Share

Mar 31, 2024

ராஜநாயஹம் நான்கு நூல்கள் - வழக்கறிஞர் பா. அசோக்

மதுரை பிரபல வழக்கறிஞர் பா. அசோக்:

"R.P. ராஜநாயஹம் அவர்களின் நான்கு நூல்கள்....
தழல் வீரம், 
காரணச்செறிவு,
கிளர்ந்தெழும் தாபம்,
அதி மதுர மதுர

இசை, இலக்கியம், வாசிப்பு, சினிமா, அரசியல், அனுபவம் என தனது பல்துறை சான்றாண்மையை பந்தி படைத்துள்ளார்...

ஒவ்வொரு நூலாக  விமர்சித்து எழுத வேண்டும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வகை. 

இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் அண்ணன் Prabhu Rajadurai யின் நூல் " நும்மினும் சிறந்தது நுவ்வை" யின் ஒரு கட்டுரையில் சேக்ஸ்பியரின் வரிகளை ராஜநாயஹம் சார் எடுத்தாண்ட விதத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்...

அது ஏன் ராஜநாயஹம் என "ஹம் " என்றால் கவிஞர் பிரமிள் சூட்டியது...

தனது ஆசான்கள் மீது 
அத்தனை மதிப்பு.. 

இன்றும் மாறவில்லை...

அசோகமித்திரனாகட்டும்,லாசரா,  கி.ரா.  பிரமிள், தி.ஜானகிராமன்,  என இன்னும் பலரின் எழுத்துக்களை ஆதியோடுயந்தமாய் அறிந்தவர்...

கலைஞர் டிவியில் தொலைக்காட்சியில் தொடர்ந்து 120 வாரங்கள்
 " சினிமா எனும் பூதம் " 
என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் பேசுகிறார். 

எதை பற்றியும் பேசினாலும் 
யாரைப்பற்றி பேசினாலும் 
கையில் ஒரு குறிப்பு இராது...

மடமடவென அருவி போல செய்திகள் கொட்டும். 

இவரது தகவல்களை களவாடி உயர்ந்தோர் பலருண்டு...

ஆனாலும் வற்றா அறிவுக்கேணி. 

எத்தனையோ உயரங்களுக்கு 
போக வேண்டியவர்...

காலம் ஒரு நாள் இந்த பிதாமகனை 
உயர்த்திப்பிடிக்கும்...

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்கள். தவறவிடாதீர்கள்.

Versatility.... 

thy synonym is 
R.P. Rajanayahem.."

Mar 30, 2024

தி. ஜா. 'அன்ன விசாரம்' சிறுகதை


ரயில் பிரயாணம் வருகிற 
தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 
'சிலிர்ப்பு',
 'மறதிக்கு... '
' அக்பர் சாஸ்திரி' எல்லாம் கண் முன் வந்து நிற்கிறது. 

ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு                 தி. ஜா. கதை 'அன்ன விசாரம்’ அட்டகாசம். 'கச்சேரி' தொகுப்பில் உள்ள கதை. 

எழுபது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 

எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 

மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 

ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 

' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '

' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'

'உப்புமா, தோசை, பொங்கல், வடை எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய்.’

‘கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது’

‘ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '

' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். நெய்யைக் கக்கும் '

வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும்
 அந்த கிழப் பயணி. 

ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு அந்தப் பெரியவர் சொல்கிறார் : “அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு"

DINNER! MUSIC!
விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது. Dinner Items. இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 
அப்படி ஒரு விருந்து. 
பர் லாகர் க்விஸ்ட் எழுதிய "THE DWARF" நாவலில். 
இந்த ஸ்வீடிஷ் நாவலை தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்
' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.

Music with dinner is an insult
 both to the cook and the violinist.
- G. K. Chesterton 
Dinner. Dinner Items. 
Music. 

விருந்து, இசை இரண்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸ் மிக அழகாக தன்னுடைய 'The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார். உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 

தி.ஜானகிராமன் இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார்.

..‌.
...

Lion R.P. RAJANAYAHEM

திருப்பூரில் 2009 - 2010
லயன்ஸ் கிளப் மெம்பராக.

(உத்தியோகம் -  Assistant merchandiser in Tubeknit fashions. பெருமையின்றி சிறுமையில் அரசன்.)

பால்கி திருப்பூரில் மறக்கவே முடியாத அற்புதமான மனிதர்.
நெறய்ய மலையாளம் கலந்த அவருடைய அழகான, சுவையான மழலைத் தமிழ் இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பாலகிருஷ்ணன் லயன்ஸ் கிளப் ஆஃப் டாலர் சிட்டியின் பிரசிடெண்ட். 

ராஜநாயஹம் தேவை என இந்த லயன்ஸ் க்ளப்பில் மெம்பராக்கியவர் பால்கி தான்.

Mar 29, 2024

அல்லேலூயா பொம்பளயோட ரீலு மாதிரியே

இன்னாது இது? 
மண்டயில மரம் மொளக்கிது..

கொஞ்ச நாள் முன்ன அல்லேலூயா பொம்பளயோட  ரீலு மாதிரியே..
அதே அதே

ஆனந்தன் அம்பானியான் கதயிலயும் 
வீடு வர்து, காரு வர்து.

