Oct 3, 2008
P.D.சம்பந்தம்
தமிழ் திரை யில் ஐம்பது அறுபதுகளில் ஒரு நடிகர் இருந்தார்.
'அந்த நாள் ' வீணை பாலசந்தர் இயக்கிய பாடலே இல்லாமல் 1954 ல் வந்த சஸ்பென்ஸ் படம் . அதில் அவர் கொஞ்சம் ஓரளவு தெரியக்கூடிய பாத்திரத்தில் நடித்திருப்பார்.
அவர் P.D .சம்பந்தம் என்ற பெயருடையவர் .ரொம்ப குள்ளமான உருவம். மற்றபடி ரொம்ப சிறிய கதா பாத்திரம். எக்ஸ்ட்ரா என்று சொல்லும்படியாகவே படத்தில் தலை காட்டுவார்.
' ஆடி பெருக்கு' அறுபதுகளின் துவக்கம். ஜெமினி , சரோஜா தேவி நடித்த இந்த படத்தில் சந்திர பாபு பெண் வேடமிட்டு வரும்போது அவரை சைட் அடிப்பார்.
'அதே கண்கள் 'படத்தில் பெண் வேடமிட்டு வரும் நாகேஷை விரட்டி,விரட்டி சைட் நொறுக்குவார்.
நாகேஷ் ' ஆழாக்கு மாதிரி இருக்கிறான். அலையிறான்! ' என்று சலித்துபோவார்.
குமுதம் படத்தில் M . R . ராதா இவரை அவமானப்படுத்தும் போது சம்பந்தம் பரிதாபமாக ' டே நான் உங்கப்பாடா ' என்பார்.
P . D .சம்பந்தம் எப்போதுமே எச்சிகளைதனமான மிகவும் ஈனமான பாத்திரங்களில் தான் வருவார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில், அதற்கு முன் திருவிளையாடலில் கூஜாவாக நடிப்பார். ஓடுங்கடா என்றால் பதறி ஓடும் குள்ளர்களில் ஒருவராக நடிப்பார்.
லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில்' யாரடா மனிதன் இங்கே 'பாட்டில் சிவாஜி
' மனிதரில் நாய்கள் உண்டு ' என்று பாடும்போது காமெரா இவர் மீது தான் Focus ஆகும்.
உண்மையில் இவர் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர். எல்லா நடிகர்களுக்கும் இவர் தான் வாத்தியார். ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பது , நாற்பது, ஐம்பது, அறுபதுகளில்திரையில் பிரபலமான பல நடிகர்களுக்கும் நாடக உலகில் இவர் தான் வாத்தியார்! இவ்வளவு ஏன் கலைவாணர் N. S. கிருஷ்ணன் இவரிடம் காலை தொட்டு வணங்குவார். ஏனென்றால் நாடக உலகில் அவருக்கே இந்த சம்பந்தம் ஆசிரியர். ரொம்ப கண்டிப்பானவர்.கட்டுப்பாடு விஷயத்தில் கறாரானவர். கையில் பிரம்பு வைத்திருப்பார். அவரிடம் அடி வாங்காத பிரபலங்களே கிடையாது.
திரையில் பிரபலமான பெரிய நடிகர்களுக்கு அவர்களின் பால்ய காலத்தில் துவங்கி வாலிப காலம் வரை நடிப்பு சொல்லி கொடுத்த ஒரு Commanding Personality தன் முதிய வயதில் திரையில் மிக அல்ப கதாபாத்திரங்களில் நடித்தார் என்பது சினிமா என்னும் மாய உலகம் கண்ட,காட்டிய அபத்தங்களின் உச்சம்.
........
Nov 29, 2008
ஏ கருணாநிதி
'மாங்கல்யம் ' என்ற படத்தில்
ஏ கருணாநிதி தான் குளித்தலைக்கு செல்லவிருப்பதை வி.எம் ஏழுமலை என்ற நடிகரிடம் இரவு விடை பெறும்போது ஓட்டை இங்கிலீஷில் சொல்வார் :“Good Morning! I am going to ‘ the’ Kulithalai. Good Morning!”
குழந்தைத்தனமான காமடியன் ! அந்த விடைத்த மூக்கு அவரது காமடிக்கு மிகவும் கைகொடுத்தது .
பெண் வேடமிட்டு அவர் வந்தால் கொனஷ்டைகள் பிரமாதமாக இருக்கும் .
கதாநாயகி படத்தில் பெண் வேடமிட்டு அவர் சொல்லும் " நாங்கல்லாம் ரொம்ப கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பொம்பளைங்க " கேட்கும்போதே சிரிப்பை நம்மால் அடக்க முடியாது .
வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் பெண் வேடத்தில் அவர் மாட்டுவண்டி யோட்டும் சிவாஜிக்கு பின் உட்கார்ந்து செய்யும் கொனஷ்டைகள் !
அதே படத்தில்
"ஒற்றனாக நான் போகிறேன் அரசே " என்பார் . சிவாஜி " பொடியன் பொருத்தமானவன் "
வெள்ளையர் படையெடுத்து வருவதை தெரிவிக்கும்போது ' நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் .முடியவில்லை ' - ஏ கருணாநிதி பதட்டத்துடன் சொல்லும்போது வேடிக்கையாயிருக்கும் .
