“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.
‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை’ பாடிய ஹனிஃபா
‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா!’
'ஓடி வருகிறான் உதய சூரியன்!'
‘கல்லக்குடி கொண்ட கருணா நிதி வாழ்கவே!’
‘எங்கள் வீட்டுப்பிள்ளை,ஏழைகளின் தோழன், தங்க குணம் கொண்ட கலை மன்னன், மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்!’
எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில் பாடிய சவால் பாடல்
“நன்றி கெட்ட கிழவனுக்கும் நாணயமில்லா குள்ளனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!
நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!”
இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்
கிழவன் = எம்ஜியார்
குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)
மோகன் = மோகன் குமாரமங்கலம்
( அப்போது மத்திய அமைச்சர் )
சுப்பன் = சி.சுப்பிரமணியம்
( அப்போது மத்திய அமைச்சர் )
இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.
...............................
கண்ணுசாமி மேடை பேச்சு
வருடம் 1975 ஆகஸ்ட் மாதம்.
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில்(1973) எம்ஜியார் கட்சி மகத்தான வெற்றி பெற்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட பின்னால்!
மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர். மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது. நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார். பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான். ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான்.
எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார்.
" நீ என்னா சண்டை போடுறே. நம்பியாரும் அசோகனும் சொத்தைப்பயலுக.
நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா. ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க.எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ.
டே நிக்சன் !நிக்சன் ! ஒன்னை நான் பாராட்டுறேன். நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே. ஒன்னை நான் பாராட்டுரண்டா.
ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான்.மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே. கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன்.
டே எதிர்க்கட்சி காவாளிகளா... ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகண்ணு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி.
டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார்.தங்காத்த்து திருப்பி கேட்கிறார். அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும்! டே... எனக்கெல்லாம் எந்திரிச்சிடுச்சின்னு வச்சிக்க, அப்புறம் மடக்கறதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....
யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா ..
டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன்.. என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும். பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ...."
.......................................