எல்லாம் அமஞ்சிகர்து தான் வாச்சிகர்து தான்.


https://www.facebook.com/share/p/g5nc6BJYzjq6rvdP/?mibextid=oFDknk

Mar 28, 2024

123rd, 124th Episodes - Cinema enum Bootham

123rd, 124th Episodes of R.P. Rajanayahem

சிதம்பரம் ஜெயராமன்

திருச்சி லோகநாதன்

முரசு டிவியில் 

07. 03. 2024 ஞாயிற்றுக்கிழமை

14. 03. 2024  ஞாயிற்றுக்கிழமை 

காலை எட்டரை மணிக்கு

.....

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

விசார பந்து


அடையார் சாஸ்திரி நகர் வீட்டுக்கு குடி போக (April 15) இன்னும் நாட்கள் இருக்கிறது.

அந்த பகுதி சம்பந்தப்பட்ட பழைய நினைவுகள்.

1989.

பேரறிஞர் அண்ணாவின் கல்லூரி வகுப்புத் தோழர் மணிக்கொடி சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம். மறக்கவே முடியாத அற்புதமானமான மனிதர். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு பல செய்தவர்.

அவருடன் அஷ்ட லட்சுமி கோவில் போகும் போது தெருவொன்றில் தூரத்தில் வீட்டின் முன் முதியவர் நிற்பதை காண முடிந்தது. வருவது விஸ்வேஸ்வரம் தான். உற்று சில விநாடிகள் பார்த்து..அடையாளம் கண்டு கொண்டு விருட்டென்று வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டார்.

விஸ்வேஸ்வரம் " அந்த பெரியவர் எங்கள் சொந்தக்காரர். இந்த தெருவில் வருவதை பார்த்து விட்டால் உடனே வீட்டுக்குள் போய் ஒளிந்திருந்து ரகசியமாக கவனிப்பார். மாமியிடம் கவன ஈர்ப்பு செய்வார். 'விஸ்வேஸ்வரம் நம்ம வீட்டுக்கு அழைக்காமலே வர வேண்டும். உள்ளே வருகிறானா பார்ப்போம். பிரியம், மரியாதை இருந்தால்
 வராமல் போவானோ' 

அந்த வீடு வந்ததும் மெதுவாக திரும்பி பார்த்தேன். பெரியவர் தன் மனைவியுடன் ஹாலை ஒட்டிய அறை உள்ளிருந்து ரகசியமாக பார்ப்பது தெரிந்தது.

வீட்டைத் தாண்டியதும் சொந்தக்காரர்களுக்கெல்லாம் போன் போட்டு ' விஸ்வேஸ்வரம் எங்க ஆத்த தாண்டி போறதை நானும் இவளும் இப்ப தற்செயலா பாத்துட்டோம். ஆத்துக்குள்ள வராமலே போறான். கண்ணு தெரியறதில்ல. இதெல்லாம் நன்னாருக்கா..' என்பார்.

அஷ்ட லட்சுமி கோயில் போய் விட்டு திரும்பியதும் சிட்டி சொன்னார் ' ஏன் எங்காத்துக்கு வராம விஸ்வேஸ்வரம் போறான்ன்னு அவர் பிராது வாசிக்கிறார்'. 


லஸ் கார்னரில் பஜாரில் முனைப்பகுதியில் இருந்த கடையில் குண்டான மனிதர் கல்லாவில். அவரைக் காட்டி விஸ்வேஸ்வரம் " இவன் என் க்ளாஸ் மேட். அப்படியே அச்சு அசலாக அவனுடைய அப்பா மாதிரியே இருக்கான். இப்படியே தான் அவரும் இதே கடையில ஒக்காந்திருப்பார். எனக்கு எப்பவுமே ஒரே ஆள் தான் ஐம்பது வருஷமா இந்த கடையில் ஒக்காந்திருக்கிற மாதிரி தோணுது."

Mar 27, 2024

சங்கீத சௌபாக்கியமே

 

இசைத்திறன் தான் பாடலுக்குத்தேவை. பக்தி இல்லாமல் தடையின்றி பிரமாதமாக பாட முடியும். 
பக்தியில்லாமல் சாஸ்த்ரீய சங்கீதத்தை முங்கி மூழ்கி ரசிக்கவும் முடியும். 

'பக்தியிடமிருந்து கர்நாடக இசைக்கு விடுதலை வேண்டும்.' பல கால முழக்கம் இது. 

பக்தி தவிர்த்து மற்ற எல்லா ரசங்களுக்கும் க்ளாசிக்கல் இசையில் இடமிருக்கிறது.

T. M. கிருஷ்ணா மட்டுமல்ல. இன்னொரு மிக மிக பிரபல சங்கீத பாடகருக்கும் இறை நம்பிக்கை கிடையாது. 

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் அவருடைய கச்சேரி துவங்குவதற்கு முன் மூல விக்கிரகம் சேவிக்க கிளம்பும் சம்பிரதாயத்தின் போது அந்த பிரபல பாடகரைக்காட்டி 'இவருக்கே தெய்வ நம்பிக்கை கிடையாது' என்று பிராமண சமூகப் பெரியவர் வெளிப்படையாக சொன்னதை நேரடியாக கேட்ட போது அவர் பற்றி கேள்விப்பட்டது உண்மை தான். ஊர்ஜிதமாய் புரிந்தது.

