1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன்
" இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர்.
ஏகலைவர்களாலே கூட உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர்.
சிகண்டிகளால் அம்புத்துளை பட்ட பீஷ்மர். "
இன்னமும் தி. ஜானகிராமனுக்கு இழிவு, சிறுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
'ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு என்று பெருகினால், உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு என்று தான் பெருகுமாம்'
தி. ஜானகிராமன் இப்படி 'அடுத்த' சிறுகதையில் சொல்கிறார்.
Means are limited. Wants are unlimited.
"என்ன செய்தென்ன? காசை கண்ணால் பார்க்க முடியவில்லை. இண்டெலக்சுவல் என்று இறக்கை முளைத்த இலவ விதை போல ஒரு பட்டம் தான் மிஞ்சிற்று"
இறக்கை முளைத்த இலவ விதை! keen observation.
தி. ஜானகிராமன் 'மாடியும் தாடியும்' சிறுகதையில்.
"முயற்சி இருக்கிற புருஷ சிம்மத்தை லட்சுமி வலிய வலிய வந்து இறுகத் தழுவிக்கத்தான் செய்வா. எத்தனை சக்தி வந்து அவளைப் பிடிச்சு இழுத்தாலும் அவ பிடிச்ச பிடியை விடுவாளோ! "
மத்திய அரசு விவசாய மசோதா
கடும் சர்ச்சைக்குரிய விஷயம்.
'விவசாயியும் கார்ப்பரேட்களும்'என்று கலாப்ரியா கவிதை ஒன்றுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஒத்துக்குவாரோ, மாட்டாரோ?
அந்த கவிதை
'கற்கள் பொறுக்கிப்
போட்டது
காகம்
கழுகு வந்து
நீரருந்திப் போயிற்று'
பிரமிள் கவிதை - 'தன் போக்கில் போகிறது
தான் தோன்றி சரித்திரம்'
'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை '
இந்த பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் போதே
' அவள் அப்படித்தான் ' படத்தில் காட்சிப் படுத்திய விதம் பற்றி - ஆற்றைக் காட்டாமல் கடல் காட்சியாக வரும். Visual error.
நாடகத்தில தெருவுக்கு நடுவே சாக்கடைய எப்படி காட்சிப் படுத்த முடியும்? சினிமால அப்படியில்லையே.
ஆற்றில் நீரோட்டம் இல்லையென்றால்
தண்ணீர் இல்லாத, வற்றிப் போன
மணல் மிஞ்சிய ஆற்றை காட்ட வேண்டும்.
அஸ்வ மேத யாகம் தெரிந்தது தான்.
' புருஷ மேத யாகம்' விபரம் என்னவென்றால்
நரபலியாமே?
டி. வி. முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது
ஓடிக்கொண்டிருக்கிற சேனலில்
எம். ஜி.ஆர் உருக்கமாக பேசும் வசனம்
" அடுத்தவங்களுக்கு நிழல் கொடுக்கணும்னா
மரம் வெய்யில்ல காஞ்சி தான் ஆகணும் "
வாத்யார். எவ்வளவு எளிமையா ரசிகனுக்கு போதிக்கிறார். வசனம்லாம் டயலாக்கா பேசுறார்.
இன்னொரு சேனலில்
வெண்ணிற ஆடை மூர்த்தி
" என்னடா உத்துப்பாக்கற"
" இந்த எலும்புக் கூடு ஆம்பளயா பொம்பளயான்னு பாக்குறேன் "
வெண்ணிற ஆடை மூர்த்தி எலும்புக்கூடை உற்றுப்பார்த்த பின்
" கண் கூடா எதுவுமே தெரியலயேடா"
அடுத்த சேனலில் சந்தானம் அட்வைஸ்
"லூஸ் மோஷன் மாதிரி பின்னால போக ஆசைப்படாதடா"
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.