Share

Dec 10, 2016

லக்ஷ்மி மணிவண்ணனும் பவா செல்லத்துரையும்


முக்கிய இலக்கிய ஆளுமைகளில் பலரை நான் நேரில் சந்தித்ததேயில்லை.
எவ்வளவோ வருடங்கள் கழித்துத் தான் சில மாதங்கள் முன் விக்ரமாதித்யனையும், போன மாதம் கலாப்ரியாவையும் இப்போது எதேச்சையாக சந்திக்க முடிந்திருக்கிறது.
‘அம்ருதா’ இலக்கியப்பத்திரிக்கையில் லக்ஷ்மி மணிவண்ணனின் பத்தி ”தீவிரம் வேடிக்கை வேறுபாடு”

”சக மனிதன் கொள்ள வேண்டிய கற்பனைக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லையெனில் அப்படியொரு வாழ்க்கை வாழ அவசியமா என்ன?”
இந்த வரிகளைப் படித்த போது தோன்றியது - என்னைப் பற்றிய Gossip கூட இருந்து விட்டுத்தான் போகட்டுமே!
இந்த மாத அம்ருதாவில் லக்ஷ்மி மணிவண்ணன் சபரிமலை ஐயப்ப பக்தி பற்றி, காங்கிரஸ் , மோடி, (“ இரண்டு காங்கிரஸ் காட்சிகள், கட்சிகள் இந்தியாவில் எதற்கு?”) படிகம் 7 கவிதை இதழ், புறக்கணிக்கப்பட்ட கவிகள், எழுத்தாளர்களுக்காக நாகர்கோவிலில் உறைவிடம் ஏற்படுத்தும் முயற்சி (”நிழற் தாங்கல்” – கவித்துவமான பெயர்!)
“ நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருப்பினும் கூட கவிதை உங்கள் ஆளுமையில் ஒட்டவில்லையெனில் அவ்விடம் வெற்றிடமே. அதனை வேறு எதனைக்கொண்டும் ஈடுகட்டவே இயலாது…எவ்வளவு பெரிய சொருபமாக இருந்தாலும் கவிதையற்ற சொருபம் குறைபாடுடையதே. அதற்காக கவிதை பழகுங்கள்” – லக்ஷ்மி மணிவண்ணன்.
அம்ருதாவில் ஒரு அழகான மொழிபெயர்ப்பு தொடராக வருகிறது. ஹிட்ச்காக்கை 1962ல் த்ருஃபோ நேர்காணல்.
.....................................................


’அந்தி மழை’ மாத பத்திரிக்கையில் பவா செல்லத்துரையின் பத்தி கவனத்துக்குரியது.
”ஜோக்கர்” திரைப்படத்தில் பவா செல்லத்துரையை பார்த்திருக்கிறேன். ஓ! இவர் தானா!
பவா ஒரு இலக்கிய இயக்கம்.
கடந்த முப்பது வருட நிகழ்வுகள் காரணமாக என் மனதில் இப்படித்தான் அவர் பற்றி ஒரு பிம்பம்.
கோணங்கி என்னிடம் பவா பற்றி பேசியதுண்டு. கோணங்கி பற்றி இவர் எழுதியதை படித்தேன்.
தமிழின் நல்ல சிறுகதைகளை சொல்லும் அவருடைய நிகழ்ச்சி.
பவாவின் குடும்பமே தீவிர இலக்கிய செயல்பாட்டில் இருக்கிறது. நல்ல மலையாளக்கதைகள் மொழிபெயர்ப்பு பணி.
விகடனில் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் சிறுகதை ’பிரியாணி’ கிடைத்தது.

பவாவின் பத்தி “ மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்”
’காத்திருத்தல்’ இந்த மாத அந்திமழையில்.
ஓவியர் பாலு சார், சீனுவிடம் காணப்படுவது கள்ளமின்மை. குழந்தைமை. இதை பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்று தான் உலகம் எள்ளி நகையாடும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.