Share

Dec 2, 2025

Letting true self shine

Weirdness embraced 

சம்பந்தமே இல்லாத உறவுகள் 

ராஜநாயஹம் மாமனாரின் 
தாய் மாமாவின் மூன்றாவது மகனின் மனைவி 
நாஞ்சில் சம்பத்தின் உடன் பிறந்த சகோதரி.

நாஞ்சில் சம்பத்தோடு ராஜநாயஹத்திற்கு அறிமுகம் கிடையாது. சந்தித்ததேயில்லை.
ராஜநாயஹம் யார் என்று அவருக்கு தெரியாது.

ஐந்து வருடங்களுக்கு முன் 'சினிமா எனும் பூதம்' படித்து விட்டு 
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது 'சண்முக சுந்தரம் உங்களுக்கு சொந்தமா?' என்று கேட்டார்.
'இப்போது அவருடன் உறவு எப்படி?'
உறவை பரிபாலனம் செய்வது சிரமம் என்பது அவருக்கு நன்கு தெரிந்தேயிருக்கிறது.

இப்போது உறவு (சிலாக்கியமாக) இல்லை 
என்பதை உடனே ஒற்றை வரியாக சொல்லத்தான் வேண்டியிருந்தது. 

சண்முக சுந்தரம் முன்னாள் தி.மு.க. எம்.பி. முன்னாள் அட்வகேட் ஜெனரல்.

கூத்துப்பட்டறை ராஜநாயஹம் முத்திரை இருப்பதால் விஜய் சேதுபதி பற்றி கேட்பார்கள். விஜய் சேதுபதியை நேரில் பார்த்ததேயில்லை. அறிமுகம் கிடையாது.
கூத்துப்பட்டறைக்கு விஜய் சேதுபதி மூன்று முறை வந்த போதும் சந்தித்ததில்லை. 
கடந்த பத்து வருடங்களில் பல முறை அவர் பற்றி பலரிடம் பதில் பேச வேண்டியிருக்கிறது. நேரில் பார்த்ததேயில்லை என்பதை சொல்லும்படி தான் இருக்கிறது.

ஒட்டாத விஷயங்கள் ஒட்டியேயிருக்கிறது.

Letting true self shine.


Nov 27, 2025

R.P. ராஜநாயஹம் 1987

"Youth is happy because it has the capacity 
to see beauty. Anyone who keeps the ability 
to see beauty never grows old."

- Franz Kafka 

The Passage of Time

R.P. Rajanayahem 1987

வேடிக்க - 55



ரயில் பயணம் மாதம் இருமுறை அவசியமாகி விட்டது.

நெறய்ய வேடிக்க பாக்க வேண்டியிருக்கு.

ஏ.சி. கோச்சில் வடநாட்டு ஆண்களும் பெண்களுமாக சின்ன கூட்டம் நுழைந்து நிற்கவும் உட்காருவதுமாக முரட்டு பிடிவாதம். ரிசர்வ் செய்து உட்கார்ந்திருப்பவர்கள் என்ன சொல்லியும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஜடங்கள். ரயிலுக்குள்ளேயே ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டாக நடந்து தாண்டி 
இந்த ஏ.சி. கம்பார்ட்மெண்ட்டில் வசதியாக செட்டில் ஆகிற தீர்மானம். 
ரயில் கிளம்புகிறது.
ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களில் ஒருவர் சங்கிலியை இழுத்து... 
ரயில் நின்று விட்டது.
ரயில்வே போலீஸ் உள்ளே வந்து அந்த வட நாட்டு கும்பலை லத்தி சார்ஜ் செய்து தான் ப்ளாட்ஃபார்மில் இறங்கச்செய்தார்கள்.
கம்பார்ட்மெண்ட்டில் உட்கார்ந்திருந்தவர்களில் யாரோ சத்தமாக சொன்னார்.
" வடநாட்டுல இவிங்கல்லாம் ஓட்டு போட்டு தான் அங்க ஜெயிக்கிறானுங்க"

Nov 20, 2025

07. 11 . 2023 க்கு முந்தைய நாள்

1983

கல்யாணத்திற்கு முந்தைய நாள் மாலை, இரவும் சரியான ஐப்பசி மழை.

கல்யாண மண்டபத்தில் ராஜநாயஹத்தின் Full Suit Dress, மணப்பெண்ணின் கல்யாண பட்டு புடவை, தாலி எல்லாம் வைத்து சடங்கெல்லாம் முடித்து 
பத்து மணிக்கு மேல் கிளம்பும் போது 
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர் பட்டி கிருஷ்ண பிள்ளை சித்தப்பா கல்யாண ஆடைகள், தாலி செயின் வைக்கப்பட்ட சூட் கேஸை கையில் எடுத்து கொண்டார். பக்கத்திலேயே வீடு.
எனக்கு முன்னால் நடந்த கிருஷ்ண பிள்ளை வெளியே வந்தவுடன் மழைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் சூட்கேஸோடு விழுந்து விட்டார். அவருடைய 'ஐயய்யோ அம்மாடி' கூப்பாடு. பேரதிர்ச்சி.
 கால்வாய் என்ன, மழைநீர் இல்லாவிட்டால் அது சாக்கடையே தான். 