பாடகரிடமே இதைக் கேட்ட போது இணக்கமாக எனக்கு பதில் "இதையெல்லாம் சொல்லிண்டிருப்பாளா?" 
கண்ணை விரித்து அழுத்தமாக.
இசைத்திறன் மிக்க அற்புத பாடகர் "நன்னு பாலிம்ப்ப" அங்கே மோகன இசை மழையாக கேட்போர் நெஞ்சம் விம்ம உருக்கம் பொங்க பிரமாதமாக அங்கே பாடினார்.

சாஸ்த்ரீய சங்கீதத்தின் கி. ரா.விடம் பேசும் போது நாசுக்காக எச்சரித்தார் " கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை வெளியே தெரியும்படி காட்டிக் கொள்ளக் கூடாது." 

நாத்திகத்திற்கெதிரான Social stigma.

இறை நம்பிக்கை இல்லாமல் கர்நாடக சங்கீத ரசிகனாக பல ஆண்டுகளாக தியாகப்பிரும்மம் கீர்த்தனைகளை யெல்லாம் ஆனந்த நெகிழ்ச்சியுடன் எப்போதும் ஆத்திகர்கள் போலவே 
தாராளமாக ஏராளமாக கேட்க முடிகிறது.

நம்பாதார்க்கும் சங்கீத செளபாக்யம்.

Mar 21, 2024

சென்னையில் ஏழாவது வீடு

சென்னை வந்து ஒன்பது வருடங்கள் கூட ஆகவில்லை.
ஏழாவது வீடு மாறுகிறோம்.

13. 09. 2015 ல் சென்னை வந்தோம். 
வருகிற ஏப்ரல் பதினைந்தில் வேறு வீடு.
மாம்பாக்கத்தில் இருந்து அடையார்.

அடையார் சாஸ்திரி நகர் பன்னிரண்டாவது தெருவில் குடியேறுகிறோம்.

Mar 20, 2024

தோழர் நல்லகண்ணு


அன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக இடைதேர்தல் பிரச்சாரம் சூடு பரத்திகொண்டிருந்தது. புத்தூர் நாள் ரோட்டில் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம். நாடோடி பாடல்கள் நிகழ்ச்சியும் இருந்ததால் அங்கே போனேன். பாடல்களை கேட்டுக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

 கார் வந்தது. தோழர் ஆர் .நல்லகண்ணு இறங்கினார்.
தொடர்ந்து தோழர் வீ.ந.சோமசுந்தரம் இறங்கினார். சோமசுந்தரம்  பார்த்து விட்டார்.
உடனே  கையைப் பிடித்து அழைத்து தலைவர் நல்லகண்ணுவிடம்
" இவர் தான் R.P. ராஜநாயஹம்" என்று உணர்ச்சி பூர்வமாக என்னைப்பற்றி பெருமைபடுத்தி கொஞ்சம் சொல்லி,
தலைவர் நல்லகண்ணுவும் 
"R.P. ராஜநாயஹம் " என்று  சொல்லி புன்னகைத்தார்.

இதோடு முடியவில்லை. தலைவர் அருகிலேயே என்னை தோழர் சோமசுந்தரம் வற்புறுத்தி உட்கார வைத்துவிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நாடோடி பாடல் நிகழ்ச்சி அதன் பின்னும் நடந்தது. வேறு பல கட்சி அரசியல்வாதிகள் பலரும் அங்கு
வந்த போதும் என்னை எழ விடவில்லை.

ஜீன்ஸ் பாண்ட், டி ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தேன். 
பாதுகாப்பு போலீஸ் அதிகாரி
"யார் இவர்?"- விசாரித்துக்கொண்டிருந்தார்.
ஜே ஜே டிவிகாரர்கள் படம் பிடித்துக்கொண்டார்கள்.

இடையில் நல்லகண்ணு கண்ணில் 
சிறு பூச்சி விழுந்து விட்டது. ஊதி விட்டேன்.

நாடோடி பாடல்கள் முடிந்து தலைவர் மேடையேறிய போது தான் வீ.ந.சோமசுந்தரம் சொன்னார் " இந்த இடத்தில் அவருடன் உட்கார தகுதியானவர் நீங்கள் மட்டுமே. வேறு எவனாவது அவர் அருகில் அமர்ந்துவிடக்கூடாது என்று தான் உங்களை அமர்த்தினேன் "

.....

மீள் பதிவு 2008

121, 122 Episodes of R.P. Rajanayahem

121, 122 Episodes of R.P. Rajanayahem

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்

முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டரை மணிக்கு

வாணி ஜெயராம்

ஸ்வர்ணலதா

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

.......

Mar 15, 2024

Aruldoss Jeevakani on R.P. Rajanayahem


Retd Vice Principal of American college
 Arul doss Jeevakani  on 
R.P. Rajanayahem:

"R.P. Rajanayahem - The American College 'Hero' of our Time. 
Very extraordinary talented person.
 A remarkable Alumnus of The American College."


மணல் கோடுகளாய்..

