Share

Oct 2, 2012

Faust,The Outsider,

Sep 1, 2008

கதே தன் இளமை துவங்கி மரணம் வரை எழுதிய நாடகம்

74 வயதிலே கதே ஒரு சிக்கலை எதிர்கொண்டான். ஒரு பெண் .அவளுக்கு 19வயது தான். அவள் மீது சீரியஸாக காதல் வந்து விட்டது . அவளை விரட்டிக்கொண்டு போயும் பிரயோஜனம் இல்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது .
அந்த சோகத்தை தான் The Marienbad Elegy கவிதையாக வடித்தான் .

கதே Faust காவியத்தை 23 வயதில் எழுத ஆரம்பித்து 82 வயதில் இறப்பதற்கு முன் முடித்து விட்டான் . 1832ல் இறந்தான் .இரண்டு பாகங்கள் கொண்ட Faust எழுதி முடிக்க எவ்வளவு காலம்! Faustஒரு ரசவாத நாடகம் . ஜெர்மன் மொழியில் இவன் இதை எழுதினான் . 

140 வருடத்திற்கு முனனதாக கிறிஸ்தொபேர் மார்லொவ் ஆங்கிலத்தில் Dr.Faustus எழுதிவிட்டு 29 வயதில் இறந்து போனான் என்பது முரண் நகை .
மார்லோவின் நாடகத்திற்கும் , கதே யின் நாடகத்திற்கும் நிறைய மாறுதல் உண்டு .
கதை நாயகன் Faustus விலக்கப்பட்ட அறிவை தேடுபவன் .மாயாஜாலம்,ரசவாதம் இவற்றில் விற்பன்னன் . மார்லொவ் இவன் கதையை நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தமாக வடித்தான் .
முடிவு கதை நாயகனின் வீழ்ச்சி . சாத்தான் Mephistopheles வில்லனாக மார்லோவின் நாடகத்தில் வருவான் . அதே சாத்தான் ஒரு சேவகனாக கதே யின் நாடகத்தில் இருப்பான் .
59 வயதில் கதே தன் நாடகத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டான் . இதில் மார்கரெட் என்ற மாசற்ற பெண்ணை மயக்கி கதைநாயகன் Faustபின் இழந்து விடுகிறான் .
தத்துவ பிரவாகமாகிய இரண்டாம் பாகத்தில் Faust ட்ராய் நகர ஹெலனை திருமணம் செய்து ஒரு இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவான் .

கதே யின் நாடகம் மேடை யில் நடிக்க வேண்டிஎல்லாம் எழுதப்படவில்லை . Faustஒரு Closet drama . ஒரு தனிமையான வாசகன் வாசிப்பதற்க்காக . சில சமயம் ஒரு சின்ன கூட்டத்தில் சிறு அறையினுள்ளே சத்தமாக வாசிக்கப்படுவது தான் Closet drama .

ஜெர்மன் இலக்கியத்தில் Faust மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது .
கதே யை மேற்கோள் காட்டாத மேதைகள் குறைவு .
கதே ஒரு Polymath !`கற்ற ஞானி .
இப்போது உலகெங்கும் பலரும் பயன்படுத்திகொண்டிருக்கும் கீழ்க்கண்ட மேற்கோள்கள் கதே யுடையன தான் .

A man can stand anything except a succession of ordinary days.

A useless life is an early death.

Live dangerously and you live right.

There is nothing worse than aggressive stupidity.

மார்லொவ் எழுதிய Dr.Faustusதிரைப்படமாக 1966ல் ரிச்சர்ட் பர்ட்டன் ,எலிசபத் டைலர் நடித்து திரைப்படமாக வந்துள்ளது .

'Was this the face that launched a thousand ships
And burnt the topless towers of Ilium
Oh, Sweet Helen Make me immortal
With a kiss
All is dross that is not Helena '

மேற்கண்ட வசனங்களை ரிச்சர்ட் பர்ட்டன் எலிசபெத் டைலரை பார்த்து பேசம் காட்சி சிலிர்ப்பானது .
கதே பற்றியும் , கதே யின் Faustகூட திரைப்படங்களாக வந்துள்ளன என தெரிகிறது .
1926 ஆண்டில் ஒரு Silent movie யும் 1941இல்All that money can buy கூட கதே எழுதிய Faust.

Dr.Faustus நாவலாகவும் Thomas Mann எழுதி (நான்கு வருடத்தில் எழுதிவிட்டார் ) 1947 ல் வெளிவந்துள்ளது

..............

Nov 27, 2008

An Anecdote in “The Outsider


ஆல்பெர் காம்யுவின்" The Outsider” நாவலில் மெர்சோ சிறையில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படிக்கிறான் .



"செகொஷ்லோவாகியாவில் ஒரு கிராமம் . அங்கிருந்து ஒரு வாலிபன் பிழைப்பு தேடி வெளியூர் கிளம்புகிறான் .கிராமத்தில் அவன் தாயாரும் தங்கையும் இருக்கிறார்கள் . அங்கே ஒரு சத்திரத்தை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இவன் இருபத்தைந்து வருடம் கழித்து நிறைய சம்பாதித்துக்கொண்டு ,தன் மனைவி ,குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பி வருகிறான் . தன்தாய்க்கும் தங்கைக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி வேறொரு சத்திரத்தில் தன் மனைவி குழந்தையை தங்க வைத்து விட்டு தன் குடும்ப சத்திரத்திற்கு வருகை தருகிறான் . அங்கே அறையொன்றில் தங்குகிறான் . அவன் தாயாருக்கும் தங்கைக்கும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை . மாலை விருந்தில் இவன் அவர்கள் பார்க்கும்படியாக தன்னிடம் உள்ள பெருந்தொகை யை தற்செயலாக காட்டுவது போல் காட்டுகிறான் . இவனுடைய தாயாரும் தங்கையும் அன்றிரவு அந்த பணத்தை கைப்பற்ற வேண்டி இவனை கோடரி யால் அடித்துகொன்று விடுகிறார்கள் . பிணத்தை ஆற்றில் போட்டு விடுகிறார்கள் .
மறு நாள் அங்கே இவனை தேடி அவன் மனைவி குழந்தையுடன் வருகிறாள் . நேற்று வந்து தங்கியவன் உன் பிள்ளை தான் என்று அந்த தாயிடம் சந்தோசமாக சொல்கிறாள் .

அந்த தாய் தூக்கு போட்டு இறக்கிறாள் . தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் ."

.....


2 comments:

  1. மறு பதிப்புகளை மீண்டும் படிக்க தந்ததற்கு நன்றி.

    AN ANECDOTE IN “THE OUTSIDER”
    அந்த கதையில் செய்திதாளில் வரும் செய்தியே ஒரு சிறுகதையாகவே இருகிறதே!

    ReplyDelete
  2. உங்கள் சிவாஜி, பந்துலு விசயம் திருடுபோய்விட்டது :) பேஸ்புக்கில் பார்த்தேன்... அழகாக உரையாடல் போல திருத்தி பதிப்பிட்டு இருக்கிறார்கள்!
    https://www.facebook.com/photo.php?fbid=272667526170167&set=a.153985838038337.20074.153944858042435&type=1

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.