அவரை தூக்கி மேலே விட்டு, முழுக்க மூழ்கி விட்ட சூட்கேஸை மேலே கொண்டு வந்து,  வேதனையோடு வீடு வந்து அவசர அவசரமாக சூட்கேஸை திறந்து...
கோட் முன் மேல் பகுதியில் மட்டும் லேசாக ஈரம். 
நீரால் சுத்தம் செய்து, அயர்ன் பண்ணி ஸ்டேண்டில் தொங்க விட்டாயிற்று. 
பெரியவர்கள் வளமை நோக்கு படி 
 ' த்ருஷ்டி கழிந்தது ' 'கண்டம் கழிந்தது' பெரு மூச்சு.

காலையில் Coat போடுவதற்கு முன் waist                                                  coat ல் எடுக்கப்பட்ட புகைப்படம். 
 ராஜநாயஹத்தின் பின் புறம் ரவி.

ராஜநாயஹத்தின் இந்த குறிப்பிட்ட புகைப்படம் ரொம்ப பிரபலம். 
சுவாரசியமான சம்பவம் எல்லாம் இதை முன் வைத்து நடந்திருக்கிறது.

....

Artificial Intelligence

07.11.1983

Nov 17, 2025

முத்ராமர் மகர்

'இது நம்ம பூமி'. 
ராதா ரவி தயாரிப்பாளர். 
P. வாசு இயக்குநர். 
கார்த்திக் நட்பு பற்றி ராதா ரவி 
பெரும் பூரிப்பில் அந்த சமயம் இருந்தவர். 
'ராசுக்குட்டி' கேமராமேன் எம்.சி.சேகர் தான் 'இது எங்க பூமி'க்கும். 
இயக்குநர் வாசுவின் சொந்த சித்தப்பா.
பழைய பிரபல மேக் அப் மேன் பீதாம்பரத்தின் தம்பி.

'நல்லவனுக்கு கஷ்டம் வந்தா அவனோட போயிடும். கெட்டவனுக்கு கஷ்டம் வந்துச்சின்னா சுத்தியிலும் மத்தவங்களுக்கு பகுந்து குடுத்துடுவான். 
ராஜநாயஹத்துக்கு கஷ்டம் வந்தா ராஜநாயஹத்தோட போயிடும். ஆனா கெட்டவனுக்கு கஷ்டம் வந்தா?..கெட்டவனுக்கு கஷ்டமே வரக்கூடாது' 
என்பார்.

கல்யாண்குமாரும் சேகரும் ' நெஞ்சில் ஓர் ஆலயம் ' நினைவுகளை அசை போடுவதை ராசுக்குட்டி படப்பிடிப்பில் காண முடிந்திருக்கிறது. கல்யாண் குமார் ஹீரோவாக நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் சேகர் கேமராவில் உதவியாளராக இருந்தாராம்.

' இது நம்ம பூமி' Shooting schedule போய் விட்டு 'ராசுக்குட்டி'க்கு வந்த போது சொன்னார்.
'வாசு காட்சியை நடித்துக் காட்டினான்.
கார்த்திக் அதை பார்த்து விட்டு நடித்த போது அசந்தே போனேன். என்ன பெர்ஃபான்ஸ் தெரியுமா. வாசு எப்படி நடிக்கனும்னு செஞ்சி காட்டியது நல்லாவே இல்லைன்னு கார்த்திக் நடிப்பில் தெளிவா தெரிஞ்சிது. பிரமாதமா ரொம்ப அழகா இருந்தது.
நான் ஒன்னு சொல்றேன். கமலுக்கு அப்புறம் கார்த்திக் தான் அற்புதமான நடிகன்."

Personality - 

கார்த்திக் ட்ரெஸ் சென்ஸ் பற்றி 
ராதா ரவி : 
சர்ட் பேண்ட்டுக்குள் 'இன்' செய்யாமலே கார்த்திக் ரொம்ப ஸ்மார்ட் ஆக இருப்பார்.

ரஜினி: முத்துராமன் மகன் கார்த்திக்கை முதன் முதலாக பார்த்த போது பெண்மையான  ரொம்ப அழகான பையன்.

https://www.facebook.com/share/p/17c7mPgHJH/

Nov 15, 2025

Story Discussion

பாக்யராஜ் தோட்டத்தில் நல்ல கிணறு. 
பாக்யராஜ் சார் தன் உதவியாளர்கள், கதை இலாகாவினருடன் அவ்வப்போது தோட்டத்திற்கு கதை டிஸ்கஸனுக்காக சென்னையில் இருந்து தோட்டத்திற்கு வருவதுண்டு. 

தோட்டத்தில் டைரக்டர் நடந்து வரும்போது கிணற்றில் பேச்சு சப்தம்.
எட்டிப்பார்க்கிறார். 
உள்ளே அந்த நேர உதவி இயக்குநர்கள் படிகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.
வி. சேகர் எதிர் காலத்தில் தான் இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எடுக்க ஆசைப்படும் திரைப்படத்தின் கதையை பாக்யராஜின் மற்ற அசிஸ்டெண்ட் டைரக்டர்களுடன் விலாவரியாக விவரித்து விவாதித்துக் கொண்டு..