Mar 14, 2024

வெளி வர இருக்கும் புதிய நூல்கள்

R P. ராஜநாயஹம் 
அடுத்து வெளி வர இருக்கும் புதிய நூல்கள்

1.டிசம்பர் - மார்கழி - ஜனவரி 

2. தித்தித்தது

ஜெய்ரிகி வெளியீடாக


Mar 13, 2024

அர்த்தராத்திரி அரசியல் குதூகலம்




 நடிகர் சந்திரசேகர் "அரசியலில் உங்க லட்சியம் என்ன?" 

சரத்குமார்: "இந்திய பிரதமர் ஆகி விடவேண்டும். இது சரத்குமார் லட்சியம்"

நடிகர் சந்திரசேகர்: என்னங்க சரத்! இதெல்லாம் ரொம்ப ஓவர். நடக்கவே முடியாத ஆசைய போய் லட்சியம்னு சொல்றீங்க. 

 பிரதமராகி விடுகிற பெருங்கனவு பற்றி இப்படி எப்பயோ சரத்குமார் சொன்ன போது 'தத்து பித்து உளறல்' என்று  கேட்கிற யாருக்குமே தோன்றுவது தான் இயல்பு. 

பா.ஜ. க. வில கட்சிய நுழைத்தது சரத்குமாரின் ராஜதந்திரம். 
தன் பெருங்கனவை சாத்தியமாக்கும் முயற்சியை தேசீய நோக்கில் மேலெடுத்திருக்கிறார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

மருமகனிடம் மாமியார் எதிர்பார்ப்பு - 'முதல்வர் சரத்குமார்' -  நிச்சயமாக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்.
' அத்த, என் ரேஞ்சே வேற' 

'கட்சியில் தொண்டர்கள் ரொம்ப வற்புறுத்துவதால் ராதிகாவிற்கு பதவி கொடுத்தேன்' 
கட்சிய பாஜகவில் கரைக்க ராதிகாவைத் தானே எழுப்பி கேட்க முடியும்? பொறவு..?

ஓபிஎஸ், டிடிவி பின்னிரவில் தானே பாஜகவுடன் கூட்டணி பேச வேண்டியிருக்கிறது.

Mar 11, 2024

A marked Change in form

கல்லூரியில் மாணவராக 
கவியரங்கத்தில் உணர்ச்சி பொங்க கண்களை விரித்து, கோபமாக பெருங்குரலெழுப்பி ஆவேசமாக கூவினார் : 
" எங்களது குரலோசை இமயத்தின் பின்னே ஒலிக்கும்.
 எங்களது புரட்சியிலே காந்தியின் கைத்தடியும் அரிவாளாய் மாறும்" 

BSNL ல் அடக்கமான அதிகாரியாக 
பணி புரிந்து 
அமைதியாக ஓய்வு பெற்றார்.

Mar 10, 2024

Counseling Psychology therapy



கஞ்சா, குடி பிற போதையில்
பெரு ரகளை, 
பெரும் போதையில் பெண்களிடம் அத்து மீறும் நபர்கள் 

"போதயில  என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது"

" நானெல்லாம் போதயாயிட்டா அசிங்கமான ஆளு"

 "என்னெல்லாம் போதயில பாத்தா  யாராயிருந்தாலும் ரொம்ப மிரண்டு போயிடுவானுங்க.  போதயில நான் ஜீரணிக்கவே முடியாத விகாரமான ..."

A mighty councelling psychology therapy to the above dialogues of drunkards, dope and drug addicts

" போதயில என்ன பண்ணுவ? போதயில என்னா அசிங்கம் பண்ணிடுவ நீ? விகாரமா என்னடா பண்ணிடுவ? சுன்னிய ஊம்பிடுவியா. பொச்சு காட்டுவியா"

போத கேசு ரிப்ளை" யோவ் என்னா? இஷ்டத்துக்கு வார்த்தய விடுற? பொட்டன்னு நெனச்சிட்டியா?"

"நிதானமில்லாம போதயில ஊம்பிடக் கூடாது, போதயில தெரியாம பொச்சி காமிச்சிடக்கூடாதுன்னெல்லாம் உஷாரா இருப்பீல்ல. அதே மாதிரி தான் போதயில எந்த ரகளையும் பண்ணவே கூடாது. 
ஏன்டா போதயின்னா நெத்தியில சுன்னி மொளச்சிடுமா?மிரட்டாம போடா டேய்"

.....

Manjummel cheerful, rejoiceful வெகுளி boys 
நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் துறுதுறுவென செய்யும் சேட்டைகள் Lovely. இளைஞர்கள் கலகலப்பு பிரமாதம். ரசிக்கும்படியான சுவையான ரகளை.
34 வருடங்களுக்கு முன் பார்த்த No 20 Madras Mail படத்தில் மோகன்லால் ட்ரெயினில் நண்பர்களுடன் அடிக்கும் வெள்ளந்தியான லூட்டி நினைவுக்கு வந்தது.

Survival movies போதும்.
இனிமேல் பார்க்க சலிப்பு வருமோ?

Serial Killer movies பார்க்க பொறுமையிழந்து விட்ட  அதே மனநிலை இந்த Survival drama movies விஷயத்திலும் உண்டாகிறது

Some other Survival drama movies 

மலையாள படம் Helen 

மகன் கீர்த்தியோடு   'ஹெலன்' பார்க்கும் போது 
டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away 
ஞாபகம் வந்தது. 

