Share

Dec 26, 2021

Rajanayahem's writings on top league

"You are playing in a league that does not recognise you Mr.RPR.

Your writings are really on  top league. Somehow you are ignored by some design, except Charu.(I wonder how someone like you would have been in desolation if not for the new age tech driven social media)"

"Your narrative style is so fluidic and effortless. Makes compulsory reading without the reader realising that he is drowning in a swirling whirlpool... He suffers where you suffered, rejoices in your joys, suffocates in your wealth of experience. Keep going..."

- Sivakumar Viswanathan



Dec 24, 2021

மன்மத லீலை படத்தில் கலைஞர் ரசித்த காட்சி

எமர்ஜென்சி காலத்தில் கலைஞரின் தி.மு.க ஆட்சி
 1976 ஜனவரி மாத கடைசி நாளில் கலைக்கப்பட்டது.

பாலச்சந்தரின் மன்மத லீலை 1976ம் ஆண்டு பிப்ரவரியில் 
வெளி வந்திருந்தது.
கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்வி: 
'மன்மத லீலை படத்தில் உங்களுக்குப்
பிடித்த காட்சி எது?'

கலைஞர் தன் பாணியில் சொன்ன சாதுர்யமிக்க ரசமான பதில் :
" பெட்டிசன் மாமா சட்டையைக் கிழித்துக்கொள்கிற காட்சி."

அன்று இந்த பதில் அரசியல் பார்வையாளர்களாலும், தி.மு.க.வினராலும் மிகவும் 
ரசிக்கப் பட்டது.

அந்த நேர அரசியல் சூழல் அறிந்தவர்களால் தான் 
கலைஞரின் பொடி வைத்த 
இந்த பதிலை 
ரசிக்க முடியும்.

மன்மத லீலை படத்தில்
 பெட்டிசன் மாமா ஒய்.ஜி.மகேந்திரன்             தலையில் வைத்திருப்பது 
எம்.ஜி.ஆர் தொப்பி தான்.

Dec 22, 2021

R.P. ராஜநாயஹம் வாழ்வு

"R.P.ராஜநாயஹம் அவர்களின் வாழ்வுதான் என் கனவு...யாருக்கும் வாய்க்காத மனமும் வாழ்வும் அவருடையது ...
ராஜாதிராஜாக்களுக்கும் ..அம்பானி அதானிகளுக்கும் மேலான செல்வந்தர் ..யாரும் செல்வந்தர் ஆகலாம் ..ஆனால் ஒருபோதும் எந்த செல்வந்தரும் R.P.ராஜநாயஹமாக ஒருபோதும் ஆகவே முடியாது .
.எந்த துறவிக்கும் மேலான மனப்பக்குவத்தையும் மனநிறைவையும் உடையவர்...

இழப்பு வருத்தும் போதும்...ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்று என் மனம் என்னை துன்பத்தில் பிடித்துத் தள்ளும் போதும் ...வருங்காலம் பற்றிய பயம் என்னைச் பேய் போலச் சூழும் போதும்... இவரின் கைகள் அபயம் தந்து என்னை அரவணைத்து சட்டென்று ஒருநொடியில் என்னை மீட்கும் அதிசயம் பலமுறை நிகழ்ந்துள்ளது..இவரது வாழ்வே எனக்கான செய்தி...எனக்கான பாடம்...

இவரது மனப்பக்குவத்தைப்பெற இடையறாது முயன்று கொண்டே இருக்கிறேன் ..அதுவே என் வாழ்வின் நிறைவும் வெற்றியும் என்று கருதுகிறேன்... 

நன்றி R.P.ராஜநாயஹம் சார்..."

- பரமசிவம்.எஸ்

Dec 21, 2021

ராஜநாயஹத்தின் பார்வை

ராஜநாயஹத்தின் பார்வை வித்தியாசமானது.  
அது கோணலும் இல்லை 
குறும்பும் இல்லை. 
வித்தியாசமான இலக்கியப் பார்வை.
  அவர் விகாரத்திலும் அழகு காண்பார்.  
அழகிலும் விகாரத்தைக் காண்பார்.  

விமர்சனம் என்பது ஒற்றை அடிப்பாதை அல்ல என்பதை
 அவர் எழுத்தில் காணலாம்.  
க.நா.சு. போல தனித்துவம் கொண்டவர் என்பது என் கருத்து.

- கிருஷ்ணமூர்த்தி சுந்தரா

https://m.facebook.com/story.php?story_fbid=3217921225087988&id=100006104256328

Dec 20, 2021

இ.பா. கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் பற்றி 2005ல் ராஜநாயஹம்

"கிருஷ்ணா கிருஷ்ணா"
('கிருஷ்ண கிருஷ்ணா' அல்ல அல்ல)
இந்திரா பார்த்தசாரதி எழுதிய 
இந்த நாவல் பற்றி R.P.ராஜநாயஹம்            எழுதிய 'லீலார்த்தம்' என்ற தலைப்பிலான கட்டுரை
 2005ம் ஆண்டு 
'பன்முகம்' இலக்கிய இதழில்
வெளி வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த நாவலைப் பற்றி கமல் பேசியதால் தான் இந்த 2005 பதிவை மீண்டும் இன்று இங்கு பகிர்ந்துள்ளேன்.

கிருஷ்ண லீலைக்கான அர்த்தம்
லீலார்த்தம்

 கமல்ஹாசன் பிக்பாஸில் 
இந்த நாவல் 
தலைப்பு 'கிருஷ்ண கிருஷ்ணா' என்று தவறாக உச்சரித்தார்.
ஆனால் நாவல் பெயர்
 "கிருஷ்ணா கிருஷ்ணா"

லீலார்த்தம்
- R.P. ராஜநாயஹம்

இந்திரா பார்த்தசாரதி தன் படைப்புகளில் 
பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும். ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை, லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா. சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு அந்நியமான விஷயமில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில் இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

அவனுடைய அவதாரம் பற்றி பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.

பிருந்தாவனப் பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம் புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை, நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.

வாழ்க்கை எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும் இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர் அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே Kill - Joys தான் என்கிறான்.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால் முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
கலைஞர் மு.கருணாநிதி சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம் பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.

‘கிருஷ்ணன் அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன் படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன் குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது கூட ஒரு Irony தான்.

துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.

கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

கிருஷ்ணன் தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.

ராதாவின் குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா ? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ? வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான் கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.

Fate Proves Stronger than Misfortune !

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?

‘ தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான் வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘ ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi - Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the dominating charactor.

நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.

The Intray is never Finished

http://rprajanayahem.blogspot.com/2020/10/bigg-boss-4-and-c-m-u-s.html?m=0

...................

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.

புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005

...

பெரியண்ணனோட குட்டி குட்டி தம்பிங்க

ஆறு, பாறை, முதலையோட ஏரின்னு அலையிற 'டோரா'வோட ஃப்ரண்டு 'புஜ்ஜி'ன்னு ஒரு கொரங்கு.
கார்ட்டூன் பட ஃபேன்ட்டஸி கேரக்டர்களை சந்தோஷமா பாக்கமுடியுது.

முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய ஒரு பாசப்பாடல் காட்சியில்
ஒரு சொளவு மூஞ்சி நடிகருக்கு -  அறுபது வயசுல மேக்கப் விக்கோட நடிக்கிறவருக்கு ரெண்டு ரொம்ப,ரொம்ப குட்டியான உடன்பிறந்த தம்பிகள்.
 பாக்க எரிச்சல்  வராமலிருக்குமா? 
இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு தான் இந்த படத்த
 நேரங்கெட்ட மார்னிங் ஷோ,  புழுக்கத்ல மேட்னி ஷோ, 
ஃபர்ஸ்ட் ஷோ, 
தூக்கத்த கெடுக்ற 
செகன்ட் ஷோன்னு பாத்து நூறு நாள் ஓட வச்சிருக்காங்க.

அம்பது வருஷத்துக்கு முன்னயே   எம்.ஜி.ஆருக்கு
 டவுசர் போட்ட தம்பியெல்லாம் சினிமால்ல வந்ததுண்டு.

Dec 13, 2021

பந்த பாசம் - பெரியம்மா

பந்த பாசம்

பெரியம்மா.
91 வயது.
மிகையில்லை.தங்கத்தட்டில் தான் என்னை வைத்து தாங்கியவர்.
முதுமையில் கடுமையான 
ஞாபக மறதி. Dementia.
யாரையும் அடையாளம் காண முடியாத துயரம்.

என் அண்ணன் திருச்சி பிரபல வழக்கறிஞர் பால்ராஜ் இப்போது தன் தாயை எப்படி பேணுகிறார் என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.
திருச்சியில் வணக்கத்திற்குரிய பிரமுகர். 

Miracles never cease in this world.
என்னைப் பார்த்தவுடன் பெரியம்மா

"தொரயா? என் பிள்ள தொர, என் பிள்ள" அரற்றிக் கொண்டே என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிய போது ... There is no expiry date for her bond and affection.

என் மனைவியிடம் சொன்னார் "தொரய நல்லா பாத்துக்க"


கலங்க வைத்து விட்ட பெரியம்மா.
அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் பிரயாசை வேண்டியிருந்தது.
ஏனென்றால் நான் அழுவது என்பது எப்போதும்  பெரும் கதறலாய் வெடித்து விடும்.

படங்களில்
பெரியம்மாவுடன் அவர் மகன் பாலு அண்ணா, நான், என் மனைவி.


மொபைலில் படம் எடுத்தவர் 
பாலு அண்ணனின் திருமதி யோகலட்சுமி.
யோகா அண்ணி

Dec 6, 2021

Natesh's Assessment of R.P. Rajanayahem

Koothuppattarai boss - Artist M.Natesh's
Assessment of
 R.P. Rajanayahem today (06.12.2021)

R.P. Rajanayahem, I think you have started                 a new career in front of the cameras 
for the television channels.
 If you can also perform your experiences in front of the television cameras
 you will very soon become a superstar. 

 Mark this day time and period 
when I say this to you.

........

19.09.2018

Natesh :

By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. I thought that a person with trained skills in all that I know can go on stage, pick up his/her life’s problems and deliver a solo show of good theatre. No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018 R.P. Rajanayahem comes on stage         and does exactly that 
28years later!!!!!!!!!!!!!... 
I acknowledged the same day after the show in front of the audience. 
An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.

