மதுரையில்
அப்ப ஹார்வி நகர்ல வீடு.
ஹார்வி நகரிலிருந்து வெளிய வந்து ஏ.ஏ.ரோட்டுல திரும்புறேன்.
எதிரேயுள்ள
ஒரு வீட்டுல வெராண்டாவில
பாஸ்கர் ( நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இளைய சகோதரர்.) பாண்டியன் ( பாஸ்கரின் மூத்த சகோதரர் டி.எஸ்.பி கதிர் வேலு வின் மகன் ) நிற்பதைப் பார்த்தவுடன்
ரொம்ப சந்தோஷமா
நான் " என்னண்ணே, பாஸ்கர்ணே, பாண்டி, இங்கே ? "
பாண்டியன் " அண்ணே!
சித்தப்பா, இங்க பாருங்க கேபி."
பாஸ்கர் " தம்பி, எப்டியிருக்கீங்க "
அவர்களிடம் "வாங்க எங்க வீட்டுக்கு"
பாண்டி " இங்க இந்த வீட்ல ஒரு பஞ்சாயத்து "
அந்த வீட்டில் எனக்கு தெரிந்தவர் கிடையாது. ஒரு வக்கீல் வீடு. தினமும் போகிற வருகிற பாதை.
பாஸ்கர் அந்த வீட்டிற்குள் உள்ளே பார்த்து "அவர எங்க, ஒடனே நாங்க பாத்தாகனும்"
பாஸ்கர், பாண்டியன் இருவரும் அந்த வீட்டின் விருந்தினர்களாக வரவில்லை. சொல்லப் போனால் சிக்கல்.
நாங்கள் பல வருடங்களுக்குப் பின்னர் இப்படி தற்செயலாக சந்தித்துக் கொண்ட விஷயமானது
ஒரு தர்ம சங்கடம்.
Embarassing situation.
அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில். பெண்கள் இவர்கள் சொல்வதை சத்தம் போட்டு மறுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த குடும்பத்தில் இருந்து வெளி நாடு போன ஒருவரிடம் அங்கேயிருந்த யாரோ பாஸ்கரிடம் எதையோ கொடுக்கச் சொல்லி கொடுத்தனுப்பியிருக்கிறார். இந்த வக்கீல் குடும்பம் அதை பாஸ்கரிடம் கொடுக்காமல் மறைத்து விட்டார்கள்.
அந்த நேரத்தில் நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.
அந்த வீட்டில் நின்று கொண்டிருந்த பாஸ்கரும், கதிர் வேலு டி.எஸ். பியின் மகன் பாண்டியனும் என்னோடு
கல கலப்பாக பேச முடியாத இறுக்கமான அபத்த சூழல்.
ஒரு கால் மணி நேரம் அவர்களோடு நெருப்பில் நிற்பது போல் இருந்த பின் அன்று நான் விடை பெற வேண்டியிருந்தது.
பாஸ்கர் மறைந்து விட்டார்.
மூன்று வருடங்களுக்கு முன் ட்ராட்ஸ்கி மருதுவின் தங்கை மகன் திருமணம் சென்னையில் நடந்த போது கூட பாண்டியனை நான் சந்திக்க வாய்க்கவில்லை.
மறைந்த கதிர்வேலுவின் குடும்பத்தாரை மருதுவின் தங்கை
காட்டி அறிமுகப் படுத்தினார்.
பாண்டியன் அந்த திருமணத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது.
ட்ராட்ஸ்கி மருது, திலகர் மருது, போஸ் மருது கூட தங்கை மகன் திருமணத்திற்கு வரவில்லை.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
பின்னர் கூத்துப்பட்டறை போர்ட் மீட்டிங் கலந்து கொள்ள ட்ராட்ஸ்கி மருது வந்திருந்த போது
நான் "என்னண்ணே?"
ஓவியர் மருது " அதான், எங்களுக்குப்
பதிலா நீ தங்கச்சி மகன் கல்யாணத்துக்கு போயிட்டியே!"
....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.