கவிஞர் காயாதவன்: திருப்பூரில் உங்கள் பிழைப்பு எப்படி இருக்கிறது ?
R P ராஜநாயஹம் : இதற்கு என் பதில் 'சுகுமாரனின் கவிதையாக' கீழே
இங்கே இருக்கிறேன்
" சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது
அசௌகரியம்
யத்தனித்தால் பறக்க க்கிடைக்கும் வெளியோ
கொசுவலைக்குள் அடக்கம்
தைத்த அம்புகளைப்
பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே
ஆனாலும்
வலிகள் இதயத்தின் தசைகளைக் கிழிக்கின்றன "
திருப்பூர் அசோக் : திருப்பூருக்கு வாழ வந்துள்ள லக்ஷோப லட்சம் மக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
R P ராஜநாயஹம் : தேவ தேவன் கவிதை தான் நினைவிற்கு வருகிறது
" குதித்துக் குதித்துக் குதித்தே
நிதம் சாகின்றன
தூரம் வந்து விட்ட தவளைகள் "
பக்ருதின் (கவிஞர் சுந்தர் அர்னவா ):
R P ராஜநாயஹம் யார் ?
R P ராஜநாயஹம் : ஆத்மாநாம் கவிதை கீழே பாருங்கள் !
" நான் ஒரு ஞானியுமில்லை
நான் ஒரு சித்தனும் இல்லை
பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்
படித்தும் படிக்காத புலவன் நான்
வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா
நோயாளி நான் "
சோமன் பூந்துறை எஸ் தங்கவேல் : தவிப்பு ?
R P ராஜநாயஹம் : பிரமிள் கவிதை வரி ஒன்றை நினைவூட்டுகிறது
"தவிப்பு , நம்பிக்கையின் இனிய துகள்களாய்
சிதறி விழுகிறது "


கசப்பு வாழ்வையும்
கவிதையினூடெ கடத்தல்
வாசிப்பின் மொகமும்
மொழியினில் மேதமையும்
கெட்டவை விலக
கொண்டாட்டம் பெறுக
(எப்படி தல! சுமாராவாது இருக்கா!!!!!!!!!!!!!)