Desperate attempt to survive. 

கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான். 

ஹெலன் படத்தின் எலி, 

காஸ்ட் அவே படத்தின் வாலி பால். 

Personified friend and only companion. 

வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட் 
பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான். 

எலி, வாலிபால்  இழந்து 
ஹெலனும், சக் நோலன்ட்டும் 
தவிக்கும் நிர்ப்பந்தம்.

.

AGEISTS & DISLIKE

Indians are 'Ageists'

ஒருவர் வயது 75. 
மற்றவர் 74.

இருவர் பஞ்சாயத்துக்கு ஆளாக சிக்கினேன்.

"ராஜநாயஹம் சார் நீங்க சொல்லுங்க.  எங்கள் இருவரில் யார் தோற்றம் பார்க்க அதிக வயதானவராக தெரிவது?"

" சமிக்கனும். இப்பல்லாம் மூளையை கசக்கிப் பிழிய முடியறதேயில்ல. மூளைக்கு வேல கொடுத்தாலே கிறுகிறுன்னு வந்துடுது. என்னய விட்ருங்களேன்"

.

A strong dislike 

2016 
இளைய மகன் அஷ்வத் வேலை இன்டர்வியூக்காக பஸ்சுக்காக 
மவுண்ட் ரோடு எல்.ஐ.சி பில்டிங் எதிரே 
பஸ் ஸ்டாப்பில் காத்து நிற்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரர் 
"சார், கொஞ்சம் அந்தப்பக்கம்
 திரும்பிக்றீங்களா,  நான் சாப்பிட்றப்ப யாராவது என்னய பாத்தா உடனே எனக்கு வாமிட் வந்துடும்"


.

Mar 8, 2024

ஓவியக் கலைஞர் JK

JK அற்புதமான கமல் ஹாசன் படங்கள் மகாநதி, குருதிப்புனல் இரண்டிற்கும் கலை இயக்குநர்.

விஜயகாந்த் உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் ஆகியவற்றிற்கும் ஆர்ட் டைரக்டர்.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து
கலை இயக்கம் இவரே.

ராசுக்குட்டி படத்திற்கு ஆர்ட் டைரக்டராக 1992ல் கவுண்டன் புதூரில் ஷூட்டிங் போது
ஜேகே சந்திப்பு பசுமையாக நினைவில்.
கலகலப்பாக உரையாடல். வரைந்து கொண்டே தான் பேசினார்.

2017ல் லலித் கலா அகாடமியில் மீண்டும் பார்த்தேன்.

ராஜநாயஹம் எழுத்தின் அபிமானி.

ஓவியக் கலைஞர் JK
வரைந்த ஓவியம் 

"Life line"என்ற தலைப்பில் 2020 ல்
JK வரைந்த (60" x40")acrylc ஓவியம் 

வாழ்க்கையை  சர்க்கஸ் போராட்டமாக சித்தரித்து..

குடும்ப வாழ்வில் குறுக்கிடுகிற 
Extra marital affair ஐ
முன்னிறுத்தி.
அந்த
மூன்றாவது நபர்   பாதையில் குறுக்கிடுவாளா? அல்லது தன் வழியில் போய் விடுவாளா? என்கிற 
பரபரப்பை ஏற்ப்டுத்தும் 
 ஒவியம் ..

இடதுபுற
கூடாரத்தின் மேல்
கூரை அருகே ஜோடிகள் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்கிற 
Symbolic Tripiz  game..

அரங்கில் 
 வரிக்குதிரை..புலி
என்கிற யதார்த்த
Symbol. 
பதைபதைக்கிற கோமாளி..
குரங்கு
என dramatic elements 
என்பதாக உருவாக்கப்பட்ட
படம் இது...
Pl enjoy...

Mar 7, 2024

119 and 120 Episodes of R.P. Rajanayahem

119 and 120 episodes of
R.P. Rajanayahem
Cinema Enum Bootham

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்

பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன்

முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு
R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம் 

10.03. 2024 ஞாயிற்றுக்கிழமை 

17.03.2024 ஞாயிற்றுக்கிழமை 

..‌...

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

அல்ஃபோன்ஸோ தாஸ்

ஓவிய பேராசிரியர் அல்ஃபோன்ஸோ தாஸ்
கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. 
2017ல் வீரசந்தானம் மறைந்த அன்று அவருக்கு அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி வீட்டு முன்னால் நின்று கொண்டு இருந்தார். 
நான் ஒரு ஆட்டோ பிடித்து அவரை அனுப்பி வைத்தேன். 
ஆட்டோகாரரிடம் பணம் நான் கொடுக்க ரொம்ப முனைந்த போது பிடிவாதமாக ‘நீங்கள் கொடுக்க வேண்டாம், ராஜநாயஹம்’ என்று மறுத்து விட்டார். 

அல்ஃபோன்ஸோவும் மறைந்து விட்டார்.

லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P. கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சிக்கு                                   ந. முத்துசாமி, நடேஷ் இருவருடன் நானும் போயிருந்தேன்.


