Share

Apr 30, 2009

நித்தம் நித்தம்

ஏதோ நிற்கிற சைக்கிள் ,பைக் , கார் , பஸ் இப்படி திடீரென்று எவனாவது எடுத்துக்கொண்டு போவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் . சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயிலை சம்பந்தமில்லாத ஆள் அல்லது ஆட்கள் எடுத்துக்கொண்டு போய் வியாசர்பாடி விபத்து நடந்திருக்கிறது .

..

IPL 20-20 கலகலக்கிறது . கிரிக்கெட் Organized loafing என சொல்வதும் உண்டு . More than a game. It’s an institutionஎன்றும் உயர்த்தி பேசுவதும் உண்டு . சீமான்கள் குதிரை ரேஸ் க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் .

....

தேர்தல் நிலவரம் . அள்ளி விடும் அரசியல். வார்த்தை பந்தல்கள் . You campaign in Poetry. You govern in Prose.

...

சென்ற சனிக்கிழமை "சோளகர் தொட்டி" நாவல் எழுதிய வக்கீல் ச.பாலமுருகன் நிகழ்த்திய உரை ஒன்றை திருப்பூரில் ஒரு நிகழ்வில் கேட்டேன் . சமூக போராளி தோழர் ச. பாலமுருகன்.

" ஒரு அரசாங்கம் , காவல் துறை போன்ற அதிகார மையங்களை எதிர்ப்பதை காட்டிலும் சிரமமானது தொழிலாளி நலனை முன்வைத்து ஒரு முதலாளியை எதிர்ப்பது " என்பதை தன் அனுபவங்கள் மூலமாக விளக்கினார் .

Apr 28, 2009

Carnal thoughts - 19


மார்கரெட் அட்வுட் சொல்வார் : "அன்பு, காதல் கிடைக்காமல் செத்தவர்கள் உண்டு . ஆனால் செக்ஸ் கிடைக்காமல் யாராவது செத்திருக்கிறார்களா?கிடையாது."
Sexual poverty என்பது பெரிய துயரம் என்று கிடையாது தானே ? விரகதாபம் தரும் துயர் உயிரை எடுப்பதில்லை .
..
இங்கே ஜெய்ப்பூர் பாலைவனத்தில் ஒருவன் சிக்கிக்கொள்கிறான் . நல்ல வறட்டு தாகம் .வயிற்று பசி . இந்தியன் என்பதை இன்னும் பிராந்தியமாக்கி தமிழன் என வைத்து கொள்வோம் . நல்ல பிராயமான வாலிபன் . கொஞ்ச தூரத்தில் ஒரு பாலைவனச்சோலை தென்படுகிறது . இவன் சந்தோசமாக அங்கே சென்று பேரீச்சை பழங்கள் நிறைய தின்று நல்ல சுவையான நீரும் பருகி பின் விச்ராந்தியாக ஒரு மர நிழலில் அமர்கிறான் . பேரீச்சை தின்றவுடன் பசி தீர்ந்தது . ஆனால் பேரீச்சை தின்றதன் காரணமாக அவனுக்கு வேறு ஒரு சிக்கல் . முந்திரி போல பேரீச்சையும் இந்திரன் தோட்டத்து விளைச்சல் தானே ?
சுருக்கமாக சொல்லி விடுகிறேன் . இவனுக்கு சக்கரை கம்பா எந்திரிச்சி நின்னுடுச்சி !காம விரகதாபம் தாங்க முடியவில்லை . அங்கே ஒரு ஒட்டகம் படுத்திருந்தது . அதை நெருங்கி கவனமாக குதத்தில் தன் குறியை செலுத்த ஒரு சின்ன முயற்சி தான் தேவை என திண்ணமாக நம்பி நெருங்கி செயலில் ஈடுபட்டான் . ம்ஹூம் ..ஒட்டகம் எழுந்து நின்று விட்டது . இவன் மனம் தளரவில்லை . மணலை குவித்து ஏறி மீண்டும் ஒட்டக புட்டத்தில் தன் குறியை நுழைக்க முயன்றான் . பாவி ஒட்டகம் தள்ளி நின்று விட்டது . மீண்டும் கீழே இறங்கி ஒட்டக புட்டத்திற்கு வாகாக மணலை குவித்து மேலே ஏறி விட்டான் . மீண்டும் ஒட்டக புட்டத்தில் குறி பார்த்து தன் குறியை நுழைக்க யத்தனித்த போது மீண்டும் ஒட்டகம் நகர்ந்து சதி செய்தது . அப்போது தூரத்தில் ஒரு பெண் . நான்கு அயோக்கிய பயல்கள் துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள் . அந்த பெண் நமீதா !"ஐயோ , என்னை யாராவது காப்பாத்துங்க . யாருமே இல்லையா ?' என்று நமீதா கதறல் பாலைவனத்தில் எதிரொலித்தது . இந்த அயோக்கிய பயல்களிடம் ஒரு கெட்ட பழக்கம் . எந்த பெண் சிக்கினாலும் ஈவு இரக்கமே இல்லாமல் கற்பை கெடுத்து விட்டு விடுவான்கள். மோசமான ரவ்டிப்பயல்கள் !
மணலை குமித்து நின்றவன் குதித்தான் . ஓடிப்போய் அந்த அயோக்கிய பயல்களை அடி வெளுத்து விட்டான் . அந்த அயோக்கிய பசங்க " மன்னிச்சிக்கங்க ! எங்களை விட்டுருங்க !" என்று கெஞ்சி கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள் .
நமீதாவுக்கு ஆனந்த கண்ணீர் . " மச்சான் !நீங்க என் உயிரையும் மானத்தையும் காப்பாத்திட்டீங்க ! உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க . நீங்க என்ன கேட்டாலும் நான் தர்றேன் . உங்களுக்கு நான் ஏதேனும் செய்யணும் . சொல்லுங்க மச்சான் . என்ன செய்யனும் " என பரவசமாகி சொல்லும்போது
இவன் சொன்னான் . " தயவு செய்து இந்த ஒட்டகத்தை கொஞ்சம் ஆடாம அசையாம பிடிச்சிக்கங்க மேடம் ! ப்ளீஸ் மேடம் .. "
..............