Dec 4, 2021

Kathik Vee's assessment of R.P.Rajanayahem

You certainly have the
 'gift of the gab' RPR, 
when it comes to speaking. 
And, how nicely and aptly the name
 (your college friends use) #Gabie#
  sits here.🙂

And, your well-worded writings are undoubtedly a Reader's delight. 
 Your wit and humour never fail to amaze me.
Take time to live dear RPR, as you have so much to give the World .🙏🙂

https://m.facebook.com/story.php?story_fbid=2941785962701517&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3203520859861358&id=100006104256328

Nov 29, 2021

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி பரமசிவம் எஸ்

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி
பரமசிவம் எஸ்.

"நீங்கள் எனது ஆசான்...
துயரம் என்னை நெருங்கும்போதெல்லாம்
 உங்களின் கைகளே 
என்னைக் காத்து நிற்பது போலப்  பலமுறை உணர்ந்திருக்கிறேன்..."

Nov 28, 2021

Concentration and Distraction

Concentration and Distraction

குழந்தையாய் இருந்த காலத்தில் ஆரம்பித்து வாழ்வின் பள்ளிப் பருவம், கல்லூரி படிப்பு, பின் பிசினஸ், வேலை என்று 
எந்த விஷயத்திலும் எப்போதும் concentration என்பது சவாலாக, சிரமம் தருவதாக இருந்திருக்கிறது. 
வெகு இயல்பாக கவனச்சிதறல்.

 அவ்வப்போது  distraction. 
சூழலுக்கு,  சற்றும் பொருந்தாத நிர்ப்பந்தங்களை மீறிய, வேறு ஈடுபாடுகள் கொண்ட distraction.
Truancy.
'A truant disposition' என்பார் ஷேக்ஸ்பியர். 
'Let Rome in Tiber melt' - Mark Antony.
'Melt Egypt into Nyle' - Cleopatra.

Concentration குறைவதன் 
அர்த்தம் Irresponsibility.
Concentration தான் prudence என்ற மிரட்டல் எப்போதும் இருந்திருக்கிறது. 
Attentive ness -கவனம், செறிவு.

Distraction குறியீடு தான் 'நீரோ பிடில்'.

Distraction அந்த நேரத்தில்  பற்பல சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தாலும் 
Blessing in disguise  என்ற பலனை தந்திருக்கிறது.

இன்று என் ஆளுமையை இந்த distraction தான் மேம்படுத்தி 
பெரும் உலகை விரித்துக் காட்டியிருப்பதாக தெளிவாகத் தெரிகிறது.
 Playfulness is heaven.

காதல், சுக சௌகரியம்,  இலக்கியம், இசை, திரைப்படம், ஓவியம் என பெரும் புதையலை   distraction மூலம் தான் கண்டடைந்திருக்கிறேன்.

ஜூலியோ கொர்த்தஸார் சொன்னது வேத வாக்கு.

"You have to allow yourself to be distracted when you are unable to concentrate.
All profound distraction opens 
certain doors."

R.P. ராஜநாயஹம் - பழனிவேல் வெங்கட் பார்வையில்


R.P.ராஜநாயஹம் யார்?

பழனிவேல் வெங்கட் பார்வையில் :

ஆங்கிலமொழித் தேர்ச்சியின் பயனாக அயல் பிரதேச சிறந்த  கலை, இலக்கியங்களை வாசிப்பு அனுபவமாக பெறுகின்ற வாய்ப்பு கிட்டியது ஒரு சிறப்பு. 

அதே போல் தமிழ் இலக்கிய சூழலில் நவீனத்துவம் வரை ஆழ்ந்ததொரு  ரசனையும்,பயிற்சியும் பெற்றிருப்பதும் 
கூடுதல் சிறப்பு.

ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் அங்கீகரிப்பும் நட்பும் உங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு வரமே.

இது எல்லாவற்றையும் தாண்டி கர்நாடக,இந்துஸ்தானி போன்ற இசையை ஆழ்ந்த ஈடுபாட்டோடு மனம் லயித்துப்போய் கிறங்கிய அனுபவம் தங்களைப்போன்ற சிலருக்கே வாய்க்கும்.

வாழ்க்கையின் நானாவித அனுபவங்களையும் எழுத்தில் சுவைபட கொண்டுவருவது எல்லோருக்கும் 
சாத்தியம் அல்ல.

தங்களை இனிமையானவராக உணரும்  ஏராளமான
 இதயங்கள் உண்டு. 
எழுத்தின் வழி உறவுகள் தொடரட்டும்.

Nov 25, 2021

A womanizer

The Imagination as a womanizer

'பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்'

'காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று ..'

'ராஜா யுவராஜா, நாள் தோறும் புது ரோஜா'

'அடி ராஜாத்தி வாருங்கடி,
 புதிய ராஜாவை பாருங்கடி'

சிவாஜி 'இளம் வாலிப விடன்'(ஸ்த்ரீ லோலன்) பாத்திரத்தை
 கால காலமாக, வயசான காலத்திலும், பேரன் பேத்தி எல்லாம் பார்த்த பிறகும் செய்திருக்கிறார்.

'இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்
வாலிபம்பம்பம் சாகசம்சம்சம்
லீலைகள்கள்கள் ஆனந்தம் தம்தம்'

எம்.ஜி.ஆர் இப்படி ஷோக்கு மைனர் ரோல் ('ரொம்ப கவனமா') செஞ்சதேயில்ல. 
என்னா வெவரம்!

இப்படி பாட்டு சீனல்லாம் பாத்துட்டு, தண்ணிய ஊத்திக்கிட்டு, மப்புல
 காசு குடுத்து பொம்பள மேல உளுந்து எந்திரிச்சு, 
சிகரெட்ட பத்த வச்சி இளுத்து
'டேய் நானெல்லாம் 
பெரிய 'ஜாரி ஜோக்கர்'டா, 
கெட்ட 'மச காளிடா'ன்னு 
கத உட்டுக்கிட்டு 
மெதப்புல எவ்ளவ் பய
திரிஞ்சானுக, 
இப்பயும் தான் இந்த கனவிலயே 
மூள தலக்கி வெளிய தொங்குறவன்லாம் கூட திரியறானுங்க.
வெட்டி நெனப்பு வெண்ண வெட்டி சிப்பாயிங்க.

Don't fall for a dog who has eyes 
for every bitchனு சொல்லத் தேவையேயில்ல.
இப்படி கொம்பு தாழனுங்கள பொண்ணுங்க சட்டயே பண்ணாதுங்க. 

ஆனா நட்டுத்தாழனுக இத ஒத்துக்கவே மாட்டானுக.

Nov 21, 2021

அண்டி உறப்பு ராஜநாயஹம்

பாரதி மணி கொடுத்த பட்டம் -

'அண்டி உறப்பு 'ராஜநாயஹம்!

சில உண்மைகளையும், 
தன் மனதில் இருப்பதை 
வர்ணம் பூசாது, 
வெளியே சொல்லவும், 
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’,                        மலையாளத்தில் ‘அண்டி உறப்பு'

‘அண்டி உறப்பு’ உங்களிடம் நிறையவே இருக்கிறது, ராஜநாயஹம்! பாராட்டுக்கள்!

..

2008

Nov 20, 2021

தஞ்சை ராமமூர்த்தி

1983வாக்கில் மதுரை ரீகல் தியேட்டரில் இலங்கை தமிழர்கள் ஆதரவு கூட்டம் ஒன்று.
பழ.நெடுமாறன், இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி, நிலக்கோட்டை பொன்னம்மாள், இவர்களுடன் தஞ்சை ராமமூர்த்தி கலந்து கொண்ட கூட்டம்.
அமிர்தலிங்கத்தின் மனைவி அன்று அந்த கூட்டத்தில் புலிகள் ஆதரவு பாடல் கூட மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பாடினார்.
 காசி ஆனந்தன் பாடலாக இருக்கும். அப்போது அவருக்கு புலிகள் தான் தன் கணவரை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் 
எப்படி தெரியும்?

பொன்னம்மாள் நெடுமாறனை தம்பி, தம்பி என்று உருகினார்.
அந்த கூட்டத்தில் தஞ்சை ராமமூர்த்தி தனித்த பெரும் ஆளுமையாக தெரிந்தார்.மிக அழகாக, தெளிவாக பேசினார். 
தஞ்சை ராமமூர்த்தி ஹேர்ஸ்டைல்          என் தகப்பனார் போல நேர் உச்சியில் வகிடெடுத்து சீவியிருந்தார்.
அப்பா போலவே நல்ல சிவப்பு. 

மேடைப் பேச்சில் கண்ணியம், நிதானம் வித்தியாசமான விஷயம். ஏனென்றால் ஆவேசமான அரசியல் சூழலில், கொந்தளிப்பான பார்வையாளர்களிடம்
 அமெரிக்கையாக, மென்மையாக பேசி அவரால் கைதட்டல் வாங்க முடிந்தது. 

அவர் அரசியல் காமராஜரின் தொண்டராக ஆரம்பித்து காமராஜர் பார்க்க இந்திரா காங்கிரஸில் இணைந்து பின்னர் காமராஜர் மரணத்திற்குப் பின்னர் இந்திரா காங்கிரஸில் மூப்பணாருடன் ஒத்துப்போக முடியாமல் வெளியேறி,
இலங்கை பிரச்சினையில் பழ.நெடுமாறனோடு, பின் வி.பி.சிங் ஜனதா தளம், கடைசி காலத்தில் வைகோவை சிலாகித்துக்கொண்டு ..

நல்ல செயல் திறன் கொண்ட வழக்கறிஞர். தன் பரபரப்பான அரசியல் செயல்பாடுகளுக்கு சம்பந்தமேயில்லாமல் இலக்கிய ஆர்வலராக, எழுத்தாளராக "வள்ளலார்" எனும் நூலாசிரியராக.

காங்கிரஸில் தான் திண்டிவனம், வாழப்பாடி என்று ராமமூர்த்திகள் பரிமளித்தார்கள். 
தஞ்சை ராமமூர்த்தி மங்கிப்போன நிலை.

சிதைந்த அரசியல்வாதியாக மறைந்திருக்கிற பேராள்மை.

அரசியலில் தோற்றுப்போன கண்ணியமான நேர்மையாளர்களில் ஒருவர்.

Consistency is the hallmark of mediocrity.

Nov 17, 2021

'சினிமா எனும் பூதம்' தொட்டு பா.அசோக்

'சினிமா எனும் பூதம்' தொட்டு 
பா.அசோக் 

"மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே 
அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம், 
 சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... 
மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... 

ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  
ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  
எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  
சாதரணமாக, 
நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். 
நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  
அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்...

 தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..

