என்னுடைய மாமனாரின் மூத்த அண்ணன்
எஸ். எம். டி. ராஜகோபால்.
இவருடைய மனைவி சிவகாசி அத்தை.
சிவகாமி அத்தையின் தந்தை திண்டுக்கல்
முருகன் டிரான்ஸ்போர்ட் ஓ. சின்னச்சாமி பிள்ளை.
காங்கிரஸ்காரர். 1967 தேர்தலில் திண்டுக்கல்
சட்டசபை காங்கிரஸ் வேட்பாளர்.
கம்யூனிஸ்ட் ஏ. பாலசுப்ரமண்யத்திடம் தோற்றார்.
ராஜகோபால் மாமா கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்கவர். முறைப்படி சங்கீதம் படித்தவர்.
கச்சேரி செய்யும் ஞானம் கொண்ட ஞானி.
சங்கீத ஈடு பாடு காரணமாக இளைஞனாக இருக்கும் போதே 'தங்க மாளிகை' நகைக்கடையில் ஏதேனும் ஒரு கீர்த்தனையை கள்ளக்குரலில் பாடிக்கொண்டு,
தொடையில் தாளமும் போடுவார்.
தாத்தா தங்க முடியா பிள்ளை " டேய் வியாபாரக்கடையில் தொடையில் தாளம் போடாதே" என்று கண்டிப்பாராம்.
உறவில்லை என்றாலும் கர்நாடக சங்கீத மேதை மதுரை சோமு
இவரை 'மருமகனே' என்று செல்லமாக
அன்போடு விளிப்பார்.
எனக்கு திருமணம் முடிந்து ராஜகோபால் மாமா,
சிவகாமி அத்தையுடன் தான் அவர்கள் காரில்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு பொண்ணு மாப்பிள்ள வந்தோம். மறு நாள் மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு எங்களை சிவகாமி அத்தை அழைத்துக் கொண்டு போனது இன்றும் ஞாபகமிருக்கிறது.
மிக கண்ணியமான அற்புதமான சிவகாமி அத்தை.
தாய் மாமா மகளை பாபு மணந்தார்.
ராஜகோபால் மாமா மகன் பாபுவும்
எங்க பெரியப்பா மகன் ஆரோவும் (இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தம்பி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களாக சில வருடம் ஒன்றாக படித்தவர்கள்.
ஒரு நாள் பாபுவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது
பாபுவின் தங்கை சுஜி மாப்பிள்ளை சிவகுமாரின் சொந்த அத்தை மகள் தான்
பிரபல சினிமா நடிகை ஹீரா என்பதைப் பற்றி பேச்சு வந்தது.
பாபு "அத்தான், அவங்க எல்லாம் பாத்தீங்கன்னா நெருங்கிய சொந்தமாய் இருந்தாலும் உறவுல ரொம்ப இடைவெளி. ரத்த சொந்தம்னாலும் பெரிசா அன்பு, பாசம், பிரியம் காட்டும் பிணைப்பு எதுவும் கிடையாது."
நான் சொன்னேன் "இங்க மட்டும் என்ன மாப்ள,
நாமளும் அப்படித்தான இருக்கோம்"
ராஜகோபால் மாமா மறைவுக்குப் பின்னர்
திருப்பூரில் இருக்கும் போது
பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்
மாப்ள பாபு
போனில் என்னிடம்
" அத்தான், ஒங்க பெரியப்பா மகன் பாலு கிட்ட ( ஆஸ்திரேலியா ஆரோவின் அண்ணன்
கிரிமினல் லாயர் பால்ராஜ்) இங்கருந்து மூனு பேர திருச்சிக்கு ஒரு கேஸ் விஷயமா அனுப்பியிருந்தேன். பாபுன்னு எம்பேர அவங்க சொன்னவுடனே அவங்களுக்கு தேவையான சட்ட உதவியெல்லாம் ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு பாலு அத்தான். என் பேர சொன்னதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் பாத்துக்குங்க. இங்க அவங்க வந்து ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. "
ஏனோ அன்று வழக்கத்தை விட மிக நீண்ட நேரம் பாபு என்னிடம் போனில் அன்போடு பேசியதை மறக்க முடியவில்லை. பாபுவின் இயல்புக்கு இது வித்தியாசமாயிருந்தது.
அடுத்த வாரம் எனக்கு ஒரு போன்.
எஸ். எம். டி. ஆர். பாபு கார் விபத்தில் மரணம்.
.....
முதல் புகைப்படத்தில்
S. M. T. R. பாபுவின் திருமணத்தில் நாங்கள்
இரண்டாவது புகைப்படம் ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் என்னுடன் பாபு
மூன்றாம் புகைப்படம்
ஜெமினியுடன் என் அப்பா பேசும்போது முன்னால் உட்கார்ந்திருக்கும் பாபு.
நான்காவது புகைப்படம் திருச்சி பிரபல வழக்கறிஞர் ஜேசு பால்ராஜ்.
.....
https://m.facebook.com/story.php?story_fbid=3170718109808300&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=3172367679643343&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=3164234097123368&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.