இந்தியாவில் ஒன்பது பெரிய நகரங்களில் டெல்லியையும் ,மும்பை ,கொல்கொத்தா சேர்த்து,மொத்தம் எழுபது இடங்களில் இன்கம் டாக்ஸ் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது . இதற்கே அந்த மது கோடாவுக்குகின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் இன்னொரு முறை தரவேண்டும் ! ஏனென்றால் அவர் ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம் பிடித்து விட்டவர் . சுயேச்சை எம் .எல் .ஏ ஆக இருந்து ஜார்கண்ட் முதல்வர் ஆனதற்காக கின்னசில் மது கோடா இடம் பெற்றவர் .இப்போது இரண்டாயிரம் கோடி ... இதை எழுத தயக்கமாய் இருக்கிறது .. இன்னும் ஆயிரம் கோடிங்க ... என நீங்க சொன்னா .. நான் நம்பத்தான் வேண்டும் .ஹவாலா மோசடி..!
மதுகோடா சூடத்தை கொளுத்தி சத்தியம் தான் செய்கிறார் ." நான் ரொம்ப நல்லவன் .. என் பேரை இவனுங்க சதி செய்து கெடுக்கரானுங்க.. என்னை கொல்ல திட்டம் போட்டுட்டானுங்க .."
அயோக்கியனுங்க ஏசு நாதரையே கொன்னவனுங்கய்யா .. காந்தியவே சுட்ட படுபாவிங்க ... மதுகோடா கதியை நினைச்சா நெஞ்சே பதறுதே! என்ன பாடு படுத்தப் போறானுங்களோ.. தெரியலேயே .. மதுகோடாவ சிலுவையிலே அறைஞ்சிடுவான்களோ .. இல்ல ..துப்பாக்கியால சுட்டுக்கொன்னு போடுவாங்களோ .. தெய்வமே ... இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லையா ..தெய்வமே ...தெய்வத்துக்குத் தான் கண்ணே இல்லையே..


கோடாவைப் போனால் போகட்டும் போடா என்று ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு, உள்ளூரிலேயே கில்லாடிக்குக் கில்லாடிகள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா, ராஜ நாயஹம் சார்?