Share

Oct 16, 2012

Carnal Thoughts -35


ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் நாவலில்

பரகீய தர்மம் – முறை தவறியதின் நியதி

ஸ்வகீயமானது- முறையானது

பரகீயமானது-  முறை தவறியது,சோரமானது,

முறை தவறியது தான் உயர்வானது.

….

யாக்ஞவல்கியர் –” மனைவி தன் கணவனை விரும்புவது அவன் அவளுக்குப் பிரியமானவன் என்பதால் அல்ல, சுயத்தின் மீதுள்ள பிரியத்தால்-தன் சொந்த ஆளுமை மீதுள்ள பிரியத்தால்!”

……

வலது கண்ணில் இந்திரன் இருக்கிறான்.

இடது கண்ணில் இந்திராணி. இதயம் தான் பள்ளியறை.

உறங்கும்போது இந்திரனுக்கும் இந்திராணிக்கும் கலவி நடக்கிறது. இந்த காதற்கலவியை தொந்திரவு செய்யக்கூடாது. அதனால் தான் உறங்குபவர்களைச் சட்டென்று எழுப்பவே கூடாது. அவ்வாறு எழுப்பப் பட்டவரின் வாய் ’பிசுபிசு’வென இருப்பதும் அந்த இந்திர,இந்திராணியின் இந்திரியங்கள் பெய்யப்பட்டதால் தான். இருவரின் திரவங்கள் உறங்குபவரின் வாயில் ஒன்று கலப்பதால் தான்.

ந்திரன் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி!எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்!
…..

பாலுணர்வு போல் அடிப்படையையே நுட்பமாக அசைப்பது வேறெதுவுமில்லை,ஏனெனில் அதை விட நெருங்கிய உறவு வேறெதற்கும் இல்லை.காமத்தில் ஓர் உடல் இன்னோர் உடல் மீது இயங்குகிறது.இன்னோர் உடல் இந்த உடல் மீது இயங்குகிறது.
http://www.sensiart.com/Images/Art/Sacred/Large/Krishna/Ujain.jpg
கார்த்திகை மாதத்தில் முழு நிலவு. ஒளிரும் நிலவில் இரவொன்றில் உன்னதக் காதலர்கள் கிருஷ்ணன் – ராதையின் நடனத்தைக் காண கடவுளர் – முக்கோடித்தேவர்கள் கூடினார்களாம்.நடனத்திற்கு பாட்டு பாடியவர் சிவபெருமான்.

 கேட்க அரிதான ஒரு அற்புதக்குரலில் பின் பாட்டு பாடினார் ஈஸ்வரன். பரகீயக் காதலர்களான ராதா-கிருஷ்ணனின் பின்னிப்பினையும் இரு உடல்களை,பிரகாசிக்கும் வண்ணங்கள் ஒன்று கலப்பதை உற்று,உற்று பார்த்த முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சாஃப்டான மூர்ச்சையில் தடாலென்று விழுந்து விட்டார்கள். சாவகாசமாக அவர்கள் சுய நினைவு வந்து எழுந்து பார்த்தபோது, காதல் ஜோடி உருகிப்போய்,சாந்தமாக ஓடி கங்கையில் கலக்கும் ஒரு நீரூற்றாக ஆகி விட்டார்களாம்.


……ஒரு அரசி தன் உடலை ஒரு இறந்த குதிரைக்குத் தந்து தன் தொடைகளைக் குதிரையின் கால்களைச் சுற்றி இறுக்கிக் கொள்கிறாள்.
..........

நாரதர் சிறந்த இசைக்கலைஞர்.நல்ல கதை சொல்லி என்பதோடு அவருடைய Part time job என்ன தெரியுமா?   Pimp!பெண் தரகர்!

நாரதர்: “நீங்கள் இந்த ராணிகள் அனைவரையும் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்!?

கிருஷ்ணர்: “ஆனால் இவர்கள் பெண் ஜென்மங்கள் அல்ல!”

………..

  என்றால் அறிவு. கலாஸ்ஸோவின் இந்த நாவல் இந்திய புராணீகத்தைச் சுற்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மீது குவியாமல்,ஒரு கதையையும் நகர்த்தாமல் தேடலால் நிறைகிறது.
புராணத்தை மதத்தில் இருந்து அன்னியப்படுத்துகிறார் கலாஸ்ஸோ.

’க’ ாலச்சுவெளியிட்டொழிபெயர்ப்பு நாவல்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.