R.P.ராஜநாயஹம் யார்?
பழனிவேல் வெங்கட் பார்வையில் :
ஆங்கிலமொழித் தேர்ச்சியின் பயனாக அயல் பிரதேச சிறந்த கலை, இலக்கியங்களை வாசிப்பு அனுபவமாக பெறுகின்ற வாய்ப்பு கிட்டியது ஒரு சிறப்பு.
அதே போல் தமிழ் இலக்கிய சூழலில் நவீனத்துவம் வரை ஆழ்ந்ததொரு ரசனையும்,பயிற்சியும் பெற்றிருப்பதும்
கூடுதல் சிறப்பு.
ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் அங்கீகரிப்பும் நட்பும் உங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு வரமே.
இது எல்லாவற்றையும் தாண்டி கர்நாடக,இந்துஸ்தானி போன்ற இசையை ஆழ்ந்த ஈடுபாட்டோடு மனம் லயித்துப்போய் கிறங்கிய அனுபவம் தங்களைப்போன்ற சிலருக்கே வாய்க்கும்.
வாழ்க்கையின் நானாவித அனுபவங்களையும் எழுத்தில் சுவைபட கொண்டுவருவது எல்லோருக்கும்
சாத்தியம் அல்ல.
தங்களை இனிமையானவராக உணரும் ஏராளமான
இதயங்கள் உண்டு.
எழுத்தின் வழி உறவுகள் தொடரட்டும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.