"Hold the camel still "joke !
இங்கே அந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி எழுதிப்பார்த்தேன் .

Apr 27, 2009

மாத கிம்பள வருமானம் ஐம்பத்து நான்கு லட்சம் .

ஒரு நாள் கிம்பளம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் . இதனால் இந்த வகை வருமானம் மட்டும் மாதத்திற்கு ஐம்பத்து நான்கு லட்சம் . சுமதி ரவிச்சந்திரன் என்ற ரீஜனல் பாஸ்போர்ட் ஆபிசர் இன்று புழல் சிறையில் . கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் , புரோக்கர் பாத்திமா ( முஸ்லீம் லீக் அப்துல் சமது மகளாம் ) ஆகியோரும் ஸிபிஐ பிடியில். சிறையில் .

..

ராஜபக்ஷே பிடிவாதம் ..

இலங்கை தமிழ் மக்கள் பெருந்துயர் தீர வழி ...??

விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது .

இங்கே தமிழக முதல்வர் காலவரையற்ற உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பித்து விட்டார் . தேர்தல் நேரம் இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டியிருக்குமோ ? ஜெயலலிதாவின் எதிர் அதிரடி திட்டம் பற்றி ஹேஷ்யங்கள் ....??

...

மாலை ஐந்து மணி

உண்ணாவிரதத்தை மதியம் முடித்துக்கொண்டார் முதல்வர். ராஜபக்ஷே உள்நாட்டு போரை நிறுத்த சம்மதம் தெரிவித்து விட்டார் என ப .சிதம்பரம் சொன்னாராம் !

கல்லக்குடி போராட்டத்தில் இவர் தண்டவாளத்தில் தலை வைத்த சாகசம் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் விரிவாக எழுதியிருக்கிறார் . இது கூட கருணாநிதியின் கல்லக்குடி தண்டவாளம் தான் .

...

சீனாக்காரன் தலையை இலங்கையில் உள்ளே நுழைத்து விட்டதால் அமெரிக்காக்காரன் கரிசனக்காரன் ஆகி விட்டான் .

Apr 24, 2009

எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்!

அந்த காலத்தில் ஒரு புலவன். ஒரு காவியம் எழுதினான் . அரசவைக்கு போய் அதை வாசித்தான் .

'தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே !'

முதல் வரியே தவறு என அங்கிருந்த ஒரு புலவன் சொல்லிவிட்டான்.

" நெல்லை மாநகரில் வீதிகளில் தேரோடும்போது ஆறும் வீதியில் ஓடுகிறதா ? மீன் .சங்கு எல்லாம் வீதியில் ஓடுகிறதா ? லாஜிக் உதைக்கிறதே ? பாட்டு எழுதுவதற்காக இப்படி அர்த்தமில்லாமல் எழுதலாமா ? ''

வாசித்த புலவன் அப்படியே அவமானம் தாங்காமல் ஓலைச்சுவடிகளை நூலால் மீண்டும் கட்டி கிளம்பி வீடு போய் படுத்து சாப்பிடாமல் உயிர் விட்டான் . அந்த ரோசக்கார புலவனின் மகன் அந்த ஏடுகளை எடுத்துக்கொண்டு அரசவைக்கு சிலவருடங்கள் கழித்து போய் தன் தகப்பன் காவியத்தை முன் வைத்தான் .

அவன் அந்த முதல் வரிகளை இரண்டாய் பிரித்து இடையில் ஒரே ஒரு 'முற்று புள்ளி ' வைத்தான் . பாடல் சரியான அர்த்தத்தை கொடுத்து விட்டது .

" தேரோடும் வீதியெல்லாம்.

செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே !"

' செழிப்பான நெல்லை மாநகர் வீதியிலே தேர்கள் பல எப்போதும் ஓடும் !