குழந்தை தனமான காமெடி செய்தவர் என்றாலும் 'பாலும் பழமும்' படத்தில் எம்ஜியார் - வி என் ஜானகி திருமணம் பற்றி அரசியல் பேசியவர் .
" ஜானகிக்காக ராமச்சந்திரன் வில்லை ஒடைக்கலயா ?"
மனோரமாவிடம் காதல் பேசிவிட்டு 'வரட்டுமா ' என்று வீட்டின் மேலே பார்ப்பார் .மனோரமா ' ஓடு புதுசா இப்பத்தான் மேலே போட்டுருக்கு . வாசல் வழியா போ ' என்பார் .
மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் கண்டக்டர் நாகேஷ் உடன் சேர்ந்து டிரைவர் ஏ கருணாநிதி அடிக்கும் லூட்டி ..
அதே கண்கள் படத்தில் மலையாளி சமையல்காரராக "யாரு செத்துபோயி " என்று திகிலுடன் கேட்பார் .
'ஆதி பராசக்தி ' படத்தில் ஒ . ஏ .கே .தேவரும் , ஏ .கருணாநிதியும் அசுரர்கள் .தேவர்களை சிறைப்பிடித்துவிடுவார்கள் . தேவகன்னிகைகளை பார்வையிடும்போது தேவர் ஜொள்ளு விட்டு சொல்வார் : தம்பி ! இந்த தேவ கன்னிகைகளை பார்த்தவுடன் தேவப்பயல்கள் மீது இரக்கம் வருகிறது ."
உடனே ஏ .கருணாநிதி அழுத்தமாக சொல்வார் : இயற்கை ! இயற்கை !
முத்து லக்ஷ்மி யுடன் ஜோடியாக இணைந்து நிறைய படங்கள் (கிட்டத்தட்ட நூறு படங்கள் ?அல்லது நூற்றுக்கும் மேல் )நடித்தவர்.
" மாமியா ஓட்டல் " என்ற பெயரில் கடைசி காலத்தில் உணவகம் நடத்தினார் .
எலும்புருக்கி நோயால் இறந்தார் .
.................
Oct 4, 2008
அழகிய மிதிலை நகரினிலே!
ஹரிநாத் ராஜா !
பானுமதி நடித்த 'அன்னை' படத்தில் அவருக்கு வளர்ப்பு மகன். தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார். தங்க தட்டில் தான் சோறூட்டி பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.
சச்சு உடன் ஹரி நாத் ராஜா வுக்கு ஒரு அருமையான பாடல். அழகான காரில்.
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்
சுமை தாங்கி யில்
எல் .விஜய லக்ஷ்மி யுடன்
'ஒ மாம்பழத்து வண்டு '
சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி. பரமசிவனாக.
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வில்லன். சிவாஜி யை குடித்து விட்டு ஹரி நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும்போது கன்னத்தில் அறைந்து விட்டார்.பாலாஜி இவரை பெண்டு கலட்டி விட்டார்.
பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லொட்ஜில் வைத்து ஒரு நாள் சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி ' இவர் யார் தெரியறதோ ? ஹரி நாத் ராஜா . ' என சுட்டினார் . ஆர்வமாக பார்த்தேன் . வசதி இல்லை இப்போது அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது . குடித்தே வீணாக போய் விட்டார் . குழந்தைகளும் இவருக்கு அதிகம் என அறிய வந்தேன் .
ஹரி நாத் ராஜா போன சிறிது நேரத்தில் நான் கிளம்பினேன் . பஸ் ஸ்டாப் . ராஜா அங்கே பஸ் க்காக நின்று கொண்டிருந்தார். நான் அவரை மீண்டும் பார்த்தேன் . தான் இன்னார் என்று எனக்கு தெரிந்து புரிந்து தான் அவரை கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து என்னை பார்த்தார். அதற்குள் பஸ் வந்து விட்டது. சரியான கூட்டம் பஸ் நிறைய . ஏறவும் பலரும் பெரும் முயற்சி எடுக்க ஆரம்பித்தனர்.
இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார் . கம்பியை பிடித்த பிடியை விடவில்லை. கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார் . கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது . பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா . கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார் . ராஜா வின் பிடி தளர்ந்து தடுமாறி கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.
'அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'
அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது!
அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார்.
உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.
அவர் அடுத்த பஸ் க்காக காத்துகொண்டிருந்தார்.
ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது
"காவிய கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "
அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ் ஐ எதிர்நோக்கிகொண்டிருந்தார்.

Wow, what a presentation!!(especially abt Harinath Raja)..RPR you ROCK man!!
ReplyDeleteஹரிநாத் ராஜா... அது யாரென்று உடனே பார்க்க தோன்றியது! இதோ அந்த பாடல்!!
ReplyDeletehttp://youtu.be/9Fd_mH4cVjo
arumayana padhivu.
ReplyDeletemudinthal avargaludiya photovinai padhindhaal avargalai theriyadhavargalukku udhaviyaaga irukkum.