ஓவியமா.. இதை பார்,  

அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, 
பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,...
 ஊரே வியக்கும் சாருவுக்கு... 
சாரு இவரை கண்டு வியப்பார்...

கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 

எவ்வளவோ உண்டு சொல்ல...

காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... 
ஆனால் அந்த வைரங்கள் 
காலத்தை வென்று நிற்கும்... 
அப்படி ஒரு வைரம் தான் 
என் ஞானதகப்பன், 

R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்"

Nov 16, 2021

புரியல

உரையாடும் போது, 
நேரடியான பேச்சிலோ,
மொபைலிலோ அலோவானாலும், அடிக்கடி இருவரில் ஒருவர் பேச்சுக்கிடையில் 'புரியல' என்று நிறுத்த, அடுத்தவர் 
தான் சொன்னதை
 மீண்டும் புரியும்படி சொல்ல
 தவித்து தக்காளி
 விக்க வேண்டியிருக்கிறது.

நீண்ட கால பழக்க வழக்கத்திலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டதாக முடிவு செய்வதெல்லாம் சாத்தியமாவதில்லை.
ஆண்டாண்டு காலமாக பழகிய ஒருவனை  நெருங்கிய போது தெரிந்த விஷயம், அவன் மிக மோசமான Sadist.

வடிவேலு புரியாமல் திகைத்துப் போய் அனுகூல சத்ருக்களான
 தாடி பாலாஜியையும், 
போண்டா மணியையும் ஏற இறங்க உற்றுப் பார்த்து கேட்ட
 'கெட்ட' வார்த்தைகள் " அதென்னடா, 
எங்க போனாலும் 
சிக்கல் எனக்குத் தான் வருது.
நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க."

'புரியாது, புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது' கவிஞர் சுரதாவின் வரிகள். சுப்புரத்தின தாசன்.
P.B.ஸ்ரீநிவாஸ் குரல்வளத்தில்.

The eternal mystery of the world is 
its comprehensibility.

'ஒன்னுமே புரியல உலகத்தில, 
என்னமோ நடக்குது, 
மர்மமா இருக்குது' 
- சந்திரபாபு Base voice.

மழை வெள்ளப் பாதிப்பு.

எழுத்தும் புரிதல் வேண்டி நிற்கிறது.

“Only one man ever understood me…
 And he didn’t understand me”
ஹெகல் இப்படி சொன்னான்.                                புரிதலைப் பற்றி
 இதை விட சொல்ல 
வேறு என்ன இருக்கிறது?
...

காதலிக்க நேரமில்லை காமெடி சமாச்சாரங்கள்

ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை காமெடி எந்த அளவுக்கு பிரபலம்?
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா 
செம ஹிட்.

இதனால் அடுத்த வருடம் வெண்ணிற ஆடையிலும் இதே பாணியில் காமெடி காட்சிகள்.

கோபு தான் இங்கேயும் காமெடி வசனங்கள்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அப்பா பிள்ளை பாலையா - நாகேஷ்.

வெண்ணிற ஆடையில் 
அப்பா பிள்ளை மாலியும் 
வெண்ணிற ஆடை மூர்த்தியும்.

இதிலேயே இந்த பட காமெடி 
படு தோல்வி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காதலிக்க நேரமில்லையில் 
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா படம்
எடுக்கிற மிதப்பு.

வெண்ணிற ஆடையில்
" மூர்த்தி தொழிற்சாலை" 
பெரிய பிரமாண்ட தொழிற்சாலை நிறுவுகிற கனவுடன் மூர்த்தி.
படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பெயரே மூர்த்தி தான்.

பிசுபிசுத்துப் போன சப்பை காமெடி.

 இந்த வெண்ணிற ஆடை படம் 
வெளி வந்த நான்கு மாதங்களுக்கு பிறகு எல்.வி. பிரசாத் 'இதய கமலம்' ரிலீஸ்.

சூப்பர் ஹிட் பாடல்கள்.

இந்த பட காமெடியனை (ஆரணி ராமசாமி ? இதயக் கமலம் உதவி இயக்குநர்) எங்கே எல்.வி. பிரசாத்  கண்டு பிடித்திருப்பார், தெரியவில்லை. 
காமெடி செய்கிறேன் பார் என்று  பெருமையாக தானே சிரித்த மூஞ்சியுடன் காமெடியன்.

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் தான் கதாநாயகன்.
 பின்னாளில் இவருடைய மனைவியான ஷீலாவுக்கு 
படத்தில் ஜோடி அந்த இளிச்ச மூஞ்சி காமெடியன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த ஜயண்ட் டி.எஸ். பாலையா                       இதய கமலத்தில்  காமெடியனுக்கு மாமா.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷுக்கு மாமனாராய் நடித்த பிரபாகர் இதில் 
'சின்ன புத்தி சிவா'வாக.

எல்.வி.பிரசாத்துக்கு எல்லோரையும் ரசித்து சிரிக்கச் செய்த 'ஸ்ரீதர் பட பாலையாவுக்கு  நாகேஷ் பேய் கதை சொல்கிற காமெடி சீன்' பிடித்துப் போய் இதய கமலத்திலும் 
பாலையாவுக்கு காமெடியன் பேய்க்கதை சொல்லுகிற காமெடியை வைத்து விட்டார். 

இயக்குநர் ஸ்ரீகாந்த் என்று டைட்டில்.
ஆரூர்தாஸ் வசனம்.


காதலிக்க நேரமில்லையில் 
பேய் கதை  ஒரே சீன். 
இதய கமலத்தில் பேய் சமாச்சாரம் ரெண்டு சீன். 

பாலையா இருந்து என்ன பிரயோஜனம்? நாகேஷ் இல்லையே.
 நாகேஷே ஒரு வேளை இதய கமலத்தில் வந்து பேய் காமெடி செய்திருந்தாலும் repititionல் நல்லாவா இருக்கும்?

..

Nov 15, 2021

Self standing

Self standing

'என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
நான் சினிமாவுக்கு என்னை கூட்டிக் கொண்டு போவேன்,
என்னை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துக் கொண்டு போவேன்.என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்' - மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி என்ற பெ.கோ.சுந்தர்ராஜன் இப்படி ஆரம்பித்து ஒரு கட்டுரை சந்தோசமா  எழுதியதுண்டு.

இதுவே சலிப்பா நெனச்சிட்டா?

அடுத்த பேரா அது தான்.

"எனக்கு தெனமும் நானே  செய்ய வேண்டியிருக்கிற மலயப் பொரட்ற வேலயெல்லாம் வரிச கட்டி நிக்றத நெனச்சா ..
ராத்ரி நானே தான் தூங்கி காலயில எல்லா நாள்ளயிம் எந்திரிச்சு, நானே பல்ல வெளக்கி, காலக் கடன தலயெழுத்தேன்னு மூக்க பிடிச்சி முடிச்சு, அப்றம் நானே தான்
 அழுக்க தேச்சி குளிக்க வேண்டியிருக்கு. தலய துவட்டி..
 அன்னாடம் கொஞ்ச பாடா? சங்கிலியா தொடர்ர பிரச்னங்க..
The intray is never finished.

Monotonous, tedious and repetitious routine.

Fatigue overtakes me."

......

Rekha appreciates R.P.Rajanayahem

Rekha appreciates R.P. Rajanayahem

Rekha Rekha :

"உங்கள் எழுத்தில் அருமையான திரைக்கதை உள்ளது.
 திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி.
தேடிப் படிக்க தோன்றும் எழுத்து."

https://m.facebook.com/story.php?story_fbid=3190596701153774&id=100006104256328

Nov 13, 2021

This week in Poetry' - Professor R.NeduMaran - Podcast

Professor R.Nedumaran's 
"This Week in Poetry"
Podcast

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் 
அவருடைய மாணவனாக  கேட்ட அற்புதமான குரல்
 இன்றும் அப்படியே இளமையாக.
வெகுநேரம் செயலோயச் 
செய்து விட்ட விசேஷ குரல்.

Powerful Magical voice in Podcast!

  

 "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன்.
மூன்று திரை படங்களிலும் 
தலையை காட்டி இருக்கிறார்.

நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். 

அமெரிக்க ஆங்கிலம்!
 தமிழில் முழங்கும் போது
 இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது. 

உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்.

Listen 

Professor R.Nedumaran's popular Audio
"This Week in Poetry" - A.K.Ramanujam

Nov 12, 2021

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram :
 Not many know how to live life
 "this moment".
You are blessed Sir!!
One can remember these things,
 only when they lived that way!!
Refreshing to read your posts!

https://m.facebook.com/story.php?story_fbid=2563810633832387&id=100006104256328

Nov 10, 2021

R.P.ராஜநாயஹம்

Devendhira Poopathy Bhaskarasethupathy :
R.P.Rajanayahem sir,
You are an archive of experiences and events..
You are having extraordinary memories of the past and having an wonderful talent to connect with present sir.

Janakiraman Nappalur :
அற்புதமான மனிதர் சார் நீங்க.
என்ன மாதிரியான வாழ்வு, அனுபவங்கள்....
அதை அப்படியே படிப்பவருக்கும் கடத்தி விடும் ரசவாதம். இந்த லைக், ஷேர், கமெண்ட்லாம் சின்னப்பசங்க விஷயம்.
உங்களை புரிஞ்சுகிட்டவங்க இப்படி உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க. 

Ram Subu  :
உங்கள் எழுத்தில் அனுபவ செறிவு உள்ளது சார். வெறும் கேள்வி ஞானத்தில் மட்டுமே எழுதினால் ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது.
உங்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. உங்களை ஃபேஸ்புக்கில்
சுமார் ஒரு மாதமாகத் தான் ஃபாலோ செய்கிறேன். உங்கள் எழுத்தில் அருமையான Dialogue form உள்ளது.

Nov 7, 2021

வீட்டுக்கு வீடு வாசப்படி

மதுரையில் 
அப்ப ஹார்வி நகர்ல வீடு.
ஹார்வி நகரிலிருந்து வெளிய வந்து  ஏ.ஏ.ரோட்டுல  திரும்புறேன்.

எதிரேயுள்ள 
ஒரு வீட்டுல வெராண்டாவில 
பாஸ்கர் ( நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இளைய சகோதரர்.) பாண்டியன் ( பாஸ்கரின் மூத்த சகோதரர் டி.எஸ்.பி கதிர் வேலு வின் மகன் ) நிற்பதைப் பார்த்தவுடன்
ரொம்ப சந்தோஷமா  
நான் " என்னண்ணே, பாஸ்கர்ணே, பாண்டி,  இங்கே ? " 

பாண்டியன் " அண்ணே!
 சித்தப்பா, இங்க பாருங்க கேபி."