நெல்லை தாமிரபரணி ஆற்றில் செம்மீன் பல, சங்குகளும் கூட , பொங்கும் நீரோடு உலாவி வரும் !' என விளக்கி, அவையில் அரசனும் மந்திரி ஏனைய புலவர்களும் தகப்பன் பெயரை காத்த இந்த மகனை பாராட்டி தொடர்ந்து அந்த காவியத்தை முழுமையாக கேட்டு அங்கீகரித்தார்கள்.

..

ஆஸ்கார் ஒயில்ட் இந்த முற்றுபுள்ளி ,கமா விஷயத்தில் ரொம்ப கவனமானவர் .

முதல் நாள் தான் எழுதிய ஒரு பேராவில் ஒரு வரியில் ஒரு 'கமா ' போட்டார் . மறுநாள் அவர் செய்த ஒரே வேலை- ரொம்ப யோசித்து விட்டு அந்த 'கமா 'வேண்டாம் என முடிவு செய்து நீக்கி விட்டார் !

..

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது .

பாரிஜாத பூ இரவிலே ஏன் மலர்கிறது ? என்பதற்கு மனோன்மணியம் மீனாக்ஷி சுந்தரனார் காரணம் சொல்கிறார் .

இரவிலே வண்டு சிரமப்படாமல்தன்னை கண்டுகொள்ள வசதியாக இருட்டில் பாரிஜாத பூ வெள்ளை நிறத்தில் நறுமணமும் கொண்டு பூக்கிறது .

இரு மாணவர்கள் உரையாடுகிறார்கள் . நடேசன் என்ற மாணவன் முந்தைய நாள் இரவு உரையாடும்போது அந்த காரணம் தெரிய வந்ததை ஒரு மாணவர் மற்றொரு மாணவரிடம் சொல்கிறார் .

" பாரிஜாஜாதி பனிமலர் அந்தியில் அலர்தலே

அன்னவை விளர் நிறம் கிளர நறுமணம் கமழுதற்கு உரு காரணமென

நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ ?

உரைத்த பின் மற்றதன் உசிதம் யார் உணரார் !

இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற்

பற்பல காரணச் செறிவால் !"

..

நிலம் -வானம் -எமெர்சன்

எமெர்சன் நிலமென்னும் நல்லாள் சிரிப்பது எப்போது ?எப்படி என்று கண்டு பிடித்து ரசித்தான் .

Earth laughs in flowers!

எமெர்சன் வானத்தை கண்களுக்கு உணவாக்கியவன்..

The Sky is the daily bread of the eyes !

Apr 20, 2009

ஒரு இடைவேளைக்கு எதிர்வினைகள்

ஆறுதல் தேறுதல் தந்த எல்லோருக்கும் என் நன்றி .


"ஒரு இடைவேளை"

Krishnan said...
RPR sir

it is disheartening to hear this news. I will miss your posts terribly. Hope this is just a passing phase and you will bounce back to blog regularly.
Monday, 06 April, 2009
D.R.Ashok said...
தேவையானவைகள் கிடைத்து எழுதுவீர்கள்.தற்காலிக பிரிவின் வலியுடன்உங்கள் வாசகரிள் ஒருவன்
Monday, 06 April, 2009
epowerx said...
the recession has not spared our RPR either. Good Luck RPR!. Hopefully, you'd have enough time and resource to be back soon.May God be with you!
Monday, 06 April, 2009
Anonymous said...
OH GOD..... I WILL BE MISSING YOUR WRITINGS VERY MUCH........HOPE TO SEE YOU SOON BACK WITH A BANG.........
Monday, 06 April, 2009
k_bomman said...
Dear RP,

Very sad to know this. I was visiting your website everyday. Would surely miss your erudite,witty writings. Who else is there to quote so extensively from master poets and share his memories.Wishing you all the best and looking forward to seeing your blogs the soonest.Jayakanth-Kuwait.
Monday, 06 April, 2009
arumugam said...
Dear Mr R P Rajanayagam,

To tell you the truth, I took to reading blogs only after reading your blog that was sometime in last november.And everyday as soon as I switch on my system, only after reading your blog I move on to other sites .This has become a sort of habit I think.Its because you had the magic touch of conveying your thoughts in an interesting and absorbing manner.Now, I really feel that I am going to miss something which I have started liking very muchSir, is there no way where you can overcome this obstacle.I kindly request you sir to reconsider your decisionand continue your blog as usual.I only hope and pray from the bottom of my heart that whatever may be the reason for your decision you should continue writing in your blog.....please sir..!I am sure this request of mine is seconded by thousands of friends who regularly visit your blog.So please be kind enough to oblige and continue your blog.
Monday, 06 April, 2009