1992ல் ராசுக்குட்டி ஷுட்டிங் போது கவுண்டன் புதூரில் சந்தித்த ஆர்ட் டைரக்டர் JKயை லலித் கலா அகாடமியில் மீண்டும் சந்தித்தேன். மறக்கவே முடியாத ஆளுமை.

அங்கே அப்போது வீர சந்தானமும் வந்திருந்தார். 

முத்துசாமி பழைய நினைவில் மூழ்கி 'அப்பல்லாம் இங்க ரெண்டு பேர் படுத்துக்கிடப்பாங்க' என்று சொன்ன போது,
 ஓவியர் வீரசந்தானம் "அந்த ரெண்டு பேர்ல ஒர்த்தன் நான் தான்"

சந்தானம் இப்படி சொன்ன போது நல்ல கலகலப்பு.

A joke is a very serious thing - 1

A joke is a very serious thing - 1

அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை? குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான்.யார் எப்போ எழுதினது. தெரியாது.

1 . என்னம்மா சமையல் இது. சாம்பார் லே உப்பே இல்லை. ரசத்துலே புளி இல்லே.

போதும் நிறுத்துங்கப்பா. இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும் .

2 . என் மாமியார் தங்கமானவங்க..

இப்போ அவங்க எங்கே?

என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க.

3. தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு .. நம்ப முடியல

சாராயம் வித்ததா சொல்றதையா?

இல்ல. எட்டாவது படிச்சதா சொல்றதை.

4 .இது வரை ஒரு புறம்போக்கு நிலத்தை கூட தலைவர் தனக்குன்னு வச்சுக்கிட்டதில்லை

அப்படியா

ஆமாம். எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாரு.

5. பேரிச்சம்பழ வியாபாரியோட நெருங்கி பழகினது தப்பா போச்சுடி

ஏன்?

டேட்ஸ் தள்ளி போயிடுச்சிடி.

6. தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே

எப்படி

காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார்.

7.ஐயோ மன்னா தப்பா புரிஞ்சிகிட்டீங்க. முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்காக யுத்தத்தில் condom எல்லாம் பயன் படுத்த முடியாது.

8.மின்னலை பார்த்தா கண்ணு போய்டும். பார்க்கலைன்னா மின்னல் போய்டும்.
…..

2008 post

Mar 6, 2024

தான் தோன்றி சரித்திரம் R.P. ராஜநாயஹம்


 1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் 
" இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். 
ஏகலைவர்களாலே கூட உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர். 
சிகண்டிகளால் அம்புத்துளை பட்ட பீஷ்மர். "

இன்னமும் தி. ஜானகிராமனுக்கு இழிவு, சிறுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

'ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு என்று பெருகினால், உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு என்று தான் பெருகுமாம்' 
தி. ஜானகிராமன் இப்படி 'அடுத்த'  சிறுகதையில் சொல்கிறார். 
Means are limited. Wants are unlimited. 

 "என்ன செய்தென்ன? காசை கண்ணால் பார்க்க முடியவில்லை. இண்டெலக்சுவல் என்று இறக்கை முளைத்த இலவ விதை போல ஒரு பட்டம் தான் மிஞ்சிற்று" 
இறக்கை முளைத்த இலவ விதை!  keen observation. 

தி. ஜானகிராமன் 'மாடியும் தாடியும்' சிறுகதையில். 
"முயற்சி இருக்கிற புருஷ சிம்மத்தை லட்சுமி வலிய வலிய வந்து இறுகத் தழுவிக்கத்தான் செய்வா. எத்தனை சக்தி வந்து அவளைப் பிடிச்சு இழுத்தாலும் அவ பிடிச்ச பிடியை விடுவாளோ! "

மத்திய அரசு விவசாய மசோதா
 கடும் சர்ச்சைக்குரிய விஷயம். 
'விவசாயியும் கார்ப்பரேட்களும்'என்று  கலாப்ரியா கவிதை ஒன்றுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஒத்துக்குவாரோ, மாட்டாரோ? 
அந்த கவிதை 
'கற்கள் பொறுக்கிப்
போட்டது 
காகம் 
கழுகு வந்து 
நீரருந்திப் போயிற்று'

பிரமிள் கவிதை - 'தன் போக்கில் போகிறது 
தான் தோன்றி சரித்திரம்' 

'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை ' 
இந்த பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் போதே 
' அவள் அப்படித்தான் ' படத்தில் காட்சிப் படுத்திய விதம் பற்றி -  ஆற்றைக் காட்டாமல் கடல் காட்சியாக வரும். Visual error. 

நாடகத்தில தெருவுக்கு நடுவே சாக்கடைய எப்படி காட்சிப் படுத்த முடியும்? சினிமால அப்படியில்லையே. 

ஆற்றில் நீரோட்டம் இல்லையென்றால்
 தண்ணீர் இல்லாத, வற்றிப் போன 
   மணல் மிஞ்சிய ஆற்றை காட்ட வேண்டும். 

அஸ்வ மேத யாகம் தெரிந்தது தான். 
' புருஷ மேத யாகம்' விபரம் என்னவென்றால் 
நரபலியாமே?

