Share

Dec 23, 2016

சுகன் பாரீஸ்


R.P.Rajanayahem : புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’, ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’,கு.ப.ராவின் ‘பண்ணைச்செங்கான்’,’வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகள் தலித்களைப் பற்றிய நேர்மையான அக்கறையுடன் எழுதப்பட்டவை.தி.ஜா.வின் ‘எருமைப் பொங்கல்’ தலித் குறியீட்டுக் கதையாகவே தெரிகிறது,
தலித் ஒரு அனுபவம்.ஒரு தலித்தால் தான் தலித்களைப் பற்றி எழுத முடியும் என்று சொல்லப்படுகிறது.அரசாங்க அமைப்பின் மிக உச்ச பதவியில் அமர்ந்துகொண்டு சகல சுக,சௌகரியங்கள்,சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு,பன்னிவிட்டைப் பொறுக்குவதைப் பற்றி எழுதுவது தலித் இலக்கியம் ஆகும்போது,எந்தப் பாதுகாப்புமில்லாமல்,சகல சவால்களோடு வறுமையின் பிடியில் சிக்கிய நிலையில் கு.ப.ரா.’வாழ்க்கைக் காட்சி’எழுதியதும் ந.பிச்சமூர்த்தி ‘அடகு’ எழுதியதும் ஏன் தலித் இலக்கியமாகாது.


Sugan Paris : எருமைப்பொங்கல் குறித்து பல இடங்களில் எழுதியிருக்கிறேன் , நிராகரிக்கப்பட்ட கண்டுகொள்ளாமல் கவனமாகத் தவிர்க்கப்படும் மதிப்பீடுகள் குறித்து நண்பர்கள் பலருக்கும் எருமைப்பொங்கலை நான் பரிந்துரைப்பதுண்டு.
நீங்கள் கவனப்படுத்திய ஆளுமைகள் மற்றும் அவர்களது குறிப்பான பிரதிகள் தலித் இலக்கியத்திற்கு எதிரீடாக இல்லாமல் சமாந்தரமாக முக்கிய கவனம் கொள்ளத்தக்கன,ஆனால் அவை தலித் இலக்கியமல்ல.
அன்றியும் தாங்கள் குறிப்பிட்ட பிரதிகள் அத்தனையும் சேர்த்தாலும் டானியலின் முருங்கையிலைக் கஞ்சிக்கு நிகர்கொள்ளாது என என்னால் வாதிடமுடியும் . இலக்கியப்பிரதிகளை ஒன்றுக்கொன்று நிகர் வைத்துப்பேசும் ஆரம்ப கால சாதக பயில் நிலைகளை நான் எப்போதோ கடந்துவிட்டேன் .
அடிநிலையினரின் நிலையினை குறிப்பாக தலித் பாடுகளை குறித்த அவர்களின் படைப்புகளாலேயே நீங்கள் குறிப்பிடும் படைப்பாளிகள் இன்னும் கவனத்தில் வாழ்கிறார்கள் ,இருக்கிறார்கள் .


Gopalakrishnan ER •:உண்மை.இதில் பாரதியும் சேர வேண்டும்.
.................................................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.