பட்ட மரம்
"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப் பூத்து நின்ற மரமில்லை அது இப்போது.
இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன.
இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது.
புறத்தையும் துயர கறையான்
சாரி வைத்துத் தின்று கொண்டிருக்கிறது.
பலமாக ஒரு காற்று வீசினால் போதும்.
மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."
- தி. ஜானகிராமன் 'வெயில்' சிறுகதையில்
..........
"அந்த பட்ட மரம் தனிப்பட்டு,
தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது..
ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"
--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
..........
"காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன்.
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன்.
குயிலுக்கும் கிளிக்கும்
என்னிடம் வேலையில்லை.
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல்
படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன்.
ஒடுங்கி விட்டேன்.
காய்ந்து விட்டேன்."
--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்
...
https://m.facebook.com/story.php?story_fbid=2909001515979962&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2912726525607461&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.