Share

Nov 18, 2009

"என்னுள்ளே " ஷங்கி ப்ளாகில்

கலிபோர்னியாவிலிருந்து

"என்னுள்ளே " ஷங்கி ப்ளாகில்2009 ,ஜூலை 3 ம்தேதி

http://wimpystar.blogspot.com/2009/07/3.html

பச்சயாப் பேசுறதுன்னா உங்க அகராதியில என்ன அர்த்தம்? காமத்தத் தூண்டற மாதிரி ஆபாசமாப் பேசறதா? என்னப் பொறுத்த வரைக்கும் பச்சயாப் பேசறதுன்னா இயற்கையா,இயல்பாப் பேசறது. பச்சை, இயற்கையின் நிறம் இல்லையா?! இன்னும் விளக்கமாச் சொல்லணும்னா நாகரீகப் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்காம மனசுல தோணுறத அப்படியே சொல்லுறது. ரொம்பக் கொஞ்சம் பேரு தான் இதைச் செய்வாங்க,ஏன்னா நிறையப் பேருக்கு இது பிடிக்காது. இல்லையா?! இந்த மாதிரிப் பேசறது பொளேர்னு பொடனில அறைஞ்ச மாதிரி இருக்கும்.கி.ரா. வோட கரிசக்காட்டுக் கதைகள் இந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம பதிவுலகில திரு R.P. Rajanayahem, இப்படி எழுதுவாரு, படிச்சிருக்கீங்களா

5 comments:

  1. :-))

    மிகவும் மகிழ்வாய் உணர்கிறேன்.

    ReplyDelete
  2. \\நாகரீகப் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்காம மனசுல தோணுறத அப்படியே சொல்லுறது.\\

    இப்படி சொன்னால் நம்மை ஒரு மாதிரியாத்தான் பார்க்கிறாங்க :))))

    என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் தங்களைப் பற்றி
    http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_18.html

    ReplyDelete
  3. சுருக்கமாக, சுவையாக. இவைதான் உங்கள் பலம். வணங்குகிறேன்.

    ReplyDelete
  4. திரு R P ராஜநாயஹம்,
    மிக்க நன்றி. அந்த இடுகையை எழுதும்போது உங்கள் ஞாபகம் வந்தது. எழுதி விட்டேன். நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல் தங்கள் ஞாபக சக்தி அபாரம். சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்கிறீர்கள்! நிறைய படித்திருக்கிறீர்கள், படிக்கிறீர்கள். மலைப்பாக இருக்கிறது!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.