டி. வி. முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது 

ஓடிக்கொண்டிருக்கிற சேனலில் 
எம். ஜி.ஆர் உருக்கமாக பேசும் வசனம் 
" அடுத்தவங்களுக்கு நிழல் கொடுக்கணும்னா 
மரம் வெய்யில்ல காஞ்சி தான் ஆகணும் "

வாத்யார். எவ்வளவு எளிமையா ரசிகனுக்கு போதிக்கிறார். வசனம்லாம் டயலாக்கா பேசுறார். 

இன்னொரு சேனலில் 
வெண்ணிற ஆடை மூர்த்தி 
" என்னடா உத்துப்பாக்கற"
" இந்த எலும்புக் கூடு ஆம்பளயா பொம்பளயான்னு பாக்குறேன் "
வெண்ணிற ஆடை மூர்த்தி எலும்புக்கூடை உற்றுப்பார்த்த பின்
" கண் கூடா எதுவுமே தெரியலயேடா"

அடுத்த சேனலில் சந்தானம் அட்வைஸ் 
"லூஸ் மோஷன் மாதிரி பின்னால போக ஆசைப்படாதடா"

......

A joke is a very serious thing - 2


A joke is a very serious thing -2

மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன். கேட்டிங்களா?
கணவன் : ஏன் என்ன ஆச்சு?
மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி.

மந்திரி : பயப்படாதீங்க மன்னா. மனுஷனுக்கு ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
மன்னன் : அது பரவாயில்லை .. போரிலும் சாவு வந்திடுமோன்னு தான் பயமாயிருக்கு.

"மன்னர் போரில் தோற்ற பிறகும் புலவர் அவரை வாழ்த்தி குறுந்தொகை பாடுகிறாரே?"
"மன்னரிடம் அவர் ஒரு பெருந்தொகை வாங்கி விட்டாராம்"
....
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை."
" அட, அப்படியா "
" ஆமா, என் கருத்தை ச்சொன்னால் தானே வேறுபாடு வர்றதுக்கு"
....
" துண்டு சீட்டை படித்தவுடன் பாகவதர் ஏன் டென்சன் ஆயிட்டார்?"
"கச்சேரி முடிந்தவுடன் தயவுசெய்து எழுப்பி விட்டுட்டு போங்கன்னு எழுதியிருக்காம்"

"ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை"
" ஊறுகாய் சார்"

நோயாளி : ஐஸ் வாட்டர்னா எனக்கு உயிர்.. டாக்டர்.
டாக்டர் : தாராளமா குடிங்க. ஆனா குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுட வச்சு குடிங்க .

"ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மிஸ்டர் பாபு சங்கர் "
"ஐயோ டாக்டர் , நான் கௌரி சங்கர் "
"வெரி குட். என்னோட தப்பை சரியா கண்டு புடிச்சிட்டீங்களே"

காதலி : உங்களுக்கு ராணி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு சொல்லவே இல்லையே?
காதலன் : உன்னை ' ராணி ' மாதிரி வச்சுக்கிறேன் ன்னு நிறைய தடவை சொல்லியிருக்கிறேனே.

"தலைவர் இன்னும் பழைய ஞாபகத்திலேயே இருக்காரு"
" என்ன விஷயம்?"
" அவரோட பாதுகாப்புக்காக பின்னால் ஜீப்புலே வர்ற போலிசைப் பார்த்துட்டு காரை வேகமா ஓட்ட சொல்லி டிரைவர் கிட்டே சொல்றாரு"

சுஜாதா சொன்ன ஜோக்:
வசந்தின் எச்சரிக்கை - வயாக்ரா அதிகம் சாப்பிடக்கூடாது. ஒரு ஆசாமி ஏழு மணி நேரத்துக்கு ஒரு வயாக்ரா என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மணிக்கு ஏழு சாப்பிட்டானாம். இறந்து போய்விட்டான். சவப்பெட்டியை மூடவே முடியவில்லை

ஜாப் அப்ளிகேஷனில் எம்.ஏ. எம்.ஃபில் படித்த பெண் ஒருத்தி SEX - என்பதற்கு  நன்கு யோசித்து விட்டு பதில் எழுதினாள் -  Once in a Blue Moon.
 ‘Once in a blue moon' means "Not very Often" "Very rarely"

......

2008 post

Mar 5, 2024

A joke is a very serious thing - 3



மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க. எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "

ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்தியாவின் முதல் ஜனாதிபதி பற்றி சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன். பாபு ராஜேந்திர பிரசாத் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம். சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம்.

அருந்ததி ராய்  God of Small things நாவலில் Anecdote:
தகப்பனுக்கு இரட்டை குழந்தைகள்.                   பீட்  Optimist. ஸ்டுவேர்ட்  Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது. 
அப்பா ஸ்டூவேர்ட் க்கு வாட்ச், சைக்கிள் பரிசு கொடுத்தார். பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை. சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது. அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான்.
பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார். சரி.பீட் என்ன செய்கிறான். அப்பா அவன் ரூமுக்கு போன போதுஅந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட்.  இவர் ஆர்வத்துடன் 'பீட்,என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு உற்சாகமாக பீட் சொன்னான் 'குதிரையைத் தேடிகொண்டிருக்கிறேன் அப்பா. இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம்  குதிரை இருக்கும் தானே?'

