உங்க ஊர் எதுங்க என்று சமீபத்தில் ஒருவரை கேட்க நேர்ந்தது . அவர் " 'பு 'நால ஆரம்பிச்சு 'டை ' யன்னாலே முடியுற ஊர் தான் என் ஊருங்க " என்றார் . "முதல் எழுத்து ' பு ' .கடைசி எழுத்து 'டை ' " என்று மீண்டும் சொன்னார் .
நான் அதீத ஆரோக்கிய பிரக்ஞை யுடன் இதை அலசி ஆராய்ந்து, இந்த மனிதர் தத்துவார்த்தமாக சித்தர் பாணியில் பேசுகிறார் போலும் என யோசித்தேன்.இவர் கொஞ்சம் வித்தியாசமான கணியன் பூங்குன்றனார்.எல்லோருக்கும் நேடிவ் ப்ளேஸ் பெண்ணின் பிறப்புறுப்பு தானே என பரந்த மனசோடு சொல்கிறாரோ என்னவோ! அவர்' யாதும் ஊரே'என்றார் . இவர்' எல்லோருக்குமே ஒரே.. ஒரே ஒரு ஊர் தான்' என இயம்புகிறாரோ?..
அவரே சஸ்பென்சை உடைத்து சொன்னார் ." புதுக்கோட்டை "
எல்லாரிடமும், எந்த ஊர் என்று யார் கேட்டாலும் எப்போதும் அப்படித்தான் சொல்வாராம்! வெடி சிரிப்பு சிரித்தார்.
புதுக்கோட்டை என்றதும் பக்கத்து ஊர் ஞாபகம் வருது . அறந்தாங்கி . அறந்தாங்கி என்றதும் அந்த ஊர்க்காரர் பால்குடி மறவா திருநாவுக்கரசர் யாருக்கும் நினைவில் வந்து விடுவார் . உண்மையில் நம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு அப்பாவிகள் !வெள்ளந்திகள் ! திருநாவுக்கரசர் பலவருடங்கள் பி ஜே பி யில் இருந்து பதவி சுகங்கள் அனுபவித்த பின் தான் அவருக்கு ஒரு பெரிய உண்மை தெரியவருகிறது . அய்யய்யோ .. பி.ஜே .பி. என்பது முஸ்லிம்களுக்கும் ,கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி! உடனே பதறிப் போய் உடனடியாக காங்கிரசில் சேர்ந்து விடுகிறார்!
விரல் சூப்பிக்கொண்டு ப.சிதம்பரத்திடம் " உங்கா ..உங்கா '' என்றாராம்.
உங்கா = தாய்ப் பால்
ஆமாங்க!
"பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு " - பாரதி
உங்கான்னா தாய்ப்பால் மட்டுந்தான்...அதைச் சொல்லலீங்களா? இது சரியான நக்கல் கட்டுரை!
ReplyDeleteதிருநாவுக்கரசு விஷயம்
ReplyDeleteஅருமை......
பதிவுக்கு பின்னூட்டமிட்டால் வீட்டுக்கு ஆட்டோ வருமாங்க!?
ReplyDeleteEthannai kalam than emarrtruvar intha nattile? intha nattile!. DMK, ADMK, BJP now with the HOLY COW Congress. May be the celebration will be in T.Nagar OLD RESIDENCY. M.S.Vasan
ReplyDeleteNote: Unable to do in Tamil
"எத்தனை கட்சி தாவியாவது மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன்னு" ஒரு முடிவாத்தான் திரியுறார் போல.
ReplyDeleteThe last two lines said it all!!!.
ReplyDeleteதலைவரே திருநாவுக்கரசரை ஓட்ட ஆயிரம் விஷயம் இருக்கு. அதுக்காக எங்க ஊரையா பு-டைன்னு ஓட்டனும்
ReplyDelete:)))
நானும் வெடித்துச் சிரித்தேன்.
அருமை
ReplyDelete