பாஸ்கர் " தம்பி, எப்டியிருக்கீங்க " 

அவர்களிடம் "வாங்க எங்க வீட்டுக்கு"

பாண்டி " இங்க இந்த வீட்ல ஒரு பஞ்சாயத்து "

அந்த வீட்டில் எனக்கு தெரிந்தவர் கிடையாது. ஒரு வக்கீல் வீடு. தினமும் போகிற வருகிற பாதை.

பாஸ்கர் அந்த வீட்டிற்குள் உள்ளே பார்த்து  "அவர எங்க, ஒடனே நாங்க பாத்தாகனும்"

பாஸ்கர், பாண்டியன் இருவரும் அந்த வீட்டின் விருந்தினர்களாக வரவில்லை. சொல்லப் போனால் சிக்கல். 

நாங்கள் பல வருடங்களுக்குப் பின்னர் இப்படி தற்செயலாக சந்தித்துக் கொண்ட விஷயமானது 
ஒரு தர்ம சங்கடம். 
Embarassing situation.

 அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில். பெண்கள் இவர்கள் சொல்வதை சத்தம் போட்டு மறுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த குடும்பத்தில் இருந்து வெளி நாடு போன ஒருவரிடம் அங்கேயிருந்த யாரோ பாஸ்கரிடம் எதையோ கொடுக்கச் சொல்லி கொடுத்தனுப்பியிருக்கிறார். இந்த வக்கீல் குடும்பம் அதை பாஸ்கரிடம் கொடுக்காமல் மறைத்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.

அந்த வீட்டில் நின்று கொண்டிருந்த பாஸ்கரும், கதிர் வேலு டி.எஸ். பியின் மகன் பாண்டியனும் என்னோடு 
கல கலப்பாக  பேச முடியாத இறுக்கமான அபத்த சூழல். 

ஒரு கால் மணி நேரம் அவர்களோடு நெருப்பில் நிற்பது போல்   இருந்த பின் அன்று நான் விடை பெற வேண்டியிருந்தது. 

பாஸ்கர் மறைந்து விட்டார். 

மூன்று வருடங்களுக்கு முன் ட்ராட்ஸ்கி மருதுவின் தங்கை மகன் திருமணம் சென்னையில் நடந்த  போது கூட பாண்டியனை நான் சந்திக்க வாய்க்கவில்லை. 

மறைந்த கதிர்வேலுவின் குடும்பத்தாரை மருதுவின் தங்கை 
காட்டி அறிமுகப் படுத்தினார்.
பாண்டியன் அந்த திருமணத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது.

ட்ராட்ஸ்கி மருது, திலகர் மருது, போஸ் மருது கூட தங்கை மகன் திருமணத்திற்கு வரவில்லை.
வீட்டுக்கு வீடு வாசப்படி.

பின்னர் கூத்துப்பட்டறை போர்ட் மீட்டிங் கலந்து கொள்ள ட்ராட்ஸ்கி மருது வந்திருந்த போது 
நான் "என்னண்ணே?" 
ஓவியர் மருது " அதான், எங்களுக்குப்
பதிலா நீ தங்கச்சி மகன் கல்யாணத்துக்கு போயிட்டியே!"

....

Oct 26, 2021

Besame mucho - அனுபவம் புதுமை

 "அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே

பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே" 


"Besame mucho" 

காது கொடுத்துக் கேளுங்கள். 

https://m.youtube.com/watch?v=kIJZSs2gxdo&feature=youtu.be


Retired Customs Joint Commissioner 

Shri. Subramaniam Sakthivel brought this Sesame Mexican song to my notice. 


Thank you Subramaniam sir. 


மெக்சிகன் கம்போஸர் 1940 ல் இயற்றி உலகமெங்கும் பலரால் பாடப்பட்டு பிரபலமான பாடல் "Besame mucho"


இந்த கம்போஸர் ஒரு பெண்.


 என்னைப் போல இந்த அம்மாள் 

ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்தவர். 


பெயரை எப்படி உச்சரிப்பது? Consuelo Velazquez. 

2005ல் இறக்கும் போது 88 வயது. 


"அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே

பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே"


'காதலிக்க நேரமில்லை' 1964


விஸ்வநாதன் - ராமமூர்த்தி

Oct 20, 2021

S. M.T. R. பாபு

 என்னுடைய மாமனாரின் மூத்த அண்ணன்

 எஸ். எம். டி. ராஜகோபால். 

இவருடைய மனைவி சிவகாசி அத்தை. 

சிவகாமி அத்தையின் தந்தை திண்டுக்கல்

முருகன் டிரான்ஸ்போர்ட் ஓ. சின்னச்சாமி பிள்ளை. 

காங்கிரஸ்காரர். 1967 தேர்தலில் திண்டுக்கல் 

சட்டசபை காங்கிரஸ் வேட்பாளர். 

 கம்யூனிஸ்ட் ஏ. பாலசுப்ரமண்யத்திடம் தோற்றார். 


ராஜகோபால் மாமா கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்கவர். முறைப்படி சங்கீதம் படித்தவர்.

 கச்சேரி செய்யும் ஞானம் கொண்ட ஞானி. 

சங்கீத ஈடு பாடு காரணமாக இளைஞனாக இருக்கும் போதே 'தங்க மாளிகை' நகைக்கடையில் ஏதேனும் ஒரு கீர்த்தனையை கள்ளக்குரலில் பாடிக்கொண்டு, 

தொடையில் தாளமும் போடுவார். 

தாத்தா தங்க முடியா பிள்ளை " டேய் வியாபாரக்கடையில் தொடையில் தாளம் போடாதே" என்று கண்டிப்பாராம். 


உறவில்லை என்றாலும் கர்நாடக சங்கீத மேதை மதுரை சோமு 

இவரை 'மருமகனே' என்று செல்லமாக 

அன்போடு விளிப்பார். 


எனக்கு திருமணம் முடிந்து ராஜகோபால்  மாமா, 

சிவகாமி அத்தையுடன் தான் அவர்கள் காரில் 

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு பொண்ணு மாப்பிள்ள வந்தோம். மறு நாள் மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு எங்களை சிவகாமி அத்தை அழைத்துக் கொண்டு போனது இன்றும் ஞாபகமிருக்கிறது. 

மிக கண்ணியமான அற்புதமான சிவகாமி அத்தை. 


தாய் மாமா மகளை பாபு மணந்தார். 


 

ராஜகோபால் மாமா மகன் பாபுவும் 


எங்க பெரியப்பா மகன் ஆரோவும் (இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தம்பி) 

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களாக சில வருடம் ஒன்றாக படித்தவர்கள். 


ஒரு நாள் பாபுவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது 

பாபுவின் தங்கை சுஜி மாப்பிள்ளை சிவகுமாரின் சொந்த அத்தை மகள் தான்

 பிரபல சினிமா நடிகை ஹீரா என்பதைப் பற்றி பேச்சு வந்தது. 

பாபு "அத்தான், அவங்க எல்லாம் பாத்தீங்கன்னா நெருங்கிய சொந்தமாய் இருந்தாலும் உறவுல ரொம்ப இடைவெளி. ரத்த சொந்தம்னாலும் பெரிசா அன்பு, பாசம், பிரியம் காட்டும் பிணைப்பு எதுவும் கிடையாது." 


நான் சொன்னேன் "இங்க மட்டும் என்ன மாப்ள, 

நாமளும் அப்படித்தான இருக்கோம்" 


ராஜகோபால் மாமா மறைவுக்குப் பின்னர் 


திருப்பூரில் இருக்கும் போது 

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் 

மாப்ள பாபு 

போனில் என்னிடம் 

" அத்தான், ஒங்க பெரியப்பா மகன் பாலு கிட்ட ( ஆஸ்திரேலியா ஆரோவின் அண்ணன்

 கிரிமினல் லாயர் பால்ராஜ்)  இங்கருந்து மூனு பேர திருச்சிக்கு ஒரு கேஸ் விஷயமா அனுப்பியிருந்தேன். பாபுன்னு எம்பேர அவங்க சொன்னவுடனே அவங்களுக்கு தேவையான சட்ட உதவியெல்லாம் ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு பாலு அத்தான். என் பேர சொன்னதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் பாத்துக்குங்க. இங்க அவங்க வந்து ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. "


ஏனோ அன்று வழக்கத்தை விட மிக நீண்ட நேரம் பாபு என்னிடம் போனில் அன்போடு பேசியதை மறக்க முடியவில்லை. பாபுவின் இயல்புக்கு இது வித்தியாசமாயிருந்தது. 


அடுத்த வாரம் எனக்கு ஒரு போன். 

எஸ். எம். டி. ஆர். பாபு கார் விபத்தில் மரணம்.


..... 


முதல் புகைப்படத்தில் 

S. M. T. R. பாபுவின் திருமணத்தில் நாங்கள்

இரண்டாவது புகைப்படம் ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் என்னுடன் பாபு

மூன்றாம் புகைப்படம் 

ஜெமினியுடன் என் அப்பா பேசும்போது முன்னால் உட்கார்ந்திருக்கும் பாபு.

நான்காவது புகைப்படம் திருச்சி பிரபல வழக்கறிஞர் ஜேசு பால்ராஜ்.











..... 


https://m.facebook.com/story.php?story_fbid=3170718109808300&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3172367679643343&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3164234097123368&id=100006104256328

Oct 19, 2021

 


என் மாமனாரின் அண்ணன் 

எஸ். எம். டி. அங்கு ராஜ் அவர்களின் 

மூன்றாவது மகள் Viji Lakshmi விஜி. 

நாக்பூரில் கணவர் பிரபல டாக்டர் முரளி. 

They have two hospitals in Nagpur. 


என் மனைவியின் ஒன்று விட்ட சகோதரி. 


ரோஜா, ரஜ்ஜி, விஜி மூன்று சகோதரிகள். 

Raji Haresh 


முதல் புகைப்படம் 1990  ம் ஆண்டு 

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜியின் பிறந்த நாளின் 

போது 

விஜி, என் குழந்தை கீர்த்தி, மற்றும் நான். 


இரண்டாவது புகைப்படம் இப்போது நாக்பூர் விஜி.




http://rprajanayahem.blogspot.com/2018/03/golden-chance.html?m=1

Oct 18, 2021

R. P. ராஜநாயஹம் பற்றி பதிவுகள். காம் வ. ந. கிரிதரன்



 "R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு  தவறினைத்திருத்தினார்.


சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். 


இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.


எழுத்தாளர் அமரர்அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.


'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.


இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.


இவரது எழுத்துக்கள் எல்லாம் நூலுருப்பெற வேண்டியதவசியம். ஒரு காரணம்: கலை, இலக்கிய மற்றும் ஆவணச்சிறப்பு மிக்க அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும். "



Oct 17, 2021

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர். அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து, எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது. 


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். 

அந்த பிள்ளைகள் ஜெயகாந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 


கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம். 


காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள். 


காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார். 


ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.


இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார். 


" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன். 


கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனால் கண்ணதாசன்? 

போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"


‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம் 

ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்? 


ஜெயகாந்தன் காங்கிரஸ் உடைந்த போது கண்ணதாசனின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் சொன்ன வார்த்தைகள்  சரியானவை தான்.  காமராஜருக்கு துரோகம் செய்த கண்ண தாசன் முன்னதாக 1967ல் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி , என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி “ என்று பாட்டெழுதி விட்டு , காமராஜருக்கு கை கொடுக்க வேண்டிய தருணத்தில் அபத்தமாக இந்திரா காங்கிரஸிற்கு  

 போனதெல்லாம் அவருடைய நிலையில்லாத குணத்தையே காட்டிய விஷயம்.  அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் தார்மீக கோபம் சரியானது தான்.


உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு. 

ஒரே சீரான தன்மை என்பது மட்டரகமானது 

Consistency is the hall mark of mediocrity.

எதையுமே, யாரையுமே generalize செய்வதும் சரியாகாது தான்.

...... 


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_12.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2012/04/blog-post.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_14.html?m=1


http://rprajanayahem.blogspot.com/2008/09/bell-jar.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2009/01/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.com/2014/12/blog-post_29.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2015/04/cock-snook-at-mother.html?m=0


புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ,  இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி

(நன்றி : The Hindu)

Customs raid

 1987

திருச்சி மெயின் கார்ட் கேட். 

கேட் உள்ளே நுழைந்து அந்த பர்மா பஜார் பக்கம் இடது பக்கம் திரும்புகிறேன். தெப்பக்குளத்தை ஒட்டி  அப்படியே நடந்து                               வடக்கு ஆண்டார் தெரு போக திட்டம். 


வெளிநாட்டு பொருள்கள் விற்கும் சின்ன சின்ன கடைகள். பரபரப்பான விற்பனையின் மாலை நேரம் ஐந்து மணி. 

திடீரென அந்த புறாக்கூடுகள் போன்ற அத்தனை கடைகளையும் அவசரமாக அடைத்தார்கள். அடைத்து முடித்து ஓட்டம். 

ஒரே பதட்டமான சூழல். 

நடந்து கொண்டிருந்த பாதசாரிகளையும் 

பதற்றம் தொற்றிக் கொண்டது. 

கடைகளை அடைப்பது, ஓடுவது தொடர்ந்த நிலையில் 

நான் நின்று திரும்பி என்ன என்று பார்க்கிறேன். 


அப்பா சிரித்த முகத்துடன் கஸ்டம்ஸ் ஜீப்பில் முன்பகுதியில் இருந்து இயல்பாகவே இறங்குகிறார். 


He was a preventive customs superintendent then.

..... 

Oct 16, 2021

My cousin Aro in Australia Melbourne


 My cousin 'Aro' in Australia Melbourne 


பெரியப்பா மகன். 

35 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில். 

அவருடைய மனைவி ஆஸ்திரேலிய 

வெள்ளைப் பெண்மணி. 

ஆரோவின் ஒரு அருமையான மகன். 


ஆரோ என் ஒன்று விட்ட சகோதரன் என்பதை விட  சிறந்த நண்பன். 

எங்கள் இளமைக்கால நினைவுகள் 

மிக அழகானவை. 

திருச்சி பிரபல கிரிமினல் லாயர் பால்ராஜ் அவர்களின் உடன் பிறந்த சகோதரன் தான் ஆரோ.                    எங்கள் அண்ணா பாலு 

என் முதல் ரசிகன் ஆரோ தான். 

ரசித்து ரசித்து, 

இன்றும் பழைய ராஜநாயஹம் கதைகளை 

ஆரோ செல் பேசும் நேர்த்தி பற்றி 

சொல்லில் அடக்க முடியாது. 


கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரே முறை தான் பார்க்க எனக்கு வாய்த்தது. 

பெரியப்பா இறந்த போது 

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஆரோவை 

2014ல் தான் ஒரு முறை பார்த்தேன். 


"கண்ணின் மணி போல

மணியின் நிழல் போல 

கலந்து பிறந்தோமடா 

இந்த மண்ணும் கடல் வானும்

 மறைந்து முடிந்தாலும் 

மறக்க முடியாதடா, 

உறவைப் பிரிக்க முடியாதடா."


இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம்,

நான் வாய் விட்டுப் பாடும் போதெல்லாம் 

எனக்கு ஆரோ நினைவெல்லாம் கூட வரும்.


https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/


https://m.facebook.com/story.php?story_fbid=2494032960810155&id=100006104256328


https://www.facebook.com/100006104256328/posts/2775854145961367/


https://www.facebook.com/100006104256328/posts/2783468831866565/


https://rprajanayahem.blogspot.com/2017/04/blog-post_27.html?fbclid=IwAR015HQV0Bhm5zr5hjOEqj9WvMkzWVehLo3wseTfZeH302br6YmATeSO5jU&m=1

Oct 15, 2021

1992 ல் ஒரு ஷூட்டிங் போது

 1992ல் ஒரு பட ஷூட்டிங் போது. 


கையை கட்டியவாறு நான். 

 ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர். 



புகைப்படத்தில் என்னை அடையாளம் தெரிகிறதா? 


கையில் வாட்ச் கட்டிய, 

திரும்பி அந்த பக்கம் பார்க்கும்

 கேமராமேன் எம். சி. சேகர். 


கேமராவுக்கு முன் கதாநாயகன், கதாநாயகி,               அம்மா நடிகை மூவரும் ஷாட்டுக்காக 

நின்று கொண்டு இருக்கிறார்கள். 


புகைப்படம் என்னை கவர் செய்து, எனக்காகவே                        ஸ்டில் போட்டோ கிராபரால் எடுக்கப்பட்டுள்ளது. 


பின்னால் சில வருடங்களுக்குப் பின்னர் 

2000, நவம்பரில் 

வீரப்பன் பிடியில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தி பழ. நெடுமாறனால்

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்டு வரப்பட்டவுடன்

இந்த பண்ணையில் தான் 

உடனே, உடனே தங்க வைக்கப்பட்டார். 


 அன்று மேட்டூரில் இருந்து இங்கே ஷூட்டிங்குக்காக காரில் கிளம்பி 

காலை ஆறரை மணிக்கு வரும் போது 

நடந்த சம்பவம். 


முந்தைய நாள் நெரிஞ்சிப்பேட்டையில் 

இரவு பன்னிரெண்டு மணி வரை 

ஷூட்டிங். எனக்கு செம அலுப்பு. 


டாக்ஸிகளை லோக்கலில் தான் படக்கம்பெனி

 புக் செய்வார்கள். 


காலையில் டாக்ஸி ஓட்டிய டிரைவர் 

நல்ல களைப்பு. 


காரில் முன்னால் டிரைவரருகே உட்கார்ந்திருந்த என்னிடம் 

'ராத்திரி பூரா தூங்கல சார்' என்றார். 


"ஏங்க? "


" சந்தன வீரப்பன் சட்டென்று வந்து, என் அருகில் உட்கார்ந்து 'வண்டிய எடு' ன்னு சொல்லிட்டார். 

அவரு சொன்ன எடங்களுக்கெல்லாம் டிரைவரா இந்த வண்டில நான் போனேன். இப்ப நீங்க ஒக்காந்திருக்கிற எடத்துல தான் 

அவர் உட்கார்ந்து இருந்தாரு ராவெல்லாம். "


" நல்லா பெரிய தொக வாடகையா 

கொடுத்தாரு சார். எப்பவும் எந்த கார்ல எறுனாலும் காசு பெருசா தான் குடுப்பாரு. "


கார்ல டேப் ரிக்கார்டர்ல செம்பருத்தி பட பாடல்

 " பட்டுப்பூவே மெட்டுப் பாடு, "


பின் சீட்டில் மூன்று பேர், நடிகையிருவர், 

ஒரு ஹேர் டிரெஸ்ஸர், 

நடிகைகள் உற்சாகமாக 'பட்டுப்பூவே மெட்டுப்பாடு' உற்சாகமாக லயித்து கூடவே கத்தி பாடிக்கொண்டு இருந்தார்கள்.

பட்ட மரம்

 பட்ட மரம்


"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப்                           பூத்து நின்ற மரமில்லை அது இப்போது. 

இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன. 

இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது. 

புறத்தையும்  துயர கறையான் 

சாரி வைத்துத் தின்று கொண்டிருக்கிறது. 

பலமாக ஒரு காற்று வீசினால் போதும். 

மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."


- தி. ஜானகிராமன்  'வெயில்' சிறுகதையில் 


.......... 


"அந்த பட்ட மரம் தனிப்பட்டு, 

தலைவிரி கோலத்தில் நின்று

மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது.. 


ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்

  கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று

ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...

அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"


--- மௌனி

' அழியாச்சுடர் ' கதையில்


..........


"காம்பு இற்றுப்போச்சு ...

நான் பூக்க மாட்டேன்.

காய்க்க மாட்டேன்

பழம் தர மாட்டேன்.

குயிலுக்கும் கிளிக்கும் 

என்னிடம் வேலையில்லை.

மரம் கொத்திப்பறவை வந்து

ஏணி மீது ஏறுவது போல்

 படிப்படியாக ஏறி

இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.

நான் ஓய்ந்து விட்டேன். 

ஒடுங்கி விட்டேன். 

காய்ந்து விட்டேன்."


--- ந . பிச்சமூர்த்தி

'அடுப்புக்கு எதிரில் ' கதையில்


... 


https://m.facebook.com/story.php?story_fbid=2909001515979962&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2912726525607461&id=100006104256328

Oct 14, 2021

ஹரநாத் ராஜா

 ஹரநாத் ராஜா

- R.P.ராஜநாயஹம்


ஹரநாத் ராஜா. 

பானுமதி நடித்த 'அன்னை' படத்தில்

 அவருக்கு வளர்ப்பு மகன். 

தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார்.