Senthil Kumaran said...
Chief,

Yours and Charu's are the two sites I read every day. Feeling very low to know that you are not going to write very often. Thanks a lot for introducing finest films, books and so on. Will keep reading earlier posts often.Senthil
Monday, 06 April, 2009
கார்த்திக் said...
// இப்போது ஒரு 'கும் 'இருட்டு மீண்டும் .வாசகர்களுக்கு என் பிரியமும் நன்றியும் . விடை பெறுகிறேன் .//ம்ம்ம்நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதுங்க.வாரம் ஒரு பதிவாவது.நன்றி.
Monday, 06 April, 2009
சே.வேங்கடசுப்ரமணியன். said...
தற்காலிக விலகலாக இருக்கட்டும்.ஒரு நல்ல மனிதனுக்கு எவ்வளவு தான் சோதனைகள் வரும்?
Monday, 06 April, 2009
siva gnanamji(#18100882083107547329) said...
நன்றி! மீண்டும் வருக!!
Monday, 06 April, 2009
ArunKumar said...
Sir,

Feel so sad that you are unable to write daily.For quite sometime now,my day will be complete only when i read your blog.Thanks for the roller coaster ride of emotion,wit and experiences.Like to wish and hope that you can write regularly soon.

Arunkumar
Monday, 06 April, 2009
S. Krishnamoorthy said...
அன்புள்ள ராஜநாயகம்,

எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்பதைக் கேட்டுத் துயரம் ஏற்படுகிறது. அது தாற்காலிகமாக இருந்தாலும். விரசத்தையும் மிகவும் நாசூக்காகச் சொல்லமுடியும். எதையும் சுவைபடச்சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தங்கள் எழுத்து. தினமும் படித்துச் சுவைத்த பலருள் நானும் ஒருவன். விரைவில் நீங்கள் மீண்டும் எழுத என் வேண்டுகோள்.அன்புடன்முகில்வண்ணன்
Monday, 06 April, 2009
rajasundararajan said...
Dear Rajanayahem,

Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil. Take care.

Rajasundararajan
Monday, 06 April, 2009


Anonymous said...
hello sir,

am sathish from shanghai.few days before only i have started to read ur blog.ur writings making me to think.i really impressed by ur thoughts but now i disappointed.i will be waiting to read ur blog.
Monday, 06 April, 2009
Cinema Virumbi said...
ராஜநாயஹம் சார்,

தினந்தோறும் முடியாவிட்டாலும் பரவாயில்லை! வாரம் ஒரு நாள் 6, 7 பதிவுகள் சேர்ந்தாற்போல் எழுதிப் பாருங்களேன்!நன்றி!சினிமா விரும்பி
Monday, 06 April, 2009


Kalaimani said...
Unbelievable.. Silent admirers like me going to miss you...hope you come back soon...
Monday, 06 April, 2009
ராதகிருஷ்ணன் said...
உங்களுடைய கிட்டதட்ட எல்லாப்பதிவுகளும்,ஒரு அதிர்வலையை அல்லது ஒரு விதமான இம்சையை கொடுத்து கொண்டே இருந்தது..கொஞ்சநாளுக்கு அது இருக்காது என்பதை என்னால் எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை!! மகிழ்ச்சியாகவா இல்லை ஒரு இழப்பாகவா??நீங்கள் வசித்த எல்லா ஊர்களுக்கும் எனக்கும் சிறிய அளவாவது தொடர்பிருக்கிறது..கரூர்(என் வசிப்பிடம்),பாண்டிச்சேரி,திருச்சி,திருப்பூர்)..ஒரு சின்ன அற்ப சந்தோஷம் இதை பகிர்ந்து கொள்வதில்..
Monday, 06 April, 2009
பாரதி மணி said...
அன்புள்ள ராஜநாயஹம்:

இதென்ன புதுசா சொல்லுகிறீர்கள்? நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். என்ன பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் அதிலிருந்து மீளமுடியும்.என்னிடம் நாஞ்சில் நாடனும், வெ.சா.வும் அடிக்கடி சொல்வது:’நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். You owe it to the Society and Posterity' என்று. அதையே உங்களுக்கு நானும் சொல்கிறேன்.இரு மாதங்களாக பெங்களூரில் இருந்தேன். ஒரு புது கைபேசி வாங்கினேன். அதில் பழைய போனில் இருந்த 400 நண்பர்களின் நம்பரை புதிசில் மாற்றித்தருகிறேன் என்று ஒரு (அனுகூல சத்ரு) ந்ண்பர் எல்லவற்றையும் அழித்துவிட்டு ஒரு Sorry Sir சொல்லிவிட்டு போய்விட்டார். அதனால் தான் உங்களுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதற்கிடையில் இடது காலில் பொறுக்கமுடியாத வலி வந்து சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் M.R.i. Scan எடுத்துப்பார்த்ததில் திரு. கருணாநிதிக்கு இருந்ததைப்போல ஸ்லிப் டிஸ்க். தெரியாத்தனமாக நான்கு படங்களில் முதலமைச்சராக நடித்ததனால் வந்த கோளாறோ என்னவோ!இப்போது ஒரு கால் அரைக்கால் ஆகிவிட்டது. இதற்கிடையில் ஒரு படப்பிடிப்புக்காக அறுபடை வீடுகளுக்கும் போகவேண்டிய நிர்ப்பந்தம். வரும்போது காலே அரைக்கால் ஆகிவிட்டது!எனது முதலும் கடைசியுமான புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளிவந்த விவரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை. புத்தகத்தை அனுப்பி வைக்க உங்கள் விலாசமில்லை. உங்கள் நம்பரும் மாயமாக மறைந்துவிட்டது. தயவு செய்து என்னை கூப்பிடுங்கள்.எழுதுவதை தயவு செய்து நிறுத்தாதீர்கள்.

