Share

Apr 3, 2009

திமுக -அண்ணா திமுக பற்றி ராமதாஸ்

ராமதாஸ் ஜெயலலிதாவை ' அன்பு சகோதரி ' என மீண்டும் புதுப்பித்ததும், ஜெயலலிதா ராமதாசை ' டாக்டர் அண்ணன் ' என ஆரத்தி எடுத்ததும் பா ம க - அதிமுக கூட்டு மலர்ந்து கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்களுக்கு மரியாதை குறைந்து விட்டது .
சமீபத்தில் தான் கொஞ்ச காலம் முன்னால் ராமதாஸ் சொன்னது நினைவில் வந்தது . ஆனால் திமுக , அண்ணா திமுக பற்றி இவ்வளவு வெளிப்படையாக யாரும் சொல்ல முடியாது .
ராமதாஸ் சொன்னது :" எங்களைப்பொறுத்தவரை அதிமுகவில் இரண்டு பெண்கள் (ஜெயலலிதா ,சசிகலா )தான் சரியில்லை . ஆனால் தொண்டர்கள் நல்லவர்கள் .திமுகவில் கருணாநிதியும் அன்பழகனையும் தவிர தொண்டர்கள் சரியில்லை . இது எல்லோருக்கும் தெரிந்த பழைய கதை தான் .
கருணாநிதி , அன்பழகன் ஆகிய இரண்டு பேரையும் தவிர திமுக வில் உள்ள அமைச்சர்கள் , மாவட்டச்செயலாளர்கள் யாரும் கூட்டணி தர்மத்தை கிஞ்சித்தும் மதிக்கவில்லை ."

3 comments:

  1. ராமதாஸ் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பவாதி.
    தனியாக நின்றால் 7 தொகுதிகளில் 6 ல் டெபாசிட் காலி. விக்ரமாதித்தனின் வேதாளமாக யார் தோளிலாவது சவாரி செய்து பிழைப்பு நடத்துகிறார்.பாமக வில் ஒரே நல்லவர் வல்லவர் அன்புமணி மட்டுமே.மற்றெல்லோரும் ஓமக.

    ReplyDelete
  2. பா ம க வில் தொண்டர்களுஞ் சரியில்லை, தலைவருஞ் சரியில்லை.

    ReplyDelete
  3. கருணாநிதி , அன்பழகன் ஆகிய இரண்டு பேரையும் தவிர திமுக வில் உள்ள அமைச்சர்கள் , மாவட்டச்செயலாளர்கள் யாரும் கூட்டணி தர்மத்தை கிஞ்சித்தும் மதிக்கவில்லை ."

    athuku enna seyalam

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.