Share

Dec 15, 2016

பொய்த்திரள்


குருவி மண்டையன் தீவிர திமுக தொண்டன்.கருணாநிதியின் அத்யந்த பக்தன். புதிதாய் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் திருப்பரங்குன்றத்திற்கு முதல் முறையாக வந்தபோது ”நெருக்கியடித்துக்கொண்டு ’பொன்மனச்செம்மல் வாழ்க!மக்கள் திலகம் வாழ்க’ என்று கூப்பாடுபோட்டுக்கொண்டே எம்.ஜி.ஆரை நெருங்கி தொப்பியை தட்டி விடப்பார்த்தேன்.முடியவில்லை.குனிந்து அவர் குண்டியில் நல்லா நறுக்குன்னு கிள்ளி விட்டேன்..” என்று பெருமையாக சொல்பவன். 

மேடைகளில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்போது ம.கோ.ரா என்றுபெயரை மொழிபெயர்த்து –மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் -“ம.கோ.ரா பாமர மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?’” என்று சவால் விடுபவன்.

பிராமண துவேசம் குருவி மண்டையனுக்கு அதிகம். எதிரே யாராவது பிராமணரைப் பார்த்தால் சைக்கிளை மேலே ஏற்றி விட்டு ’ப்ரேக் பிடிக்கல சாமி’ என்று சொல்வான்.
தேம்பாவணி ஒட்டிய 3வது தெருவிலிருந்து நான் வெளியே வருகிறேன்.ஒரு பிராமண வாலிபன் குடுமி வைத்துக்கொண்டு என்னிடம் ’கோச்சடைக்கு பஸ் இப்ப இருக்றதா?’ என்றான். எனக்கு அவனைப் பார்க்க அம்மாவந்தாள் அப்பு ஞாபகம் வந்தது.அதே நேரம்”வீ..வீ..” என்று குருவிமண்டையனின் விசில் சத்தம். திரும்பிப்பார்க்கிறேன்.ஐந்தாவது தெருவிலிருந்து சைக்கிளில் வெளி வந்த குருவிமண்டையன் “துரை!அவனை நிறுத்தி வை.விட்டுடாத..” என்று சைகை செய்கிறான்.
அதே நேரம் அந்த ஸ்டாப்பில் ஒரு பஸ் வந்து நின்றது. நான் பதற்றத்துடன் அந்த பிராமண இளைஞனை “ இதில உடனே ஏறு” என்றேன். அவன் “இல்லை…இது கோச்சடை போகுமா” என்று இழுக்கும்போதே “முதல்ல ஏறு சாமி.அரசரடி போய் கோச்சடை மாறிக்க..சீக்கிரம் ஏறு” என்று வலுக்கட்டாயமாக நகர ஆரம்பித்த பஸ்சில் ஏற்றி விட்டேன்.
வேகமாக சைக்கிளில் வந்த குருவி மண்டையன் என்னை வெறுப்புடன் பார்த்து “ ச்சீ தமிழ் இன துரோகி..ஆரிய அடிவருடி.. ஒரு ரம்மியமான மாலைப்பொழுதை கெடுத்து விட்டாயே..” என்று பொருமினான்.”பாப்பானையும் பாம்பையும் கண்டா உடனே அடிக்கனும்ப்பா” என்றான் அந்த கறுப்புச்சட்டைக்காரன்.

1977 தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு கேட்க புது நுட்பமான யுக்தி கையாண்டான்.
ஹார்வி நகர்,சோமசுந்தரம் காலனி போன்ற இடங்களில் இரவு நேரம் கொலாப்புட்டன்,ஆட்டுமூக்கன்,ஒத்தகாதன்,தொல்லை ஆகியோருடன் சைக்கிளில் நுழைந்து “ டேய் ஆரியப்புண்ட மகன்களா.” என்று ஒரு சவுண்டு. உடனே வீட்டு விளக்குகள் அணைக்கப்படும்.கதவுகள் சாத்தப்படும்.அந்த வீடுகளில் உள்ள அத்தனை காதுகள் மட்டும் தீட்டப்படும்.
”ஒழுங்கா எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டுடங்கடா. தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்கடா. டே ஆரிய நாய்களா.. ஒழுங்குமயிரா அண்ணாதிமுகவுக்கு ஓட்டுப்போடலீன்னா அழிஞ்சே போவீங்கடா.ங்கொம்மால ஓக்க.. எம்.ஜி.ஆர் வாழ்க! கோத்தா புண்டையில ஓக்க..அண்ணாதிமுக வாழ்க!”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.