மேலிருந்து டைரக்டர் பாக்யராஜ் " டேய், இப்ப நான் எடுக்கிற "இது நம்ம ஆளு" படத்து கதையையும் மறந்துடாம கொஞ்சம் பாருங்கடா. "

'ராசுக்குட்டி' படத்திற்காக ஐஸ்வர்யாவுடன் தோட்டக்கிணற்றில் ஷூட்டிங் நடந்த போது இந்த கிணற்று டிஸ்கசன் பற்றி கேள்விப்பட்டேன். 
இப்போது 2024ல் பாக்யராஜ் சாரை 
32 ஆண்டுகளுக்கு பின்னர் 
ராஜநாயஹம் சந்தித்த சமயங்களில் 
இதையெல்லாம் அவரிடம் நினைவு கூர்ந்து பேசியதுண்டு.


வி. சேகரை பார்த்ததே கிடையாது.

இவருடன் மட்டுமல்ல. 
பாண்டியராஜன், பார்த்திபன், ஜி.எம். குமார், லிவிங்ஸ்டன் ஆகியோருடனும் அறிமுகமெல்லாம் கிடையாது.

Nov 11, 2025

கலைஞானம்

கலைஞானம் "இது நம்ம ஆளு"
கிருஷ்ணையராக நடிக்கும் போது பக்கத்தில் காட்சிகளில் துணை நடிகர்கள் நிற்கும் போது சங்கடப்பட்டிருக்கிறார். 
"என்னடா, நான் திரைக்கதை ஆசிரியர், படத்தயாரிப்பாளர். ரஜினி, சிவாஜி படமெல்லாம் எடுத்தவன். இவனுங்க ஷாட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னால, ப்ரேக்ல அண்ணேங்கறானுங்க" ன்னு அய்யரவாயிருந்ததாக 'ராசுக்குட்டி' காலத்தில் பாக்யா ஆஃபிஸில் சொன்னதுண்டு.
சுவாரசியமான typical சினிமாக்காரர். 
சினிமா சம்பந்தப்பட்ட taboos and inhibitions.

பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கதை சொல்லும் போதே மதுரை profanity கலந்தே வரும். வட்டார கெட்ட வார்த்தைகளோடு தான் 
கதா பாத்திர உரையாடல்.

இதை கூத்துப்பட்டறை ஆசிரியராக நடித்து காட்டியதுண்டு.

"தேனிசை மழை" கதை பாரதிராஜாவிடம் கலைஞானம் சொல்லி இவர் உற்சாகமாக பல மாதிரி உழைத்த பிறகு 
பாரதி ராஜா படம் எடுப்பதாயில்லை என்று சொன்ன போது இழப்பின் வேதனையோடு பின்னாளில் கோபத்தோடு கலைஞானம் சொன்ன வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலிக்கிறது.

 சென்ற பாக்யராஜ் சாருடன் ப்ரசாத் ஸ்டுடியோ போயிருந்த போது மீண்டும் கலைஞானத்தை சந்திக்க வாய்ப்பு.
ராஜநாயஹம் பெயரை சொன்னவுடன் பக்கத்து சீட்டில் உட்கார சொன்னார்.
சிவகுமார் அப்போது ஹாலில் நுழைந்தவர் கலைஞானத்தை செல்லமாக  " சின்னப்பையன்" என்று விஷ் பண்ணார்.  "அடுத்த சீட்ல உக்காருங்க" என்று அவர் அமர்ந்து கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டார்.

Let me tell you, I am not an artist








தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் மூவரில் தர்மேந்திராவின் இடம் எது என்பதில் குழப்பமேயில்லை. 
"மற்ற இருவரின் இடத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அவர்களின் விஸ்வரூபத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்பதாகத் தான் பெர்ஃபான்ஸ்.

திலீப்குமார், தேவ் ஆனந்த்,
ராஜ் கபூர், ஷம்மி, சசி, 
ராஜ்கபூர் மகன்கள் ரந்திர், ரிஷி எல்லோரையும் பார்த்து விட்டு தான் யாதோன் கி பாரத், ஷோலே என்று பட்டையை கிளப்பினார்.

பியார் ஹி ப்யார், தும் ஹஸின் மெய்ன் ஜவான், சீத்தா அவுர் கீத்தா, யாதோன் கி பாராத், ஷோலே - கண்ணுக்குள் நடமாடுகின்றன. 
I am romantic, witty, naughty... and I show that in my acting. 

ரிஷிகேஷ் முகர்ஜியின் சத்யகாம் தர்மேந்திர அவதாரம்.
இதை ஜெமினி கணேஷ் கதாநாயகனாக பாலச்சந்தர் "புன்னகை" யாக ரீமேக் படமாக்கினார்.

"People say that artists come and go but let me tell you I am not an artist" என்பார். மனிதம் மிகுந்தவனாக கர்வம் கொண்டிருந்தவர்.

