இசைத்திறன் தான் பாடலுக்குத்தேவை. பக்தி இல்லாமல் தடையின்றி பிரமாதமாக பாட முடியும்.
பக்தியில்லாமல் சாஸ்த்ரீய சங்கீதத்தை முங்கி மூழ்கி ரசிக்கவும் முடியும்.
'பக்தியிடமிருந்து கர்நாடக இசைக்கு விடுதலை வேண்டும்.' பல கால முழக்கம் இது.
பக்தி தவிர்த்து மற்ற எல்லா ரசங்களுக்கும் க்ளாசிக்கல் இசையில் இடமிருக்கிறது.
T. M. கிருஷ்ணா மட்டுமல்ல. இன்னொரு மிக மிக பிரபல சங்கீத பாடகருக்கும் இறை நம்பிக்கை கிடையாது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் அவருடைய கச்சேரி துவங்குவதற்கு முன் மூல விக்கிரகம் சேவிக்க கிளம்பும் சம்பிரதாயத்தின் போது அந்த பிரபல பாடகரைக்காட்டி 'இவருக்கே தெய்வ நம்பிக்கை கிடையாது' என்று பிராமண சமூகப் பெரியவர் வெளிப்படையாக சொன்னதை நேரடியாக கேட்ட போது அவர் பற்றி கேள்விப்பட்டது உண்மை தான். ஊர்ஜிதமாய் புரிந்தது.
பாடகரிடமே இதைக் கேட்ட போது இணக்கமாக எனக்கு பதில் "இதையெல்லாம் சொல்லிண்டிருப்பாளா?"
கண்ணை விரித்து அழுத்தமாக.
இசைத்திறன் மிக்க அற்புத பாடகர் "நன்னு பாலிம்ப்ப" அங்கே மோகன இசை மழையாக கேட்போர் நெஞ்சம் விம்ம உருக்கம் பொங்க பிரமாதமாக அங்கே பாடினார்.
சாஸ்த்ரீய சங்கீதத்தின் கி. ரா.விடம் பேசும் போது நாசுக்காக எச்சரித்தார் " கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை வெளியே தெரியும்படி காட்டிக் கொள்ளக் கூடாது."
நாத்திகத்திற்கெதிரான Social stigma.
இறை நம்பிக்கை இல்லாமல் கர்நாடக சங்கீத ரசிகனாக பல ஆண்டுகளாக தியாகப்பிரும்மம் கீர்த்தனைகளை யெல்லாம் ஆனந்த நெகிழ்ச்சியுடன் எப்போதும் ஆத்திகர்கள் போலவே
தாராளமாக ஏராளமாக கேட்க முடிகிறது.
நம்பாதார்க்கும் சங்கீத செளபாக்யம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.