கிரா பேசும்போது நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார். "குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா"

"முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு.மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்" - வெங்கட் சாமிநாதன்

"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள்என்னால் வர முடியாது"           - நகுலன்

சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில்  ஜோக்: சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள்.                             
 சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்னுமே இல்லையே. உனக்கு எதற்கு ப்ரா?'
       சர்தாரிணி ' யோவ், போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர். நான் ஏதேனும் கேட்டேனா?'

"A lot of lies are going around the world and the worst of it is, half of them are true"                                - Winston Churchill.
இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான்.

2008 post

மீள் பதிவு 
.....

என் கேள்விக்கென்ன பதில்


'என் கேள்விக்கென்ன பதில்' 1978 ம் ஆண்டு வெளிவந்த படம்.
ரஜினி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார் நடித்த படம்.
P. மாதவன் இயக்கத்தில் வண்ணப்படம்.

இதில் ஒரு பாத்திரம்.
ஸ்ரீப்ரியா இந்த பாத்திரத்தை கிண்டல் பண்ணி பாடுவது போல பாட்டு. 
" ஓட்ட வண்டி மகராசா, நாட்டுப்பொண்ண பாத்தீங்களா?"

ரஜினிகாந்த் இந்த கதாபாத்திரத்தைப் பார்த்து பாடுகிற காட்சியும் படத்தில் உண்டு. 
'I'm nobody, he is somebody'

கதாநாயகி ஸ்ரீப்ரியாவை காரில் கடத்திச் சென்று வைக்கோல் போரில் தள்ளி விட்டு கற்பழிக்க முயல்கிற காட்சியும்.


நடிகர் யாருக்கும் இப்படி காட்சிகள் இருக்கிற கதா பாத்திரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தவிக்கச்செய்யும். வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஓப்பனிங் என புதிய நடிகரை ஏங்கச் செய்யும்.

படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்காந்த் வாய்ப்பு பெற்றார். அப்போது 'இனிக்கும் இளமை'யிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

சினிமாவில் விஜய் காந்த் கடுமையான போராட்டம் ஆரம்ப நேரம். 
ஷூட்டிங்கில் விஜய் காந்த் நடிக்க ஆரம்பித்தபின் தான் வாய்ப்பு பறி போகிறது. பெருத்த அவமானம்.

சிலோன் மனோகர் பின்னர் அந்த ரோலில் நடிக்க வாய்ப்பு பெற்று நடித்து படம் ரிலீஸ். 
அந்த ரோலில் சிலோன் மனோகர் இல்லாமல் விஜய் காந்த் நடித்திருந்தால் 
 'என் கேள்விக்கென்ன பதில்' தான்
 முதல் படமாக இருந்திருக்கும்.

இந்த படம் ரிலீஸ் ஆகி மூன்று மாதங்களில் விஜய் காந்த் முதல் படமான சுதாகர் கதாநாயகனாக நடித்த 'இனிக்கும் இளமை' வெளியானது.

1979ல் விஜய் காந்த் பேட்டி பத்திரிகையொன்றில்.
ரஜினி காந்த் சாயலில் இருப்பதினால்
என் கேள்விக்கென்ன பதில் படத்தில் ரஜினியால் தான் 
வாய்ப்பு பறி போனதாக உடைந்து போய் சொல்லியிருந்தார்.

இப்போது ரஜினிகாந்த்  போட்டி பற்றி தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் காந்த் பறிக்கிற சூழல் இருந்தது என கூறியதாக அறிய வந்த போது
இந்த விஷயம் ஞாபகம் வருகிறது.

(ஜெயசித்ராவுக்கு பின்னால் கணவரான மங்கள நாயகன் கணேஷ் 'என் கேள்விக்கென்ன பதில்'
படத்தில் வக்கீலாக நடித்த காட்சி உண்டு.
டயலாக்"சட்டம் அதுக்கு எடம் குடுக்கலியே சார்")

Mar 4, 2024

Manjummel Boys

நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது

மஞ்சுமல் பாய்ஸ் துறுதுறு சேட்டைகள் Lovely. இளைஞர்கள் கலகலப்பு பிரமாதம். ரசிக்கும்படியான சுவையான ரகளை.
34 வருடங்களுக்கு முன் பார்த்த No 20 Madras Mail படத்தில் மோகன்லால் ட்ரெயினில் நண்பர்களுடன் அடிக்கும் வெள்ளந்தியான லூட்டி நினைவுக்கு வந்தது.


Serial Killer movies பார்க்க பொறுமையிழந்து விட்ட  அதே மனநிலை இந்த Survival drama movies விஷயத்திலும் உண்டாகிறது.


Some other Survival drama movies 

மலையாள படம் Helen 

மகன் கீர்த்தியோடு   'ஹெலன்' பார்க்கும் போது 
டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away 
ஞாபகம் வந்தது. 

Desperate attempt to survive. 

கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான். 

ஹெலன் படத்தின் எலி, 

காஸ்ட் அவே படத்தின் வாலி பால். 

Personified friend and only companion. 

வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட் 
பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான். 

எலி, வாலிபால்  இழந்து 
ஹெலனும், சக் நோலன்ட்டும் 
தவிக்கும் நிர்ப்பந்தம்.

.