தி. ஜானகிராமன் "மலர் மஞ்சம்" பாலி போலத்தான் ஹேமா மாலினி.
 இருவரை தன் மனதில் கொண்டிருந்தார். 
தர்மேந்திரா மணமானவர். ஜிதேந்திராவை திருமணம் செய்வது தான் சிலாக்கியமானது என்று கிளம்பி போய் விட்டார். தர்மேந்திரா மனம் தளராமல் (விட்டேனா பார்) ஜிதேந்திராவின் காதலி ஷோபாவை உசுப்பேத்தி " பாரும்மா, ஜிதேந்திரா உனக்கு துரோகம்" என்று ஷோபாவை கூட்டிக்கொண்டு ஸ்பாட்டுக்கே போய் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி பின் ஹேமா மாலினி கரம் பிடித்தார். ஜிதேந்திராவின் மனைவியானார் ஷோபா. 

தர்மேந்திரா சிரிப்பில் ஜவஹர்லால் கொஞ்சமாக ஜவஹர்லால் நேரு சாயலை காணலாம். Beaming smile.

யாதோன் கி பாராத்தில் சீரியஸாக இருக்கும் தர்மேந்திரா கடைசியில் விரிந்த புன்னகை காட்டும் போது தியேட்டரில் அனைவர் முகங்களிலிலும் அந்த சிரிப்பு தொற்றிக்கொள்ளும்.

ஷோலேயில் அடித்த லூட்டி, அமிதாப் செத்தவுடன் "கப்பர்சிங்" என்று வெறியுடன் கிளம்புவது.


Nov 10, 2025

தவசீலி - சுசாந்திகா

விஜய் டிவி பாட்டு நிகழ்ச்சியில தவசீலின்னு பொண்ணு 
"தூதுவள எல அரச்சி தொண்டையில தான் நனச்சி" பாடிய நேர்த்தி.
பாராட்டு குரலுக்கு மட்டுமல்ல.

Graceful Expression. Gesture. Posture.
என்ன இயல்பு தன்மை.

கொஞ்சம் அலட்டினாலும் விரசமாக காட்டி விடும் பாடலை பரிசுத்த தன்மையுடன் பாடினாள்.

இந்த பெண் சினிமாவில் நடிக்க வேண்டும்.

கொஞ்ச நாள் முன்னால சரிகம பதநியில் கோவையை சேர்ந்த பெண் சுசாந்திகா பாடிய " இந்த மன்றத்தில் ஒடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன் " 
காதில் தேன். 

https://www.facebook.com/share/v/1CMXcYq4wH/

https://youtu.be/sft0oPeJtj0?si=ZyXhE7RT_Jxrn5_P

Nov 9, 2025

அஷ்ரஃப் அலிகானோட ஸ்டூடண்ட் கார்த்திக்

ஈகா தியேட்டருக்கு பின்னால் இருந்த மலையாளி முஸ்லிம் ஹாஸ்டலில் சண்முகசுந்தரம் ( முன்னாள் அட்வகேட் ஜெனரல்) ஜஸ்டிஸ் அக்பர் அலி ( காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயிலில் வைத்தவர்) ஜமால் (இன்கம்டாக்ஸ் கமிஷனரானார்) வக்கீல் கலாம் ஆகியோருடன் சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த ராஜநாயஹம்.

எங்களோடு அபுபக்கர் ( மலையாளி) 
அஷ்ரஃப் அலிகான் ( ஆந்திரா).

அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில் விரிவுரையாளர்.

அஷ்ரஃப் அலிகானிடம் தமிழில் " அக்பர் அலி எங்கே" என்றால் 
"இப்பத்தான் வெளிய போச்சி. " 

" அபுபக்கர் எங்கே " 

அஷ்ரஃப் அலிகான் " ஆஃபிஸ்ல இருந்து வந்துடிச்சி. டீ சாப்ட ஹாஸ்டல் மெஸ்ஸுக்கு போயிடிச்சி"

"Shani is not in good mood. கோர்ட்லருந்து கோபமா வந்திச்சி "

ஆடு, மாடு, நாய்க்கெல்லாம் மரியாதை தரக்கூடியவர்.

" இன்னக்கி ஹாஸ்டலுக்குள்ள நாய் வந்துட்டாங்க "

" ரெண்டு கழுத உள்ள வந்து கத்துறாங்க "

" டைரக்டர் ஒன்கு தெரியுமா? Yesterday ஆடுங்க கூட்டமா கெல்லீஸ் ரோட்ல. ஸ்கூட்டர் சிரமப்படுறாங்க. கார், பஸ் நின்னுட்டாங்க."

இந்த அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில் 
வேலை பார்ப்பவர்.

"டைரக்டர், டமில்ல முத்துராமன்னு ஆக்டர் இருக்கா? அதோட மகன் முரளி my student"

முத்துராமன்" பணம் பெண் பாசம் " னு சொந்தப்படத்தில அப்ப  மாணவனாயிருந்த மகன் முரளி தான் தயாரிப்பாளர்.
முரளி தான் பின்னால கார்த்திக்.

"டைரக்டர், ஒன்கு நியூஸ். முரளிய 
ஏதோ பெரிய டைரக்டர் நடிக்க கூப்டுதாம்." 

பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக புக் செய்த விஷயத்த அஷ்ரஃப் அலிகான் தான் எங்க எல்லாருக்கும் முதல்ல "சொல்லிச்சி".