அன்புடன்,பாரதி மணி
Monday, 06 April, 2009
ஆளவந்தான் said...
//எவ்வளவு நாள் எழுதுவீர்களோ தெரியாது . ஆனால் எழுதுவதேல்லாமே மணி மணியாய் இருக்கிறது '' //உண்மை தான்.. நான் தொடர்ந்து படிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.. மீண்டு(ம்) வாருங்கள் :)
Monday, 06 April, 2009
Anonymous said...
it's very sad to see you leave. you blog was part of my daily intellectual stimulant.. another one Charu..Keep Well RP

RegardsKannan
Monday, 06 April, 2009
yathra said...
\\இந்த தடங்கல் தற்காலிகமாக இருக்கவேண்டும் என்று ஒரு ஏக்கம் மட்டும் ஏற்படுகிறது .\\தற்காலிகம் தான்,,,,,நீங்கள் நிச்சயமாக தொடர்ந்து எழுதுவீர்கள்
Tuesday, 07 April, 2009
கிருஷ்ணமூர்த்தி said...
//இன்னும் நாற்பது வருடங்களுக்கு ஒரு நாள் கூட விடாமல் என்னால் எழுத முடியும் .//இந்த நம்பிக்கை ஒன்றே போதுமே, சூழ்நிலை எதுவானாலும், சமாளித்து வெளியே வருவதற்கு, அப்புறம் என்ன கவலை?! வாங்க, எழுதத் தோன்றுகிற போதெல்லாம், வந்து எழுதுங்க!
Tuesday, 07 April, 2009
ஈர வெங்காயம் said...
பணியிடத்தில் பிரச்சனை என்று நினைக்கிறேன்..நானும் திருப்பூர் தான், முடிந்தால் முயற்சிக்கவும்...ஒரு சந்திப்பிற்கு.
Tuesday, 07 April, 2009
திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.எனது கைப்பேசி எண் 0065 94577290.உங்கள் கைப்பேசி எண்ணைக் குறுஞ்செய்தி மூலமாகத் தெரியப்படுத்துங்கள்.
Tuesday, 07 April, 2009
parthi.nv said...
Hoping this is not the end.
Tuesday, 07 April, 2009
Anonymous said...
Rajanayahem sir, I am a big fan of your posts and I will definitely miss your commentaries and fine observations.Wishing you all the best and hope you will be back soon as fresh as a morning dew with all your difficulties left behind.-vijay
Tuesday, 07 April, 2009
Chinnasami said...
Expecting your writings, very soon...
Wednesday, 08 April, 2009
tirupurashok said...
I do not know what to say
Wednesday, 08 April, 2009
Kannan said...
Sir,I have become addicted to reading your blog everyday, first thing in the morning. I am not able to come to terms with the disappearance of your posts. What if you don't believe in God, I pray to Him to allay all your problems and bring you back to blog where you belong.Wishing you all the best in your battle with life and with prayers for your coming out of all your troubles like a Phoenix,Regards,N.Ramakrishnan
Friday, 10 April, 2009
Anonymous said...
Dear RPR,wish to seee you coming back soon.MOSES
Friday, 10 April, 2009
NTR said...
பிரிவு அன்பை ஆழப்படுத்தும்...அன்பு சகலத்தையும் தாங்கும்...மீண்டும் விரைவில் உங்கள் வருகையை எதிர் பார்க்கும் வாசகன்..
Friday, 10 April, 2009
சென்ஷி said...
மீண்டும் உங்களின் எழுத்துக்களை காண்பதற்கு காத்திருப்போம். கண்டிப்பாய் தங்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்து எங்களை எழுத்துக்களுடன் சந்திக்க வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...சென்ஷி
Monday, 13 April, 2009

Fanaticism

ஆந்திரபிரதேசம் .

அச்சையாபேட் கிராமம்.

தகப்பன் பெயர் சின்னப்பை .வயது 55. நடிகர் என்.டி. ராமராவுடைய தீவிர ரசிகர் .

மகன் பெயர் ராஜுபாபு.வயது 23. நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் .

அப்பா சின்னப்பை ராமராவ் ரசிகர் ஆதலால் தெலுங்கு தேசம் கட்சியின் தீவிர தொண்டர்.

மகன் ராஜுபாபு சிரஞ்சீவியின் 'பிரஜா ராஜ்யம் கட்சி 'யின் தீவிர வெறியர். .

Like Father,Like Son!

இருவருக்கும் தலைமுறை இடைவெளியால் ராமராவ் -சிரஞ்சீவி தனிமனித வழிபாடு காரணமாக அரசியல் வாக்கு வாதங்கள் .

