Share

Nov 16, 2021

காதலிக்க நேரமில்லை காமெடி சமாச்சாரங்கள்

ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை காமெடி எந்த அளவுக்கு பிரபலம்?
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா 
செம ஹிட்.

இதனால் அடுத்த வருடம் வெண்ணிற ஆடையிலும் இதே பாணியில் காமெடி காட்சிகள்.

கோபு தான் இங்கேயும் காமெடி வசனங்கள்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அப்பா பிள்ளை பாலையா - நாகேஷ்.

வெண்ணிற ஆடையில் 
அப்பா பிள்ளை மாலியும் 
வெண்ணிற ஆடை மூர்த்தியும்.

இதிலேயே இந்த பட காமெடி 
படு தோல்வி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காதலிக்க நேரமில்லையில் 
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா படம்
எடுக்கிற மிதப்பு.

வெண்ணிற ஆடையில்
" மூர்த்தி தொழிற்சாலை" 
பெரிய பிரமாண்ட தொழிற்சாலை நிறுவுகிற கனவுடன் மூர்த்தி.
படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பெயரே மூர்த்தி தான்.

பிசுபிசுத்துப் போன சப்பை காமெடி.

 இந்த வெண்ணிற ஆடை படம் 
வெளி வந்த நான்கு மாதங்களுக்கு பிறகு எல்.வி. பிரசாத் 'இதய கமலம்' ரிலீஸ்.

சூப்பர் ஹிட் பாடல்கள்.

இந்த பட காமெடியனை (ஆரணி ராமசாமி ? இதயக் கமலம் உதவி இயக்குநர்) எங்கே எல்.வி. பிரசாத்  கண்டு பிடித்திருப்பார், தெரியவில்லை. 
காமெடி செய்கிறேன் பார் என்று  பெருமையாக தானே சிரித்த மூஞ்சியுடன் காமெடியன்.

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் தான் கதாநாயகன்.
 பின்னாளில் இவருடைய மனைவியான ஷீலாவுக்கு 
படத்தில் ஜோடி அந்த இளிச்ச மூஞ்சி காமெடியன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த ஜயண்ட் டி.எஸ். பாலையா                       இதய கமலத்தில்  காமெடியனுக்கு மாமா.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷுக்கு மாமனாராய் நடித்த பிரபாகர் இதில் 
'சின்ன புத்தி சிவா'வாக.

எல்.வி.பிரசாத்துக்கு எல்லோரையும் ரசித்து சிரிக்கச் செய்த 'ஸ்ரீதர் பட பாலையாவுக்கு  நாகேஷ் பேய் கதை சொல்கிற காமெடி சீன்' பிடித்துப் போய் இதய கமலத்திலும் 
பாலையாவுக்கு காமெடியன் பேய்க்கதை சொல்லுகிற காமெடியை வைத்து விட்டார். 

இயக்குநர் ஸ்ரீகாந்த் என்று டைட்டில்.
ஆரூர்தாஸ் வசனம்.


காதலிக்க நேரமில்லையில் 
பேய் கதை  ஒரே சீன். 
இதய கமலத்தில் பேய் சமாச்சாரம் ரெண்டு சீன். 

பாலையா இருந்து என்ன பிரயோஜனம்? நாகேஷ் இல்லையே.
 நாகேஷே ஒரு வேளை இதய கமலத்தில் வந்து பேய் காமெடி செய்திருந்தாலும் repititionல் நல்லாவா இருக்கும்?

..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.