Nov 8, 2025

Bodies and Wills

Our bodies are our gardens – our wills are our gardeners.” – William Shakespeare 

இரண்டாவது புகைப்படம் 40 வயது சாவித்திரி. இறப்பதற்கு ஆறு வருடங்கள் முன்பு..


 

கேமராவிற்கென்றே வடித்த முகம்  என்றால்  சாவித்திரியின் முகம் தான்.

எப்போதும் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல  பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன். சாவித்திரி போன்ற அச்சு அசலான பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. எத்தனையோ நிராசைகள்.

என்னுடைய சாவித்திரி பாசமலர், பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.

Our bodies are our gardens. Our wills are our gardeners.

ஆனால் டாக்டர் இந்த புகைப்படங்கள் பார்த்து விட்டு :

Changes in  complexion, skin texture and color can indicate underlying health conition.
 Some of the most common illnesses or health issues that result in facial changes include hormonal imbalances, stress, poor circulation, allergies, poor hygiene and issues..
Habits affect health.

DUDE mighty dialogue

கண்ணதாசன் தன்னிரக்கப்பாடல்கள்  
வெளுத்து நிறமிழந்து 
சலித்துப் போகிறது.

Keep telling
 the same sorrow 
self pity stories 
and
Keep living 
the same poor sorrowful life.

Self-pity is your worst enemy and if you yield to it, you can never do anything wise in this world. 
Self-pity cannot serve as a bright light for a future, no matter how much effort you make.

Prepare to accept the reality.

நிம்மதி என்பதே Myth. 
The intray is never finished. தேடல் இருந்தால் நிம்மதி ஏது?
வித்தையுள்ளவனுக்கும், தேடல், விசாரமுள்ளவனுக்கும் நிம்மதி எதற்கு?

வம்படி சோகத்த
Deconstruct செய்யும் 
DUDE  mighty dialogue 

"அடுத்தவன் ஃபீலிங்ஸ 
க்ரிஞ்சா பாக்கறது தான் இப்ப
ட்ரண்ட்."

Heathy trend

https://www.facebook.com/100006104256328/posts/2588634164683367/?app=fbl

Nov 6, 2025

வேடிக்க - 54

வேடிக்க - 54

இணக்கம் காட்டிய மூன்று பிரமுகர்கள்.

திருச்சியில் இடைத்தேர்தல். 
அன்பில் பொய்யாமொழி மறைவின் காரணமாக.

பிஷப் ஹீபர் காலேஜ் வழியாக முச்சந்தி நோக்கி வாக் போகும் போது பரபரப்பு.
ஜெயலலிதா வேன் வருகிறது. அதில் பக்கவாட்டில் தொற்றிக் கொண்டு மீசை செல்வ கணபதி, செங்கோட்டையன், 
P.H.பாண்டியன். 
முச்சந்தியிலேயே ஜெ பிரச்சாரம் காரணமாக வேன் நிற்கிறது.

செல்வகணபதி அப்போது பாராளுமன்ற உறுப்பினர்.
அருகில் நின்ற செல்வகணபதியிடம் பேச்சு கொடுத்தேன். இதைப்பார்த்து விட்டு செங்கோட்டையன் என்னைப் பார்த்து சிரித்தவாறே வந்து கை குலுக்கினார். உடனே கவனித்து 
P.H. பாண்டியன் வந்து ராஜநாயஹம் தோளில் கை போட்ட போது
 " சார், எனக்கு சொந்த ஊர் செய்துங்க நல்லூர்" 
தோளில் கை போட்ட P.H. பாண்டியன்  தெளிவான திருநெல்வேலி accent ல்
 " அப்டியா, செய்துங்க நல்லூரா?" 
அப்ப தூத்துக்குடி எம்.பி அவர். தூத்துக்குடி தொகுதியில் தான் செய்துங்க நல்லூர்.

மூன்று பிரமுகர்கள் இணக்கம் கவனிக்கும்படியாக இருந்தது.
குறுகிய நேரம் தான்.

மறு நாள் தான் புத்தூர் நால் ரோட்டில் நல்லகண்ணு சந்திப்பு எதிர்பாராமல் வாய்த்தது. கம்யூனிஸ்ட் கூட்டம் கூட          தி.மு.கவிற்கு எதிராகத் தான்.

புத்தூர் நால் ரோட்டில் கலைஞர் கூட்டம் பின்பு பிரமாண்டமாக நடந்தது. 
திருநாவுக்கரசர், வாழப்பாடி, 
கோவை செழியன் கலந்து கொண்டார்கள்.
வாழப்பாடி அதில் மூப்பனாரை கலைஞர் முன்னிலையில் விமர்சனம் செய்தார்.
கோவை செழியன் தன் மரணத்திற்கு பின் கலைஞர் தான் செழியன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில்  நின்று கொண்டிருந்த ராஜநாயஹம் சன் டிவியில் தெளிவாக தெரியும்படி காட்டினார்கள்.
 சின்ன சந்தோஷம்.

திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. விற்கு தான் வாக்களித்தேன்.
அண்ணா திமுகவிற்கு எப்போதுமே வாக்களித்ததேயில்லை.