இப்போது தேர்தல் நேரத்தில் ரொம்ப ,ரொம்ப தீவிர விவாதங்கள் !

ஏப்ரல் பதினாறாம் தேதி வாக்குப்பதிவு நாள் .

அந்த வியாழக்கிழமை ராஜுபாபு தன் தகப்பனாரிடம் சிரஞ்சீவி கட்சிக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்துகிறார் . ஆனால் அப்பா சின்னப்பை ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டு போட்டு விடுகிறார் . இதை கண்டு பிடித்து விட்ட மகன் தன் தகப்பனைஅன்றிரவே கத்தியால் குத்தி கொன்று விடுகிறார் . இயற்கையாய் மரணம் ஏற்பட்டது போல நாடகமாடி வெள்ளிக்கிழமை புதைத்து விடுகிறார் .

சனிக்கிழமை குட்டு வெளிப்படுகிறது . கிராமத்தார் சிலர் சந்தேகத்தின் பேரில் சிரஞ்சீவி ரசிகன் ராஜூ பாபுவை விசாரித்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள் . போலீஸ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .

தகப்பனை கொன்ற மகன் .

What is objectionable,what is dangerous about fanatics and extremists is not that they are extreme, but that they are intolerant.

- Robert Kennedy

Apr 6, 2009

ஒரு இடைவேளை

தொடர்ந்து எழுதுவதில் எனக்கு வாய்ப்பு இல்லாமல் ஆகிறது .
பார்ப்போம் . எப்படி தொடர்வது என்று இப்போது தெரியவில்லை . என் பிழைப்பு ,அலுவல் சம்பந்தமாக ஒரு மாறுதல் என் ப்ளாக் தொடர்வதிலும் தடங்கலை ஏற்படுத்தி விட்டது. தினமும் இனி பதிவு போடுதல் சாத்தியம் இல்லை போல தெரிகிறது . இன்னும் நாற்பது வருடங்களுக்கு ஒரு நாள் கூட விடாமல் என்னால் எழுத முடியும் . மேடை தான் வேண்டும் .சூழல் தடங்கலாகி இருக்கிறது . ப்ளாக் எழுத தேவையான உபகரணம் இல்லாமல் எழுதவே முடியாது . எவ்வளவோ போராட்டத்திற்கிடையில் தான் இந்த முன்னூற்றி அறுபதுக்கு மேல் பட்ட பதிவுகளை நான் எழுத நேர்ந்தது .
இப்போது ஒரு 'கும் 'இருட்டு மீண்டும் .
வாசகர்களுக்கு என் பிரியமும் நன்றியும் . விடை பெறுகிறேன் .
முடிந்தவரை அவ்வப்போது தொடர விரும்புகிறேன் . ஆனால் இன்றைய நிலையில் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை . இந்த தடங்கல் தற்காலிகமாக இருக்கவேண்டும் என்று ஒரு ஏக்கம் மட்டும் ஏற்படுகிறது .

ஜெயகாந்தன் சொல்வது போல ' ஒதுங்குவதும் , பதுங்குவதும், பின்வாங்குவதும் கூட போராட்டத்தின் ஒரு பகுதி தான் .'

" எவ்வளவு நாள் எழுதுவீர்களோ தெரியாது . ஆனால் எழுதுவதெல்லாமே மணி மணியாய் இருக்கிறது '' என்று ஒரு முறை ஒருவர் என் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டிருந்தார் .

Apr 3, 2009

திமுக -அண்ணா திமுக பற்றி ராமதாஸ்

ராமதாஸ் ஜெயலலிதாவை ' அன்பு சகோதரி ' என மீண்டும் புதுப்பித்ததும், ஜெயலலிதா ராமதாசை ' டாக்டர் அண்ணன் ' என ஆரத்தி எடுத்ததும் பா ம க - அதிமுக கூட்டு மலர்ந்து கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்களுக்கு மரியாதை குறைந்து விட்டது .
சமீபத்தில் தான் கொஞ்ச காலம் முன்னால் ராமதாஸ் சொன்னது நினைவில் வந்தது . ஆனால் திமுக , அண்ணா திமுக பற்றி இவ்வளவு வெளிப்படையாக யாரும் சொல்ல முடியாது .
ராமதாஸ் சொன்னது :" எங்களைப்பொறுத்தவரை அதிமுகவில் இரண்டு பெண்கள் (ஜெயலலிதா ,சசிகலா )தான் சரியில்லை . ஆனால் தொண்டர்கள் நல்லவர்கள் .திமுகவில் கருணாநிதியும் அன்பழகனையும் தவிர தொண்டர்கள் சரியில்லை . இது எல்லோருக்கும் தெரிந்த பழைய கதை தான் .
கருணாநிதி , அன்பழகன் ஆகிய இரண்டு பேரையும் தவிர திமுக வில் உள்ள அமைச்சர்கள் , மாவட்டச்செயலாளர்கள் யாரும் கூட்டணி தர்மத்தை கிஞ்சித்தும் மதிக்கவில்லை ."

Apr 2, 2009

Byron -Mad, bad and dangerous to know !

