல்துறை சான்றாண்மையை பந்தி படைத்துள்ளார்...
ஒவ்வொரு நூலாக விமர்சித்து எழுத வேண்டும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வகை.
இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் அண்ணன் Prabhu Rajadurai யின் நூல் " நும்மினும் சிறந்தது நுவ்வை" யின் ஒரு கட்டுரையில் சேக்ஸ்பியரின் வரிகளை ராஜநாயஹம் சார் எடுத்தாண்ட விதத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்...
அது ஏன் ராஜநாயஹம் என "ஹம் " என்றால் கவிஞர் பிரமிள் சூட்டியது...
தனது ஆசான்கள் மீது
அத்தனை மதிப்பு..
இன்றும் மாறவில்லை...
அசோகமித்திரனாகட்டும்,லாசரா, கி.ரா. பிரமிள், தி.ஜானகிராமன், என இன்னும் பலரின் எழுத்துக்களை ஆதியோடுயந்தமாய் அறிந்தவர்...
கலைஞர் டிவியில் தொலைக்காட்சியில் தொடர்ந்து 120 வாரங்கள்
" சினிமா எனும் பூதம் "
என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் பேசுகிறார்.
எதை பற்றியும் பேசினாலும்
யாரைப்பற்றி பேசினாலும்
கையில் ஒரு குறிப்பு இராது...
மடமடவென அருவி போல செய்திகள் கொட்டும்.
இவரது தகவல்களை களவாடி உயர்ந்தோர் பலருண்டு...
ஆனாலும் வற்றா அறிவுக்கேணி.
எத்தனையோ உயரங்களுக்கு
போக வேண்டியவர்...
காலம் ஒரு நாள் இந்த பிதாமகனை
உயர்த்திப்பிடிக்கும்...
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்கள். தவறவிடாதீர்கள்.
Versatility....
thy synonym is
R.P. Rajanayahem.."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.