Oct 23, 2025

மனோரமா மகன் பூபதி

மனோரமா மகன் பூபதி 
- R.P. ராஜநாயஹம் 

சாவு சில காட்சிகளை பின்னோக்கி கிளர்த்துகிறது.

தி. நகர் பஸ் நிலையம் எதிரில் இருந்த மேன்சனில் தங்கியிருந்த சமயம் அது.

பூபதியின் காரில் அங்கிருந்து பனகல் பார்க் வழியாக இயக்குநர் ரா.சங்கரனை சந்திக்கப்போன போது ராஜநாயஹம் 
" இப்ப நீங்க நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?"
காரை ஓட்டிக் கொண்டே பூபதி: 'Why not? Why not? While the offer flows in, why not?'

உதிரிப்பூக்கள் படத்தில் துவங்கி, மணல் கயிறு போல சில படங்கள்.

"Why not, why not? While the offer flows in, why not?"
விஷயத்தை பல வருடங்கள் கழித்து 1992ல் ராசுக்குட்டி ஷூட்டிங்கிற்காக மனோரமாவுடன் மகன் பூபதி வந்திருந்த போது மீண்டும் ஞாபகப்படுத்தினேன்.

அப்பா எஸ்.எம். ராமநாதன் முக சாயல் பூபதிக்கு.

அம்மாவை 'பாப்பா பாப்பா' என்று எப்போதும் அழைக்கும் பூபதி.

முதல் மனைவி எழுத்தாளர்மணியன் மனைவியின் சகோதரி என்று சொல்வார்கள். மனோரமா அந்த திருமணத்தில் பேசும்போது அழுதார். திருமணம் நீடிக்காத போது இரண்டாம் திருமணத்தின் போதும் மனோரமா தேம்பினார்.

ராசுக்குட்டி ஷூட்டிங் போதும் மனோரமா 
 " பூபதி இப்பவும் குழந்தை தான். அம்மா தான் அவனுக்கு எல்லாம். "

மாஸ்டர் தசரதன் பற்றி( தசரதன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன் படத்திலும் நடித்தவர் தான்)
பூபதி" பதினஞ்சாயிரம் கடன் வாங்குனார். அப்புறம் என்னய பாக்காம பதுங்கிக்கிறாரு"

ரொம்ப செல்லமா வளந்த பிள்ளை.
பள்ளிப்படிப்பு 
ஊட்டி லவ்டேல்.

மனோரமாவுக்கு ராஜநாயஹம் இரங்கல் குங்குமத்தில் பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்தது.

Oct 21, 2025

முத்துசாமி நாடகங்கள் பற்றிய அபத்த உளறல்கள்

ந.முத்துசாமி நாடகங்களில் பேச்சை வார்த்தையாக மாற்றி எல்லாவற்றையும் நட் போல்ட் யெல்லாம் போட்டு அருமையாக வைத்திருக்கிறார் playக்குள்ளே. In all his plays.

எப்போதும்  தான் எழுதியதை முத்துசாமி உரக்கப் படித்துப் பார்ப்பார்.
குஞ்சலி மாமிக்கும் படித்துக் காட்டுவார்.

வார்த்தைகளுக்குள்ளே பேச்சாக அடக்கி மருந்து வைத்து பண்ணியிருக்கிறார். ஏனென்றால் எழுதப்பட்ட விதத்தில் பேச்சு, தொனி, அர்த்தம் வெளி வரவேண்டும்.

How you must write a "Theatre criticism" about Muthuswamy play ?

 நான்கைந்து ரிகர்சல் பார்க்க வேண்டும். அப்புறம் மேடையேற்றப்படும் நாடகத்தை மூன்று முறை பார்த்து விட்டு அப்புறம் தான் write up எழுத வேண்டும்.

ஒரே நாள் பார்த்து விட்டு விமர்சனம் எழுத நினைப்பது அபத்தம்.

பத்து வரி விமர்சனம் எழுதுவதற்கே இப்படி தான்.

முத்துசாமி இங்கிலாந்து நாடகத்தை எழுதினார். 
ரிகர்சல், நாடகம் பல முறை பார்க்க வாய்த்திருக்கிறது.

நாடகம் முத்துசாமி தமிழில் எழுதிய விசேட படைப்பு.
இதை அறியாமல் நாடகத்துறைக்கே சம்பந்தமில்லாத நபர் எழுதிய அபத்தம் 
"முத்துசாமி இங்கிலாந்து நாடகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தார்."
Hypocrisy.

முத்துசாமி இறந்தபோது 
லயோலா கல்லூரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அஞ்ஞானத்தை நூறு பேர் பார்க்க வெளிப்படுத்திய கோமாளித்தனம் நடந்தது.

முத்துசாமியின் 'அப்பா பிள்ளை' அபூர்வ நாடகம்.
இதை படிக்காமல் 
முத்துசாமிக்கும் நடேஷூக்கும் நடந்த சண்டைகளை 
முத்துசாமி 
அப்பா பிள்ளை நாடகம் ஆக்கினார் என்று 
தெரிந்த மாதிரி அந்த நபர் பேசினார்.

