Share

Oct 4, 2012

பிரியாவிடை - அருவி


Dec 10, 2008

பைரன் சொல்லும் பிரியாவிடை
பைரன் கவிதைகள் பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது.ஆனால் அவன் காதல்கவிதைகள் அனைத்தும் எப்போதும் புதியவை என்ற தகுதி அவனை பற்றி எவ்வளவு எழுதினாலும், பேசினாலும் மிச்சம் மீதி இருக்கும், இருந்து கொண்டே தான் இருக்கும்.
Fare thee well என்ற கவிதையில்
பிரிவின் துயர் காணும் பின்விழைவு
Fare thee well
Both shall live, But every morrow
Wake us from a widowed bed.

இருவரின் படுக்கையும் இனி விதவைக்கோலம் பூனவேண்டியுள்ளது!
இரக்கமில்லாத கொடூர ஜென்மம் (கல்லு மனசு-“sans merci” ) என்றாலும் கூட அவளுக்கு தான் எந்த காலத்திலும் எதிராக , விரோதியாக மாறவே மாட்டேன் என ஆணையிட்டு சொல்கிறான்.

Even though unforgiving,never
Against thee shall my heart rebel

இங்கே பல காதல்கள் மோதலில் கடும்பகையாகி பரஸ்பரம் புழுதி வாரி தூற்றுதல்களை காண நேரும்போது இந்த பைரன் கவிதை நினைவுக்கு வருகிறது.

...........

Aug 18, 2008


Incomplete "DON JUAN"........Fractional "HYPERION".....

ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான்.

பைரன் எழுதிய கடைசி காவியம்" டான் ஹூவான் ". அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல் சதி செய்து விட்டது.கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து , திருப்தி இல்லாமல் நிறுத்தினான் . மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை என்பது வேறு விஷயம் .
டான் ஹூவான் கரு என்ன ?வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம் , மரணம் ."
ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான் ......தமிழில் கொச்சையாக சொல்வதென்றால் பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள் .....
"Truth is stranger than fiction!"- இந்த பிரபலமான மேற்கோளை டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான் . அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது .
ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான் . பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள் . தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக அப்பல்லோ சொல்வான் . நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ தன் இலாக்காக்களுக்கான அதிகாரத்தை அடைகிறான் . சக்தி உபயோகம் ஆரம்பம் . இந்த இடத்தில் Celestial..என்று கீட்ஸ்
அரைகுறையாக அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே .....................நிறுத்தி இருக்கிறான் .

ஆனால்நிறைவு பெறாத இந்த இரண்டு காவியங்களுமே சாதனைகள் தான் என்பது தான் இவற்றின் சிறப்பே.


Perhaps life is Just that….a dream
and a fear ....

Dec 18, 2009


அருவி-An angel's lyrical call !

A strongman and a WATERFALL always channel their own path.

அருவியை ஒரு கவிதை " an angel's lyrical call " என்று குறிப்பிடுகிறது.

Deep in the woods I hear an angel's lyrical call !
Tranquil and serene, a majestic waterfall!


இந்த lasting natural beauty யை
A vibrant entertainer, sparkling,
Waving at the crowds,
Singing of joy and showering harmony.
என உற்சாகமாக,குதூகலமாக, சந்தோசத்தைப் பாடுகின்ற அருவியாக விவரிக்கிறது இன்னொரு கவிதை.

I baptize myself within this cleansing spray! என அருவியில் குளித்து மகிழ்ந்து பெருமைகொள்ளும் கவிஞன் உண்டு .
No blemish on past nor future

ஆங்கிலத்தில் Waterfall என்பதை தமிழில் மொழிபெயர்க்கும்போது 'நீர் வீழ்ச்சி' யாகி விடுகிறது.

"மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே " - பாரதி"நெஞ்சு படபடக்கிறது
அருவியை யாராவது
நீர்வீழ்ச்சி
என்று சொல்லிவிட்டால்."-விக்கிரமாதித்தன் எழுதியது!

'அருவியின் ஆற்றல் ' என்ற தலைப்பில் யவனிகா ஸ்ரீராம் கவிதை .
அதில் சிலவரிகள் பனி போல உறைந்து விடும் தண்மை கொண்டவை.
யவனிகா ஸ்ரீராம் எழுதிய அந்த கவிதையின் சில வரிகள் -

"உன் கேவல் ஒலிக்கும் அந்தகாரத்தில்
சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது.
உன் பிலாக்கணத்தில் மோகமுற்ற சல்லாபக் குளிர்காற்று ..."
"உன் விழிப் படலம் வெப்பமுற்றுச்
சிவக்கும் தருணத்தில்
நீல மேகம் நிலவை விந்தென சொட்டும் ."

யவனிகா ஸ்ரீராம் அருவியில் குளிக்கும் அனுபவம் அந்த விம்மியழும் நீர்வீழ்ச்சியின் சோகத்தைச் சார்ந்தது.
"நீ அழுவதானால் எப்போதும்
உன் தாயின் கண்ணீரில் இருந்து
துவங்கி விடுகிறாய்
நான் செய்வதெல்லாம் உன் உச்சரிப்பின் போதே
உன் இதழ் கவ்வி உன்னை
மௌனித்தது தான் "
..

"கவிதை ஒரு மலர் போன்றதும் வாள் போன்றதுமாகி புதிர் நிறைந்தது."
- தேவ தேவன்

3 comments:

 1. தங்களுடைய பதிவுகள் தேனாக இனிக்கின்றன.

  ReplyDelete
 2. நானும் திருப்பூரில் தான் இருக்கிறேன். உங்களை சந்திக்க விருப்பம். உங்களுடைய செல் நம்பர் தர இயலுமா. எனது செல் நம்பர் 9842409690.

  ReplyDelete
 3. ராமதுரை சார்! மிகவும் நன்றி.

  பாரதி!நேரம் கிடைக்கும்போது அழைக்கிறேன்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.