Share

Oct 15, 2021

1992 ல் ஒரு ஷூட்டிங் போது

 1992ல் ஒரு பட ஷூட்டிங் போது. 


கையை கட்டியவாறு நான். 

 ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர். 



புகைப்படத்தில் என்னை அடையாளம் தெரிகிறதா? 


கையில் வாட்ச் கட்டிய, 

திரும்பி அந்த பக்கம் பார்க்கும்

 கேமராமேன் எம். சி. சேகர். 


கேமராவுக்கு முன் கதாநாயகன், கதாநாயகி,               அம்மா நடிகை மூவரும் ஷாட்டுக்காக 

நின்று கொண்டு இருக்கிறார்கள். 


புகைப்படம் என்னை கவர் செய்து, எனக்காகவே                        ஸ்டில் போட்டோ கிராபரால் எடுக்கப்பட்டுள்ளது. 


பின்னால் சில வருடங்களுக்குப் பின்னர் 

2000, நவம்பரில் 

வீரப்பன் பிடியில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தி பழ. நெடுமாறனால்

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்டு வரப்பட்டவுடன்

இந்த பண்ணையில் தான் 

உடனே, உடனே தங்க வைக்கப்பட்டார். 


 அன்று மேட்டூரில் இருந்து இங்கே ஷூட்டிங்குக்காக காரில் கிளம்பி 

காலை ஆறரை மணிக்கு வரும் போது 

நடந்த சம்பவம். 


முந்தைய நாள் நெரிஞ்சிப்பேட்டையில் 

இரவு பன்னிரெண்டு மணி வரை 

ஷூட்டிங். எனக்கு செம அலுப்பு. 


டாக்ஸிகளை லோக்கலில் தான் படக்கம்பெனி

 புக் செய்வார்கள். 


காலையில் டாக்ஸி ஓட்டிய டிரைவர் 

நல்ல களைப்பு. 


காரில் முன்னால் டிரைவரருகே உட்கார்ந்திருந்த என்னிடம் 

'ராத்திரி பூரா தூங்கல சார்' என்றார். 


"ஏங்க? "


" சந்தன வீரப்பன் சட்டென்று வந்து, என் அருகில் உட்கார்ந்து 'வண்டிய எடு' ன்னு சொல்லிட்டார். 

அவரு சொன்ன எடங்களுக்கெல்லாம் டிரைவரா இந்த வண்டில நான் போனேன். இப்ப நீங்க ஒக்காந்திருக்கிற எடத்துல தான் 

அவர் உட்கார்ந்து இருந்தாரு ராவெல்லாம். "


" நல்லா பெரிய தொக வாடகையா 

கொடுத்தாரு சார். எப்பவும் எந்த கார்ல எறுனாலும் காசு பெருசா தான் குடுப்பாரு. "


கார்ல டேப் ரிக்கார்டர்ல செம்பருத்தி பட பாடல்

 " பட்டுப்பூவே மெட்டுப் பாடு, "


பின் சீட்டில் மூன்று பேர், நடிகையிருவர், 

ஒரு ஹேர் டிரெஸ்ஸர், 

நடிகைகள் உற்சாகமாக 'பட்டுப்பூவே மெட்டுப்பாடு' உற்சாகமாக லயித்து கூடவே கத்தி பாடிக்கொண்டு இருந்தார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.