Share

Apr 24, 2009

எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்!

அந்த காலத்தில் ஒரு புலவன். ஒரு காவியம் எழுதினான் . அரசவைக்கு போய் அதை வாசித்தான் .

'தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே !'

முதல் வரியே தவறு என அங்கிருந்த ஒரு புலவன் சொல்லிவிட்டான்.

" நெல்லை மாநகரில் வீதிகளில் தேரோடும்போது ஆறும் வீதியில் ஓடுகிறதா ? மீன் .சங்கு எல்லாம் வீதியில் ஓடுகிறதா ? லாஜிக் உதைக்கிறதே ? பாட்டு எழுதுவதற்காக இப்படி அர்த்தமில்லாமல் எழுதலாமா ? ''

வாசித்த புலவன் அப்படியே அவமானம் தாங்காமல் ஓலைச்சுவடிகளை நூலால் மீண்டும் கட்டி கிளம்பி வீடு போய் படுத்து சாப்பிடாமல் உயிர் விட்டான் . அந்த ரோசக்கார புலவனின் மகன் அந்த ஏடுகளை எடுத்துக்கொண்டு அரசவைக்கு சிலவருடங்கள் கழித்து போய் தன் தகப்பன் காவியத்தை முன் வைத்தான் .

அவன் அந்த முதல் வரிகளை இரண்டாய் பிரித்து இடையில் ஒரே ஒரு 'முற்று புள்ளி ' வைத்தான் . பாடல் சரியான அர்த்தத்தை கொடுத்து விட்டது .

" தேரோடும் வீதியெல்லாம்.

செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே !"

' செழிப்பான நெல்லை மாநகர் வீதியிலே தேர்கள் பல எப்போதும் ஓடும் !

நெல்லை தாமிரபரணி ஆற்றில் செம்மீன் பல, சங்குகளும் கூட , பொங்கும் நீரோடு உலாவி வரும் !' என விளக்கி, அவையில் அரசனும் மந்திரி ஏனைய புலவர்களும் தகப்பன் பெயரை காத்த இந்த மகனை பாராட்டி தொடர்ந்து அந்த காவியத்தை முழுமையாக கேட்டு அங்கீகரித்தார்கள்.

..

ஆஸ்கார் ஒயில்ட் இந்த முற்றுபுள்ளி ,கமா விஷயத்தில் ரொம்ப கவனமானவர் .

முதல் நாள் தான் எழுதிய ஒரு பேராவில் ஒரு வரியில் ஒரு 'கமா ' போட்டார் . மறுநாள் அவர் செய்த ஒரே வேலை- ரொம்ப யோசித்து விட்டு அந்த 'கமா 'வேண்டாம் என முடிவு செய்து நீக்கி விட்டார் !

..

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது .

பாரிஜாத பூ இரவிலே ஏன் மலர்கிறது ? என்பதற்கு மனோன்மணியம் மீனாக்ஷி சுந்தரனார் காரணம் சொல்கிறார் .

இரவிலே வண்டு சிரமப்படாமல்தன்னை கண்டுகொள்ள வசதியாக இருட்டில் பாரிஜாத பூ வெள்ளை நிறத்தில் நறுமணமும் கொண்டு பூக்கிறது .

இரு மாணவர்கள் உரையாடுகிறார்கள் . நடேசன் என்ற மாணவன் முந்தைய நாள் இரவு உரையாடும்போது அந்த காரணம் தெரிய வந்ததை ஒரு மாணவர் மற்றொரு மாணவரிடம் சொல்கிறார் .

" பாரிஜாஜாதி பனிமலர் அந்தியில் அலர்தலே

அன்னவை விளர் நிறம் கிளர நறுமணம் கமழுதற்கு உரு காரணமென

நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ ?

உரைத்த பின் மற்றதன் உசிதம் யார் உணரார் !

இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற்

பற்பல காரணச் செறிவால் !"

..

நிலம் -வானம் -எமெர்சன்

எமெர்சன் நிலமென்னும் நல்லாள் சிரிப்பது எப்போது ?எப்படி என்று கண்டு பிடித்து ரசித்தான் .

Earth laughs in flowers!

எமெர்சன் வானத்தை கண்களுக்கு உணவாக்கியவன்..

The Sky is the daily bread of the eyes !

7 comments:

  1. வாணம் கண்களுக்கு உணவு....
    மலர்களின் ஊடே சிரிக்கிறது பூமி

    அருமை ... எமர்சன்

    ReplyDelete
  2. Great quotes sir. I look forward to the quotes at the end as much I do your posts. It somehow feels incomplete to me when a post of yours does not end with a quote.
    Great having you back sir.

    ReplyDelete
  3. நல்வரவு rpr அவர்களே!
    சிலநாட்கள் ஒய்வு போதுமா?

    ReplyDelete
  4. \\இரவிலே வண்டு சிரமப்படாமல்தன்னை கண்டுகொள்ள வசதியாக இருட்டில் பாரிஜாத பூ வெள்ளை நிறத்தில் நறுமணமும் கொண்டு பூக்கிறது ...\\

    உண்மை...

    ReplyDelete
  5. //இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்//

    எம்மொழி எத்தனை இனிமை

    ReplyDelete
  6. "The Sky is the daily bread of the eyes !" Reminds me of Vairamuthu's words ‘வானம் எனக்கொரு போதிமரம்'
    Wonderful RPR

    ReplyDelete
  7. :-))

    மீண்டும் வந்தமைக்கு மகிழ்ச்சிகள்!!

    //"எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்!"//

    கலக்கல்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.