தங்க தட்டில் தான் சோறூட்டி 

பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.


சச்சு உடன் ஹர நாத் ராஜா வுக்கு ஒரு நல்ல பாடல். அழகான காரில் .


’அழகிய மிதிலை நகரினிலே


யாருக்கு ஜானகி காத்திருந்தாள்


பழகிய ராமன் வரவை எண்ணி

 பாதையை அவள் பார்த்திருந்தாள்’


சுமை தாங்கியில்

எல். விஜயலக்ஷ்மியுடன்

'ஓ மாம்பழத்து வண்டு, வாசமலர் செண்டு '


சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி . பரமசிவனாக.


இவர் ஓவர்நைட்டில் ஹீரோ ஆனவர்.

பாண்டி பஜாரில் ஷு வாங்கும்போது  

ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பார்த்து 

இவரை தெலுங்கில் கதாநாயகனாக்கினார் 

என்று ஒரு வெர்ஷன்.


பைலட் ஆக ஆசைப்பட்டவர். 

சினிமா திசை மாற்றியிருக்கிறது.


கோணசீமா ஜமிந்தார் குடும்பத்தில் இருந்து இவருக்கு மனைவி வாய்த்தார்.


கோட்டையிலே பிறந்தாலும் 

விதி போட்ட புள்ளி மாறுமா?


’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் வில்லன். சிவாஜியை குடித்து விட்டு ஹர நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும் போது 

கன்னத்தில் அறைந்து விட்டார். .

பாலாஜி இவரை பெண்டு கழட்டி விட்டார்.


பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லாட்ஜில் வைத்து ஒரு நாள் 

சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி 

' இவர் யார் தெரியறதோ? ஹர நாத் ராஜா . ' 

என சுட்டினார். 

ஆர்வமாக பார்த்தேன்.  வசதி இல்லை இப்போது, அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது. குடித்தே வீணாக போய் விட்டார்.


ஹர நாத் ராஜா போன சிறிது நேரத்தில் 

நான் கிளம்பினேன். பாண்டி பஜார் பஸ் ஸ்டாப். 


ராஜா அங்கே 

பஸ்ஸு க்காக நின்று கொண்டிருந்தார். 

நான் அவரை மீண்டும் பார்த்தேன். 


தான் இன்னார் என்று

 எனக்கு தெரிந்து புரிந்து தான் 

அவரை கவனிக்கிறேன் என்பதை 

உணர்ந்து என்னை பார்த்தார். 

அதற்குள் பஸ் வந்து விட்டது. 

சரியான கூட்டம் பஸ் நிறைய.

 ஏறவும் பலரும் பெரும் முயற்சி 

எடுக்க ஆரம்பித்தனர்.


இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார். கம்பியை பிடித்த பிடியை விடவில்லை.


 கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார். 

கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது. 


பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் 

கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா. கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார். 

ஹரநாத் ராஜாவின் பிடி தளர்ந்து தடுமாறி 

கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் 

இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.


'அழகிய மிதிலை நகரினிலே


யாருக்கு ஜானகி காத்திருந்தாள்


பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'


அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது.


அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.


அவர் அடுத்த பஸ்ஸுக்காக காத்துகொண்டிருந்தார்.


ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது


"காவிய கண்ணகி இதயத்திலே


கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "


அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ்ஸை எதிர்நோக்கிகொண்டிருந்தார்.


(2008ல் ’அழகிய மிதிலை நகரினிலே’ என்ற தலைப்பில்

நான் எழுதிய பிரபலமான பதிவு)


https://www.facebook.com/rprajanayahem/posts/2537679046445546


http://rprajanayahem.blogspot.com/2019/10/blog-post_12.html


...

Oct 13, 2021

நமது அரசு நமது நாடு

 'காதலிக்க நேரமில்லை' 

ரவிச்சந்திரன் 

'பணக்காரப் பிள்ளை'

படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

1968 ம் வருடம். 


தி. மு.க ஆட்சிக்கு வந்த மறு வருடம். 

முதல்வர் அறிஞர் அண்ணாவையும்

 தி. மு. க. ஆட்சியையும் புகழ்ந்து 

'நமது அரசு, நமது நாடு, நமது வாழ்வு என்பதெது, 

நமது தலைவன், நல்ல அறிஞன், 

ஏற்றுக் கொண்ட பதவி அது, '


' அன்னை தமிழின் அருந்தவப் பிள்ளை, 

அண்ணன் போல பிறந்தவர் இல்லை' 

டி. எம். எஸ் பாடலுக்கு பாடி 

ரவிச்சந்திரன் நடித்தவர்.


1971 பொதுத்தேர்தலில் தி. மு.க வெற்றிக்காக வெளிப்படையாக ரவிச்சந்திரன் பிரச்சாரம் செய்தார். 


'எரியீட்டி' என்ற ஒரு வித்தியாசமான

 தி. மு.க ஆதரவு பத்திரிகை

 அந்த தேர்தல் நேரத்தில் பிரபலம். 


1987ல எம். ஜி.ஆர் மறைந்த போது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அஞ்சலி செலுத்த ரவிச்சந்திரன் போயிருந்த போது ஏதோ

 சின்ன சல சலப்பு ஏற்பட்டதாக சொல்வார்கள். 


மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 

ஜெயா டிவியில் ரவிச்சந்திரன் தொடர் பேட்டி ஒன்று சில வாரங்களுக்கு ஒளிபரப்பாகியது. 


'மோட்டார் சுந்தரம் பிள்ளை ' துவங்கி குமரிப்பெண், நான், பணக்காரப் பிள்ளை, அன்று கண்ட முகம், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி போல எத்தனையோ படங்களில் ஜெயலலிதா இவருடன் ஜோடியாக நடித்தார்.


' அன்று கண்ட முகம்' பாட்டு ஒன்று. 

''வாடா மச்சான் வாடா,  பயப்படாம வாடா, 

உந்தன் ஜம்பம் என்னுடம் பலிக்குமாடா?

உங்கம்மா இருந்தா அவள கேளு பாசம் என்னான்னு "

எம். ஜி. ஆரின் மெய்க்காப்பாளராயிருந்த 

மீசை கே.பி.ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து பாடி ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.

டைப்பிஸ்ட் கோபு

 டைப்பிஸ்ட் கோபு

- R.P. ராஜநாயஹம்


'நெஞ்சே நீ வாழ்க'

ஒரு நாடகம்.

பிலஹரி எழுதியது.

டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.

அதில் ஒரு டைப்பிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு.

நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.

 முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.

அதனால் டைப்பிஸ்ட் என்பது 

அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.


பின் இக்கதையே 'ஆலயம்' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.


நாகேஷின் முக்கிய நண்பர். 

கிறிஸ்தவ பெண் ரெஜினாவை அவர்

 திருமணம் செய்து கொண்ட விஷயம்

 கோபுவிற்கு பிடிக்கவில்லை. 

நட்பு கெட்டுப் போய் விட்டது. 


இவருடைய நகைச்சுவை நாடகங்கள்

 அந்த காலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன் பாப்புலர். 


சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார். 


இவருடைய கண்கள், அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது.


 சோவின் நண்பர் நடிகர் நீலுவும் 

டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலுவை பார்த்தால்

 டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள். டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள்.


'ராசுக்குட்டி ' பட டிஸ்கசன் போது இவருடைய பெயரை ஒரு ரோல் செய்ய கதை இலாக்காவில் இருந்த ஒருவர் சிபாரிசு செய்த போது பாக்யராஜ்

 " டைப்பிஸ்ட் கோபு வேண்டாம். மறு நாளே கஷ்டத்தை சொல்லி 

ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும்

 என்று ஆபிஸ் வந்து நிற்பார்.  தொந்தரவு." 

என சலித்து உடனே நிராகரித்து விட்டார்.


ருத்ரா படத்தில் டைபிஸ்ட் கோபு BANK MANAGER ரோல் செய்யும் போது என்ன கஷ்டமோ.. பாவம்... இப்படி பணம் கேட்டு பாக்யராஜை 

தொந்தரவு செய்திருக்கிறார். 

இந்த மாதிரி நடிகர்கள் தொந்தரவானவர்கள் என கெட்ட பேராகி எல்லா படக் கம்பெனிகளும்

 ஒதுக்கி விடுவார்கள் .


டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர். 

இதை விகடனில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார். 


என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம். 1975ல் அவ்வளவு வசதி, வீடு,நகைகள் எல்லாம் போய் விட்டதாம்.

 

அனைத்தையும் இழந்து 

ஒரு சின்ன வாடகை வீட்டில் குடியேறி, 

நடிக்க கிடைத்த

 சின்ன,சின்ன வாய்ப்புகள் கூட 

இல்லாமல் ஆகி 

வீட்டின் முன்னே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு காகிதக்கப்பல் 

செய்து கொடுத்துக்கொண்டு 

அந்த சின்ன வீட்டு வாசல் படியில் 

உட்கார்ந்து இருந்திருக்கிறார்.


The ups and downs of life have made it so difficult to understand.

2019,மார்ச் மாதம்  இறந்தார். 


..........................

Oct 12, 2021

'மீரா' படமும் பாரத ரத்னா விருதும்

 மீரா படமும் பாரத ரத்னா விருதும்

- R.P. ராஜநாயஹம்


கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடித்த "மீரா" படத்தின் ப்ரிவியூ பார்த்து விட்டு

 வெளியே வரும்போது,

சர் டி.விஜயராகவாச்சாரியார் கேட்டார் : 

“ Now do you surrender the title

 ‘the nightingale of India’?”

சரோஜினி நாயுடு பதில் :“I have already done it.”


"மீரா " படம் பற்றி

இந்த படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர இன்னொரு பாரத ரத்னா

சின்ன எக்ஸ்ட்ரா ரோலில் நடித்திருக்கிறார்.

 டி.எஸ்.பாலையாவின் உதவியாளராக 

தாடி வைத்த இளைஞர் ஒருவர் வருவார்.

 அவர் தான் இன்னொரு பாரத ரத்னா. 

எம் ஜி யார். 


பாரத ரத்னா அவார்ட் பற்றி


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின், இரண்டு வருடம் கழித்துத் தான்

 ஒரு மகத்தான மனிதருக்கு 

பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. 

பி.ஆர்.அம்பேத்கர். 


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது 

கொடுத்த பின்னால், 

மூன்று வருடம் கழித்துத் தான்

இன்னொருவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது.

யார் தெரியுமா?