Byron (1788-1824)
முப்பத்தாறு வருடமும் ஒரு மூன்று மாதமும் இந்த பூவுலகில் வாழ்ந்தான் பைரன் . ஒரு கால் சற்றே ஊனமாய் பிறந்தவன் . அவனுடைய டான் ஹுவான் பற்றி முன்பு இங்கே எழுதியிருக்கிறேன் .
கிரேக்க சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது 37 வயதில் இறந்தான் . கிரேக்கர்கள் தங்கள் போராட்டத்தில் தோள் கொடுத்த இந்த ஆங்கிலேயனுக்கு மிகுந்த மரியாதை , பிரியம் செலுத்தினர் . இவன் மரணத்தின் போது நெஞ்சே அவர்களுக்கு வெடித்தது போல ஆகிப்போனது .காய்ச்சலில் படுத்தவன் போய் விட்டான் .37 நிமிடங்களுக்கு துப்பாக்கியைவெடித்து இவனுக்கு அஞ்சலி செலுத்தினர் .21 நாட்கள் துக்கம் அனுசரித்து வேதனை பட்டார்கள் . இந்த ஆங்கில கவிஞனின் இதயத்தை அவன் உடலில் இருந்து எடுத்து தங்கள் வசம் வைத்துக்கொண்டு உடலின் மீதியை இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள் .மிஸ்ஸொலோங்கி யில் பைரன் இதயத்தை புதைத்தார்கள் .

சொந்த நாட்டில் மத குருக்கள் ஆவேசப்பட்டார்கள் . Westminster Abbeyயில் அவன் உடலை புதைக்க அனுமதி கிடைக்கவில்லை . ஒரு கிராமத்தில் அவன் மூதாதையர் புதைக்கப்பட்ட இடத்தில் தான் மகா கவி பைரன் புதைந்தான் .

" மிக மோசமான விகார வாழ்வு வாழ்ந்தவன் . மிக அருவருப்பான கவிதைகள் எழுதியவன் , ஒழுக்கமற்ற தன்மை கொண்டவன் . நம் கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் . பெண்களை கேவலமாக நடத்தியவன் . இவனை Westminster Abbey யில் புதைக்க கூடாது '' என அவன் இறந்து நூறு வருடங்கள் கழித்து பிஷப் ஹெர்பெர்ட்கோபப்பட்டார் . நூறு வருடங்கள் கழித்து சிலர் முயற்சித்த போது இப்படி பிஷப் சொன்னார் .
போராடி கடைசியாகWestminster Abbey யில் அங்கே Poets cornerல் 1969 ஆண்டு 'பைரன் நினைவுச்சின்னம் 'வைக்க மட்டும் தான் முடிந்தது .
மேரி சாவர்த் என்ற அவன் தூரத்து சொந்தக்கார பெண் தான் அவன் முதல் காதலி . அவள் இவனிடம் ஆயாசப்பட்டு ஒதுங்கியபோது பைரனின் பாடு பொருள் ஆகியதால் பல கவிதைகள் . பின் லேடி கரோலின் லாம்ப் என்ற காதலி . அவன் மணந்து கொண்ட அன்னாபெல்லா இவனுடன் வாழ மறுத்ததற்கு காரணம் பைரன் சொந்த தங்கையுடன் கொண்ட சரீர சம்பந்தம் . அவனுடைய Half –Sister அகஸ்தா லீ . இவளுக்கு ஒரு பெண் குழந்தையை பைரன் கொடுத்தான் . அன்னாபெல்லாவுக்கு ஒரு பெண்குழந்தை .
ஷெல்லியின் சகளைபாடியாக பைரன் ஆகியவன் . ஷெல்லி பெஞ்சாதி மேரி யின் சகோதரி (Step –sister) க்ளேர் கிளார்மன்ட் . இவளுக்கும் ஒரு பெண்குழந்தையை காதல் பரிசாக கொடுத்தான் பைரன் .

I lived, I loved, I quaffed ,like thee:
I died: Let earth my bones resign;

Fill up – thou canst not injure me;
The worm hath fouler lips than thine

-Byron

49 (o)

நேற்று ஒரு நிழற்படம் பார்க்க கிடைத்தது . தொல்.திருமாவளவன்
(பவ்யமாக!), குலாம் நபி ஆசாத் , ப சிதம்பரம் , தங்க பாலு வுடன் கருணாநிதி நடுநாயகமாக ஜுனியர் விகடன் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து காட்சி தருகிறார்கள்.
எப்படி? ஒரு மாதம் இருக்குமா ? தொல் திருமா " காங்கிரசை வேரடி மண்ணோடு சாய்ப்பேன். தமிழகத்தில் பூண்டோடு ஒழிப்பேன் " என சூளுரைத்தது!
விடுதலை சிறுத்தைகள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கவே மாட்டோம் என காங்கிரஸ் மீசை முறுக்கியது!

மன சாட்சி இல்லாத அரசியல்வாதிகள்!
என்ன ஒரு ஹிப்போக்ரசி!' தேர்தல் பாதை திருடர்கள் பாதை 'என்று திருமா முன்பு சொன்னது சரி தான்!!
இலங்கை பிரச்னை தேர்தல் வரவும் மறைந்து விட்டது.