......

முத்துசாமி இறப்பதற்கு முன் R.P. ராஜநாயஹம் 
ஆங்கிலத்தில் 
கூத்துப்பட்டறை தேவை கருதி எழுதிய 
அப்பா பிள்ளை Synopsis

May 22, 2018
Na.Muthuswamy’s Play “Appaavum Pillaiyum”
- R.P. Rajanayahem 

Na. Muthuswamy’s play “Appaavum Pillaiyum” won't make you snore. I promise. Though it’s an absurd play , it has the pleasure of text. 
A very interesting play to be staged.

“ Theatre of absurd has a sense of metaphysical anguish towards the absurdity of the human condition.People should learn to appreciate such productions.”
- Martin Esslin

Martin Esslin coined the term “Theatre of Absurd” in the year 1962 and Na.Muthuswamy has written his first absurd play (kaalam kaalamaaga) in the year 1968.
Muthuswamy is an avant – garde playwright in Tamil.

“Appavum Pillaiyum” means Father and Son. This play offers a tragicomic outlook on human existence. Muthuswamy has achieved
 a theoretical impossibility in this play in which three Ramaswamys are conversing among themselves.

Author Muthuswamy has lost his father at the age of seven. He frets a lot about his father’s death. If his father had lived for some more years, his childhood and youth life would have been brightened. This is the basic sorrow of the protagonist in Appavum pillaiyum.

It’s a struggling life. Ramaswamy has to achieve and win in his challenging life.
The story travels in this chennai and Punjai village. There is a quantum jump and sudden significant change.

Ramaswamy explains happenings in the road when he goes to meet his friend.

His detailed reminiscence of childhood and father is beautifully described by Author.
There are other dreamy characters like Amma, Periyappa, Rasavayyar, Pavadai, Ponnuswamy, Vairakkannu, journalist and an unseen friend.

Author of this play is a renowned , significant short story writer also. His revelation has promted him to change direction to work as a playwright. 

We can witness the elements of a classic short story also in Appavum Pillaiyum.
Author has successfully utilised the stream of consciousness throughout the play.

Every theatre person and book reader in Tamil world has a great admiration for Muthuswamy’s work. That is what it is. It has epic, heroic.. What he has achieved.
This play is a nightmare from which Author Muthuswamy is trying to awake.
………

Oct 17, 2025

வஹாப் காஷ்மீரி

வஹாப் காஷ்மீரி 
- R.P.ராஜநாயஹம் 


ரஜினிகாந்த் பிரபலமான போது 
கண்ணதாசன் 
 " ரஜினிகாந்த் பார்ப்பதற்கு 
சாயலில் நடிகர் வஹாப் காஷ்மீரி போல் இருக்கிறார்.இவருடைய மூக்கு வஹாப் காஷ்மீரி மூக்கு போலவே தான் தெரிகிறது"

கண்ணதாசன் தயாரித்த சிவகங்கை சீமை (1959). வெல்ஷ் துரை ஆக வஹாப் காஷ்மீரி நடித்தார்.

கட்டபொம்மன் படத்தில் வந்த வெள்ளைக்காரர்கள் பானர்மென் ஜாவர் சீத்தாராமன், ஜாக்சன் பார்த்திபன் 
 இவர்களை விட  வெல்ஷ் துரை
 வஹாப் காஷ்மீரி பிரமாதமாக ஒரிஜினல் வெள்ளைக்காரர் போல தோற்றம்.
'ஊமைதுரை' உச்சரிப்பு கூட வெள்ளைக்கார தோரணை.

கட்டபொம்மனில் 
பானர்மனும் ஜாக்ஸனும் தமிழில் வசனம் பேசினார்கள். 
சிவகெங்கை சீமையில்
வெல்ஷ் துரை அருமையான ஆங்கிலம் பேசுவது சுவாரசியம்.

How do you do, Mr. Marudu?
Marudu brothers are loyal to our company.
What a surprising situation.

Frankly Mr. Marudu, I have reliable information that you are sheltering Oomaidurai.

We hope to meet you with Oomaidurai within a week.

Actor Wahab Kashmiri's remarkable posture, gesture and movement.

கலைஞர் வசனமெழுதி தயாரித்த சிவாஜி சாவித்திரி 'குறவஞ்சி'(1960) மன்னனாகநடித்தார் வஹாப் காஷ்மீரி.
" மன்னா பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே  
விடுகிறார்கள் "

இந்த படத்தின் போஸ்டரிலேயே இடம் பெற்றிருந்தார்.

1952 ல் வந்த 'ராணி'.தமிழில் எஸ்.பாலச்சந்தர், பானுமதி நடித்தார்கள்.

இந்தியில் அனூப் குமார். அசோக் குமார், கிஷோர் குமார் இருவரின் உடன் பிறந்த சகோதரர் அனூப் குமார். 
பானுமதி இந்தியிலும் கதாநாயகி.
எல்.வி. பிரசாத் இயக்கிய ஜூபிடர் சோமு தயாரிப்பு 'ராணி'.
வஹாப் காஷ்மீரி இந்த இரு மொழி படத்தில் முக்கிய நடிகர். போஸ்டரில் கதாநாயகன், நாயகியோடு இவரும் இடம் பெற்றார்.