இந்தியாவின் இரும்பு மனிதர் 

சர்தார் வல்லபாய் பட்டேல். 


.........................


மீள்  2008

Oct 10, 2021

Copy cat chithra lakshmanan

 சந்திரபாபு பற்றி நான் 2013ல் எழுதிய கட்டுரையில் ஹிண்டு ரங்கராஜன் நேரடியாக சொன்ன நூறு ரூபாய் விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். அவர் சொல்லும் போது 

நான் கேட்ட விஷயம். எந்த பத்திரிக்கையிலும் இதை அவர் சொல்லவில்லை.


 என் பதிவு லிங்க் :


https://rprajanayahem.blogspot.com/2013/02/blog-post_26.html?m=0


 சென்ற 2020 ல் வெளி வந்துள்ள என் 'சினிமா எனும் பூதம்' நூலில் சந்திர பாபு பற்றிய பதிவில் இடம் பெற்றுள்ளது. 

அது மட்டுமல்ல. 2014 ல் வெளி வந்த என்னுடைய 'சினிமா பதிவுகள்' நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. 

இதனை இங்கே என் நூலில் உள்ள விஷயம் என்பதை மறைத்து சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார். 

இது தவறு. வேதனைப் படுகிறேன். 


 கலைஞர் டிவியில் 'சினிமா எனும் பூதம்' எனும் தலைப்பிலேயே என்னை வைத்து Episodes எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சந்திர பாபு பற்றியும் இந்த விஷயம் பேச இருக்கிறேன்.


நூற்றுக்கணக்கான பேர் ராஜநாயஹம் எழுத்தை திருடி போட்டுள்ளார்கள். 

'இது இப்படி ராஜநாயஹத்துக்கு தான் நடக்கிறது.'

என்று பல எழுத்தாளர்கள் வருத்தப்பட்டு

 என்னிடம் சொல்கிறார்கள். 


கருப்பையா சுந்தரா கார்த்திகேயன் தான் 

 இந்த சித்ரா லட்சுமணன் பேச்சை Worst copy cat என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டு விட்டு 

என் கவனத்திற்கு கொண்டு வந்தார். 


உடனே நானும் அந்த வீடியோவில் இது

 என் சினிமா எனும் பூதம் நூலில் உள்ள பதிவு என்பதை குறிப்பிட்டேன். 


நண்பர்கள் பா. அசோக், சரவணன் மாணிக்கவாசகம்,

கோபாலகிருஷ்ணன் சுந்தர ராமன், 

சரவணகுமார் அய்யாவு, 

வாசுதேவன் காத்தமுத்து, 

ராஜா ஹசன் ஆகியோர் வீடியோவில் இது

 R. P.  ராஜநாயஹம் பதிவு என்பதை சுட்டிக் காட்டியும் சித்ரா லட்சுமணனிடமிருந்து response இல்லை.


நண்பர்கள் அந்த சித்ரா லட்சுமணன் வீடியோவில் 

கண்டனம் தெரிவிக்க வேண்டும். 

https://m.facebook.com/story.php?story_fbid=3166296983583746&id=100006104256328



கீழே சித்ரா லட்சுமணன்  வீடியோ லிங்க் :


https://www.facebook.com/163266385391942/posts/331656651886247/

மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

 மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 

அவர்களுக்கு 

என் நெஞ்சார்ந்த நன்றி. 


செப்டம்பர் துவங்கி கலைஞர் டிவியில் 

R. P. ராஜநாயஹம் 

'சினிமா எனும் பூதம்' 

Episodes shooting and recording

  நடந்து கொண்டிருக்கிறது. 


R. P. ராஜநாயஹம் One man show. 


கலைஞர் டிவி C. E. O.  கார்த்திக், 

Program head  ஆண்டனி, 

Production executive  சொக்கலிங்கம் 

ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. 


(எப்போது Telecast என்ற கேள்வி

 கேட்க வேண்டாம்.)


https://www.facebook.com/100006104256328/posts/3095728433973935/


https://m.facebook.com/story.php?story_fbid=3094999020713543&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3165799520300159&id=100006104256328

Oct 3, 2021

நடிகர் வீரராகவன்

 நடிகர் வீரராகவன். 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். வெங்கடேஸ்வரா பால் கோவா கடையை 

'சிங்கு' கடை என்பார்கள். அதையொட்டி கோவிலுக்கு நுழையும் பகுதியில் பத்து வைஷ்ணவர்கள் சூழ நடு மையத்தில் அமர்ந்திருந்தார். 


அவரைப் பார்த்தவுடன் புன்னகையொன்றை

 என் முகத்தில் கவனித்தவுடன் 

எழுந்து இரு கை கூப்பி வணங்கினார். 

பதில் வணக்கம் செய்து விட்டு 

அவரிடம் சென்றேன்.

 சினிமா நடிகராக அடையாளம் கண்டதால் 

எழுந்து நின்று வணங்கினார் என்பது

 பெரிய விஷயம். 


அவர் மேஜர் சுந்தர்ராஜனின் தாய் மாமா. 

பிரபலமான 'ஞான ஒளி' நாடகத்தில் 

ஆண்டனியாக மேஜர் நடித்த போது 

இவர் தான் இன்ஸ்பெக்டர் லாரன்ஸாக நடித்தவர். 


எல். ஐ. சி. யில் வேலை பார்த்துக் கொண்டே திரைப்படங்களிலும் நடித்தவர். 


சென்னையில் ஷூட்டிங்கில் அவரை நான் பார்த்ததுண்டு. 

பாண்டி பஜார் பகுதியில் 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஷூட்டிங். 

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிக் கொண்டிருந்தார்.

வீரராகவன் பேராசிரியராக. 

அம்பிகாவும், ரவீந்தரும் கல்லூரி மாணவர்கள். 

பாடத்தை கவனிக்காமல் வகுப்பில் 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு, சைகையால் பேசிக்கொண்டு.. 

எஸ். ஏ. சந்திரசேகர் சிரித்த முகத்துடன்

 இயக்கிக் கொண்டு இருந்தார். இயக்குநராக பிரபலமாகாத காலம். 


வீரராகவன் எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் காணப்படுவார். 

படங்களில் கூட பொதுவாக சிரித்த முகத்துடன் தான் ஜட்ஜாக, வக்கீலாக, டாக்டராக,

 போலீஸ் ஆஃபிசராக, அப்பாவாக, 

பெரிய மனிதராக நடிப்பார். 


மேஜருக்கு பெரிய குளம் சொந்த ஊர். 

வீர ராகவன் சொன்னார் " நான் கும்பகோணம்"


உடனே நான் இலக்கியம் பேச ஆரம்பித்தேன். 

அவர் கு. ப. ரா, மௌனி, தி. ஜானகிராமன் படித்திருக்கிறார். திரிலோக சீதாராம் கூட அவருக்கு அறிமுகம். 

தமிழ் படங்களில் துணை நடிகர் ஒருவர்

 எம். வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு பற்றியெல்லாம் பேசியது வித்தியாசமாக இருந்தது. 


ஒரு நடிகராகவே அவர்  பேசுகையில் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. 

ஒரு பெரியவரிடம் அளவளாவிய திருப்தி.

Coincidence in a surprising way

திருப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் அப்போது அங்கே பாங்க் மேனேஜராக இருந்த சரவணன் மாணிக்கவாசகம். 

தானே ராஜா, தானே மந்திரி என்று வாழ்ந்து விட்டு எப்படி இனி கை கட்டி வேலை பார்க்கப் போகிறேன் என்ற கலக்கம் சொல்லி முடியாது. 

பதற்றம் அதிகமாய் இருந்தது. 


பெரும் பொருளாதார வீழ்ச்சி வீழ்த்தி விட்ட நிலையில் வேறு வழியுமில்லை. 


சரவணன் பேங்க் கிளம்பும் போது ஒரு போன். 

எங்கள் இருவருக்கும் நண்பன் பேசியிருக்கிறான். 

"சரவணா, என்னய்யா இது. தோழர் (என்னைப் பற்றி தான் குறிப்பிடுகிறான்) எப்படிய்யா கை கட்டி வேலை பார்ப்பான். கனவுலயும் நடக்காதுப்பா. 

கோபத்தில சட்டுனு எவனாயிருந்தாலும் கைய நீட்டிடுவானேய்யா. நம்பவே முடியல "


சரவணன் மையமாக 'இல்லண்ணே, தோழரோட நெலம. வேற வழியில்ல' 


'என்னமோய்யா, அவனப்பத்தி ஒனக்கு தெரியாததா?" 


சரவணன் மீண்டும் விளக்கம் சொல்லி முடித்து திருப்பூர் டிராபிக்கில் இருபது நிமிடத்தில் 

காரில் பேங்க் சேர்ந்த பின் ஒரு போன் கால். 

அதே நண்பன் தான். "யோவ் சரவணா, தோழர் வேலைக்கு சேர்ந்திருக்கிற கம்பெனிக்கு இப்ப நீ போன் போட்டுக் கேட்டுப் பாருய்யா. இன்னேரமே தோழர் நிச்சயமா கோபத்தில எவனயாவது அடிச்சிருப்பான்யா!" 


பஞ்சம் பிழைக்கப் போயிருந்த திருப்பூர் வாழ்க்கையை எதிர் கொள்ள மனதை எவ்வளவு திடப்படுத்தினாலும் தேம்பி அழும் நிலை. 

கோபத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற சங்கல்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். 

ஆனால் என் கோபம் impulsive act. 

கலக்கமும் பயமும் பதற்றமும் நிரந்தரமான விஷயம். 


.. 


ஆஃபிஸில் மூன்றாவது கேபினில் இருந்த போது ஒரு போன் கால். அது முதல் கேபினில் இருந்த ஒருவருக்கு. நான் அந்த கால் அங்கே போகும் படி டிரான்ஸ்பர் செய்தேன். அந்த நபர் மற்றொரு போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் 'உங்களுக்குத் தான்' என்று சைகையால் தெரிவித்தேன். 

அந்த ஆள் மற்றொரு போனில் தொடர்ந்து பேசி வைத்து விட்டு என்னிடம் 'நான் ஒரு போனில் பேசிக்கொண்டிருக்கும் போது எப்படி இன்னொரு கால் டிரான்ஸ்பர் செய்யலாம்' என்று கோபமாக சத்தமிட்டு, சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆட ஆரம்பிச்சிட்டார். 

மனதை உறைய வைத்துக் கொண்டு கண்ணை மூடி அவமானத்தை ஜீரணித்தேன். 


ஒரே வாரம். செய்தித்தாளில் பரபரப்பு செய்தி. 

