Share

Nov 2, 2009

Poramboke

Catamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். கட்டுமரம் - Catamaran. புறம்போக்கு - Poramboke .
நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய் சொல்லியும் தனித்தமிழ் புலவரே 'காப்பி' என்று தான் சொல்லும்படியாகி விட்டது!
'ஹிந்து 'பத்திரிகையில் புறம்போக்கு நிலம் பற்றி Poramboke என்றே தான் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உயர்ந்த நீதிபதி பி டி தினகரன் கதை ஈரோடு அடாவடிமுன்னாள் தமிழக அமைச்சர் ராஜாவை மிஞ்சும்படியாயிருக்கிறது . இந்த
land grabbing (197acres in Kaverirajapuram,Tiruvallur Dt.)கதையில் ,கலெக்டர் ,மேஜிஸ்ட்ரேட் துவங்கி வி.ஏ.ஒ வரை தினகரனின் அசகாயசூரத்தனம் பற்றி சொல்லி விட்டார்கள்.
காவேரிராஜபுரம் கிராமத்தார் பெரும்பான்மையோருக்கு அவர்கள் வீடு உள்ள இடத்திற்கே இன்னும் பட்டா கிடைக்கவில்லை!
இந்த பி.டி.தினகரனை நான் சிலவருடங்களுக்கு முன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது . அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது . அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்
08-07-2006
அன்று என் எம் .டி சார்பில் ஆஜர் ஆக நான் போயிருந்தேன் . அங்கே பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய தினகரனும் இருந்தார். எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார் . கேஸ் அபாண்டமான பொய் கேஸ்! இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார் . தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம் . பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார் . அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார் . ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார் . அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம் .'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார் . நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம் . தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன் . மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது . வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம் .

அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள் !
அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ் .அசோக் குமார் (கருணாநிதி நள்ளிரவு கைதில் போலீசை கிண்டியெடுத்த நீதிபதி தான் )அவர்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.



8 comments:

  1. நீதியும் சட்டமும் இந்த தேசத்தின் இரு கண்கள். (காமெடிதான்)

    கட்டபஞ்சாயத்துதான் அதன் காண்டாக்ட் லென்ஸ்.

    தேசம் இருளில்.

    ReplyDelete
  2. "இவர் நீதிபதி ஆவதற்குமுன் பல வக்கீல்களை ஓவர் டேக் செய்து குறுக்கு வழிகளை கையாண்டு நீதிபதி ஆனார். நீதிபதி ஆனா பின் பதிவாளரை வீட்டிற்கு அழைத்து விவசாயிகளிடமிருந்து அடிமாடு விலைக்கு நிலத்தை பதிவு செய்தார்". இந்த வார்த்தைகளை அவரால் ஓவர் டேக் செய்ய பட்ட ஒரு வக்கீல் என்னிடம் கூறினார்.

    இந்தியாவின் அனைத்து துறைகளிலும் இவரைப் போன்ற அடாவடி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவரைப் போன்ற ஆட்கள் இந்தியாவில் இருக்கும் வரை ஒரு மனிதனின் பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று பெரும் வரை லஞ்சம் கொடுத்துதான் தொலைய வேண்டியிருக்கிறது.

    "பிறக்கும் போதும் கொடுக்கின்றான்
    இறக்கும் போதும் கொடுக்கின்றான்" என்று பாடல் வரிகளை மாற்றி படிக்கவேண்டும்.

    ReplyDelete
  3. பெருமதிபிற்குரிய ஐயா,

    நலமா? தாங்கள் ஏதேனும் கேள்வி-பதில் பகுதி போல (வாரம் ஒரு முறை அட்லீஸ்ட்) ஆரம்பித்தால், என் போன்ற கடை கோடி வாசகனும் தங்களுடன் கருத்து பரிமாறி கொள்ள இயலுமே.

    வேலை பளுவுக்கு இடையே இந்த சிறிய பளுவையும் தூக்க இயலுமா ?

    தங்கள் அன்பு வாசகன், திருச்சி

    ReplyDelete
  4. நீதிமன்றத்தில் பொய்சொல்பவர்கள் ஐயோ என்று போவான் என்றார் பாரதி.
    நீதிமன்றமே பொய்சொன்னால்?
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  5. இடுகையின் தலைப்பு பி.டி.தினகரன் என்று வைத்திருந்தாலும் சரியே :)

    ReplyDelete
  6. நல்ல அனுபவம் .நீதித்துறை யில் ஊழல் மண்டிக்கிடக்கிறது.மற்ற தூண்களை யெல்லாம் விமரிசித்து விடமுடிகிறது.இந்த தூண்மட்டும் ஊழலுடன் அகங்காரம் கொண்டு தலைவிரித்து ஆடுகிறது.

    ReplyDelete
  7. இட்லிவடையின் இந்த வார பாடிகாட் முனீஸ்வரனுடனான chat சில விவரங்களை முன்வைக்கிறது. ஒரு தகவலுக்காக, இங்கே!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  8. அவ்வளவு சுவையாக உள்ளது உங்கள் தொடர் :-) நீதி நியாயம் எல்லாம் இந்த நாட்டில் கிலோ என்ன விலை என்று கேட்டு தான் வாங்க வேண்டும்!

    amas32

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.