ஒரே நேரத்தில் வைகோ கட்சி அதிமுக இல்லையேல் பி ஜே பி யுடன் கூட்டு பேச்சு வார்த்தை. தோட்டத்தில் வைகோவுக்கு அவமானம் என செய்தி . பி ஜே பி வலை வீச்சில் வைகோ. நாளொரு செய்தி என்பது கூட தவறு மணிக்கொரு செய்தி , வினாடிக்கொரு கூட்டணி மாற்றம் இருக்கும் போல.

திமுக விலிருந்து எம்ஜியார் விலகினார். எம்ஜியார் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் .
திமுக விலிருந்து வைகோ விலகினார் . வைகோ தொண்டர் செல்வாக்கு தான் பெற்றிருந்தார். தொண்டர்கள் பலர் அவர் பின் திமுக விலிருந்து வந்தார்கள். தொண்டர்கள் தேர்தலில் வேலை செய்ய முடியும். மக்கள் செல்வாக்கு தான் வாக்குகளை பெற்று தரும். மக்கள் செல்வாக்கு என்பதை வைகோ நினைத்து கூட பார்க்க முடியாது.
இப்போது இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுபடியும் திமுக விற்கு போய் விட்ட பின் அம்மா இவரை அவமானப்படுத்துகிறார். மதிமுக பலகீனப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா உதாசீனப்படுத்துகிறார் போலும்! நியாயம் தானே. இலங்கை பிரச்னையில் இரு துருவமாக இருந்து கொண்டு ஜெயலலிதா - வைகோ இணைந்து அரசியல் பண்ணியதே அபத்தம்.


பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் காங்கிரசுடன் டெல்லியில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடத்தி விட்டு இப்போது தனியாக போட்டியிடும் விஜயகாந்த் வினோத அரசியல் வியாதி. பாவம் நாற்பதில் ஒரு தொகுதி டெபாசிட் கிடைத்து விட்டாலே வெற்றி விழா கொண்டாட வேண்டியது தான் .

இந்த அரசியல் கூட்டணிகளை நிராகரிக்க  '49 (o)'   தான். . ஆமாம் . '49 (o)' ! 

ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் இன்றைய சூழலில் ஆதரிக்க விரும்புகிறேன் !
பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் வேரூன்ற முயற்சிப்பதை பற்றி நான் ஏற்கனவே கிண்டல் அடித்திருக்கிறேன் . தமிழகத்தில் அந்த தேசிய கட்சியும் ஒரு சர்பத் ஸ்டால் தான் . இருந்தாலும் கூட கன்னியாகுமரி வாக்காளர்கள் பலர் படித்தவர்கள் . எனவே அந்த தொகுதிக்காரர்கள் மட்டும் சிவகாமிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் . என்னவோ இந்த தேர்தலை பொறுத்தவரை ஒரே ஒரு நல்ல வேட்பாளர் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சிவகாமி தான் . பாராளுமன்றத்திற்கு போக தகுதியும் அவருக்கு இருக்கிறது.
.......................

Apr 1, 2009

கேள்வி பதில்

கவிஞர் காயாதவன்: திருப்பூரில் உங்கள் பிழைப்பு எப்படி இருக்கிறது ?

R P ராஜநாயஹம் : இதற்கு என் பதில் 'சுகுமாரனின் கவிதையாக' கீழே

இங்கே இருக்கிறேன்

" சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது

அசௌகரியம்

யத்தனித்தால் பறக்க க்கிடைக்கும் வெளியோ

கொசுவலைக்குள் அடக்கம்

தைத்த அம்புகளைப்

பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே

ஆனாலும்

வலிகள் இதயத்தின் தசைகளைக் கிழிக்கின்றன "

திருப்பூர் அசோக் : திருப்பூருக்கு வாழ வந்துள்ள லக்ஷோப லட்சம் மக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

R P ராஜநாயஹம் : தேவ தேவன் கவிதை தான் நினைவிற்கு வருகிறது

" குதித்துக் குதித்துக் குதித்தே

நிதம் சாகின்றன

தூரம் வந்து விட்ட தவளைகள் "

பக்ருதின் (கவிஞர் சுந்தர் அர்னவா ):

R P ராஜநாயஹம் யார் ?

R P ராஜநாயஹம் : ஆத்மாநாம் கவிதை கீழே பாருங்கள் !

" நான் ஒரு ஞானியுமில்லை

நான் ஒரு சித்தனும் இல்லை

பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்

படித்தும் படிக்காத புலவன் நான்

வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா

நோயாளி நான் "

சோமன் பூந்துறை எஸ் தங்கவேல் : தவிப்பு ?

R P ராஜநாயஹம் : பிரமிள் கவிதை வரி ஒன்றை நினைவூட்டுகிறது

"தவிப்பு , நம்பிக்கையின் இனிய துகள்களாய்

சிதறி விழுகிறது "