அந்த நபர் புகைப்படத்துடன். கடன் கொடுத்த ஒரு முதிய கிழவியை கொலை செய்து விட்டார். கொலை செய்து சாக்கில் பிணத்தைப் போட்டு மறைத்து, பிடி பட்டு கைது. 


.. 


எதிர் கேபினில் இருந்து ஒருவர் "சார், இங்க வாங்க" என்று கூப்பிட்டார். தோரணையில் அது வெட்டிப் பேச்சுக்குத் தான் என்று தெரிந்தது. 

அதோடு எனக்கு வேலையுமிருந்தது. 

"எனக்கு வேலை இருக்கு " என்றேன். 


அந்த ஆளுக்கு கௌரவப் பிரச்சினையாகி விட்டது. 

" சார், இனிமே இந்த கேபினுக்குள்ள நீங்க நொழஞ்சா கால வெட்டுவேன் சார் "என்று சீரியஸா கோபமாக சத்தமா ஒரு சவுண்டு. 


அவமானத்தால் துடித்துப் போனேன். 


ஒரு பத்து நாள். அந்த நபரை கட்டு விரியன் கடித்து, சீரியஸாகி.. விதி முடிஞ்சவனத் தான் கட்டு விரியன் கடிக்குமாமே. 


ஆஸ்பத்திரி, படுக்கைன்னு ஆறு மாதம் படாத பாடு பட்டு  அந்த ஆளு பொழச்சிட்டாலும் பழைய ஆளாயில்ல. 


...


என் தலைப்பு 'Coincidence in a surprising way'  என்பதே இவை தற்செயலானவை என்று வலியுறுத்துகிறது. 


Things just happen. Things doesn't happen for a reason. 

ஆனால் ஜப்பானிய விஞ்ஞானி மிச்சியோ காக்கு (Michio Kaku) சொல்கிறார் :

Everything in this universe is governed by an intelligence, not by chance 


அவர் சொல்லும் இன்னொன்று :

For those who believe, 

no explanation is necessary;

 for those who do not believe, 

  no explanation will suffice.

.. 

Oct 2, 2021

ஆன்ம லாபம்

 


நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.


உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்? 

மது, புகை, சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்? 

என்ன லாபம் கண்டாய்?”


என் பதில் : “ஆன்ம லாபம்”




தெய்வ நம்பிக்கையும் கூட

 இல்லாமல் தான் இருக்கிறேன். 


கட்டிப் பார்

 கட்டிப் பார் 


பால்கனியில் இருந்து காணக்கிடைக்கும் காட்சி. 

Shattered Expectation. A broken dream. 


அஸ்திவாரத்துடன் சற்றே எழும்ப முயன்று கால்வாசியாய் குறைப்பட்ட வீடு. 

வான் நோக்கி ஐய்யோவென்று நீட்டிய கம்பிகள். 

சுற்றிலும் மழை நீர். 

பக்கத்தில் 

ஒற்றை மூங்கில் மிஞ்சிய 

சிதைந்து மக்கிப் போன குடிசையில்

 இப்பவும் கூட

 ரெண்டு மூணு வீணான சிமெண்ட் மூட்டைகள். 


A wrong understanding of construction. 

Miscalculation.


https://m.facebook.com/story.php?story_fbid=3156625371217574&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3142252262654885&id=100006104256328

Sep 30, 2021

வெற்றி கொண்டான்



1973ல்மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :


கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார்


 " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற."


மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே. 

அது தான என் வேலை. 

திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான். 

இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே.


கடவுள் : மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து. கலைஞரை திட்டாதே .


மோகன் : முடியாது கடவுளே.


கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே?


மோகன் : ஆமா கடவுளே..


கடவுள் : திட்டுவ நீ?


மோகன் : ஆமா திட்டுவேன்.


கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்லே.


எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆன போது                 நடந்த விஷயம்.


 எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி

 ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது,

 நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' 

என என்னத்தையோ உளறினார். 


உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி. 


" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான். காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா!

 இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே.

நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே

 " ஏலே, டேய் நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன்.

அவன் பதறிப் போய்

 " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான். 

குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்"


(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)


குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .


எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக 

" ஆம். டெல்லியில் மன்றாடிய பரம்பரை."என்றார்.


அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். 

அவர் அழுது கொண்டே சொன்னார்.

" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா 

சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''

" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள்?"ன்னு 

நான் கேட்டேன்.


பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம் முதலியார் தான் 

எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா 

என்ன செய்யறது?"


தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள். 

ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி

 வெற்றி கொண்டான் :

 மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன்.’ 


அப்படி சொன்னது தான் தாமதம். 

அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல்.நல்ல பெரிய ஓட்டல். 

நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன். 

அவன் சொல்வான்.

" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "


 ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான்." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "


( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே, உடனே உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான். ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம்.)


நாவலர் நெடுஞ்செழியன் பற்றி 

வெற்றி கொண்டான் : 

“அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே.

 நல்லா நெடு,நெடுன்னு, கொழு,கொழுன்னு .. 

அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.”


 2001ல் திருச்சி திமுக கூட்டமொன்றில்  ஜெயலலிதாவின் வீடு பற்றி 

வெற்றி கொண்டான் : டேய், உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. 

வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். 

அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். 

அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான் 

 உன் தலைவியோட ' வேதா நிலையம்.'


கூட்டத்தில் முன் வரிசையில் ஸ்டீல் சேரில்  அமர்ந்திருந்த தி.மு.க மகளிர் அணியினர் உடனே எழுந்து, முகம் சுளித்தவாறு, அவசர அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.


“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”

- EPICURUS


... 


மீள் 2009

காதல் காதல் காதல்




17,18,19 வயதிலெல்லாம் என் வாழ்க்கை 

காதலில் ரொம்ப பிஸியாக கழிந்தது. 


அந்த பதினேழு வயது காதலில் 

கோவிலில் நிஜமாகவே 

திருமண சம்பிரதாயத்தை 

அந்த பெண்ணுடன் விளையாட்டாக

 செய்து பார்த்தேன். 

அதாவது கோவிலில் கல்யாணம் என்றால் 

என்ன செய்வார்களோ அந்த சடங்கை. 

எல்லோரும் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது அந்த காரியத்தை தைரியமாக 

அவளிடம் செய்து விட்டேன். 

யாரும் கவனிக்கவில்லை .


அடுத்த அந்த பதினெட்டு வயது காதல் விஷயம் கொஞ்சம் பரபரப்பாகிவிட்டது. 

அமெரிக்கன் காலேஜ் சரித்திரத்தில் 

ஒரு காதல் விவகாரம் 

இந்த அளவுக்கு பகிரங்கமாக கேவலப்படவில்லை என்று சீனியர்கள் அபிப்ராயப்பட்டார்கள்.


அந்த பெண்  லேடி டோக் காலேஜ்.

அவள் அண்ணன் எங்கள் காதலை

 பெரிய காட்சியாக்கி 

முரட்டம்பத்திரி, கரிமேடு சல்லிகளுடன் வந்து கட்டை பஞ்சாயத் ஆக்கி

 அவள் தான் என்னை சினிமாவுக்கு கூப்பிட்டாள் என்பதை அவளே ஒத்துகொண்டவுடன்...

 அவளை அவமானப்படுத்தி... 

 நூற்றுக்கணக்கான பேர் பார்த்துகொண்டிருந்தார்கள். 

சினிமாவில் காட்டுவார்களே ...அப்படியே தான்.


அப்போது அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்தவர்களில் ஒ சீ பி எம் பள்ளி காம்பௌண்டில் இருந்து கவனித்த 

அந்த என் பத்தொன்பது வயது காதலியும் இருந்தாள். இவள் தான் என் அடுத்த வருட காதலி.


 லேடி டோக் பெண்ணுக்கு ஒரு கவிதை எழுதினேன். அதற்கு திருச்சி பள்ளியில் ஜேசு ராஜா (பின்னால் இவர் பாளை புனித யோவான் கல்லூரி ஆங்கில பேராசிரியர் ) எனக்கு சொல்லி தந்திருந்த ராகத்தில் பாடி

 கல்லூரியிலும் பின் அனைத்து கல்லூரி

 பாட்டு போட்டியிலும் பரிசு வாங்கினேன்.


"சிரிக்க வைத்தேன் அது தவறென்றால் உன்னை

அழுக வைத்தேன் அது சரிதானா?

நீயில்லை என்றால் காலமெல்லாம் உன்

நினைவு வந்து மொழி சொல்லுமே .


இருக்கின்ற நீ எனக்கு இல்லையென்றால்

 அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே

உன் மனம் புண் பட இறைஞ்சுகிறேன் - என்

அகமே நெகிழ மறந்து விடு . "


இது தான் அந்த பாடல் .


அடுத்த வருடம் என்

 பத்தொன்பதாவது வயது காதலில்


"உன்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் சேர்த்து வைப்பார்!

என்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார்! "


O My Love!


If it is possible, pass from me


Nevertheless, Not as My will


But as thy God’s will.


நான் அப்போது எடிட் செய்து வெளி வந்த

 " மரத்தடி மகா ராஜாக்கள் " நூலில் "கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும் " என்ற வசன கவிதையில் இடம் பெற்றிருந்த 

ஒரு சில வரிகள் மேற்கண்டவை.


இப்போது ஏன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதவில்லை என்று பலரும் கேட்கிறார்கள் . யோசித்தால் கல்லூரி வாழ்வோடு கவிதையை நிறுத்தியிருக்கிறேன். 

காரணம் ... கவிதை என்றாலே 

எனக்கு காதல் கவிதை தான் எழுத முடிந்தது. அதனால் தான் சலித்து போய் ச்சேன்னு

 நிறுத்தி விட்டேன்.


அதனால் தான் தெம்பாக இப்படி 

என்னால் எழுத முடிந்தது இப்போது. 


EXCESSIVE CREATIVITY - -


...Eureka! Eureka!!


Except R.P.Rajanayahem,all other Tamil men and women are writing poems.


Either poems or stories!


Out here almost everybody says'

"I am writing a novel" or " I have an idea to write a novel."


கவிதையை தான் விட்டேன். 

காதல் எல்லாம் அப்படியே இருக்கிறது. 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 

ஆரம்பம் பத்து வயது பிள்ளை காதல். 

கைகட்டு கால்கட்டோடு பாடையில் போகும்போது தான் காதலும் போகும்.


.....................


மீள் 2008