ஜெயகாந்தன் 'யாருக்காக அழுதான்' (1966)
குடிகார சேட்.

இவருடைய காலம் ரொம்ப ஓடி விட்ட பின் பெரியகுளத்தில் தென்கரை பஜாரில் 
குதிரை வண்டியில் உட்கார்ந்து வந்த வஹாப் காஷ்மீரியை 
பார்க்க வாய்த்தது. குதிரை வண்டியில் இருந்து இறங்கி (கையில் crutch)
M.N.P. store சர்புதீனிடம் 
 " என்னடா சர்ப்பு"
சர்புதீன் முகத்தை திருப்பாமல் கண்ணால் அரை பார்வை பார்த்து 
" வாய்யா வகாப்பு".

பெரியகுளத்தை ஒட்டிய பகுதியில் சொந்தமாக சின்ன நர்ஸரி பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்த வஹாப் காஷ்மீரி
English accentல் தமிழில் 
" டேய் ஒங்காளு எரநூறாவது படம் 'திரிசூலம்' பாத்திட்டியா" சர்புதீனிடம் கேட்டார்.

Old wine drops - 2

Old wine drops - 2

நானும் ஒரு பெண் இந்தியில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்தார்கள்.
Mein Bhi Ladki hoon.

 நானும் ஒரு பெண்ணில் ஏற்கனவே நடித்திருந்த ரெங்காராவ், ஏ.வி.எம். ராஜன் புஷ்பலதா தமிழில் நடித்திருந்த அதே பாத்திரங்களில் இந்தியிலும் நடித்தார்கள்.

அனுபவி ராஜா அனுபவி இந்தியில் ராமநாதன் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது.
"முத்துக்குளிக்க வாரீகளா" வரி அப்படியே இந்தியில் ஆஷா போன்ஸ்லே பாடினார்.
ஐயோடா அம்மோடா.
மெஹ்மூத்தும் ரமாப்ரபாவும்  நடித்திருந்தார்கள்.

மனோரமா இந்தியில் நடித்த படம்'குன்வாரா பாப்'.

ஜெய்சங்கரோடு 'அன்புள்ள மான் விழியே' பாடலில் நடிக்கும் போது ஜமுனாவுக்கு கழுத்தில் பலமாக அடி பட்டிருக்கிறது. இதை சொன்னால் இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சு கோபப்படுவாரே என்று பயந்து போய் வலி வேதனையோடு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். Chronic pain. தலை ஆடும். ஜமுனாவுக்கு முதுமையில் தலை நடுங்கும். அதற்கு கழுத்தில் அடி பட்டது தான் காரணம்.
குழந்தையும் தெய்வமும் தெலுங்கில் ஹரநாத் ராஜா ஜோடி.

தமிழ் தெலுங்கு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்த குட்டி பத்மினி இந்தியிலும் அதே இரட்டை வேடத்தில் நடித்திருக்க வேண்டும். இயக்குநர் பஞ்சு ஷூட்டிங் போது தடுக்கி விழுந்து விட்டார். பயங்கர கோபத்தில் குட்டி பத்மினியை நீக்கி நீட்டு சிங் நடித்தார்.

கே. பாலச்சந்தர் பூவா தலையா
 " அட சரி தான் போடி வாயாடி" பாட்டு நடிக்கும் போது தவறுதலாக 
ஜெய்சங்கர் கை 
வெண்ணிற ஆடை நிர்மலா
 கண்ணில் பட்டு அந்த கண்ணில் கோளாறு நிரந்தரமாக ஏற்பட்டு விட்டது.

கே. ஏ. தங்கவேலு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிகளில் நடித்ததேயில்லை.
பச்சை தமிழ் நடிகர்.

 ஏதோ பழைய படத்தில் 
 " நல்ல பெண்மணி, நல்ல பெண்மணி' 
டி. ஏ. மதுரம் பாட்டிற்கு 
சிறுமியாக ஜெயலலிதா நடனம்

Oct 15, 2025

Old wine drops 1

Old wine drops 
 
- R.P. ராஜநாயஹம் 

(தேவராஜ்) மோகன் முத்துராமன் மனைவியின் சகோதரர்.
கார்த்திக்கிற்கு தாய்மாமா.

இயக்குநர் மாதவனிடம் வேலைக்கு சேர்வதற்கு முன்னாலே மோகன் நாடகங்களில் ஸ்திரிபார்ட் ரோல்களில் நடித்தவர்.

பாண்டி பஜார் ஒட்டி ராஜகுமாரி தியேட்டர் பகுதியில் குடியிருந்தவர் சினிமா மீடியேட்டர் பெருமாள் நாயுடு. 
அவர் சொல்வார்.  "பொண்ணுல்ல வருதுன்னு,  அதுமேலே இடிச்சிடக்கூடாதேன்னு ஒதுங்குனா அது பொண்ணு இல்ல. நாடகத்தில கதாநாயகியா நடிக்கிற மோகன்" என்று,
தான்  பதறி ஒதுங்கியதை நடித்தே காண்பிப்பார். " அவ்வளவு அழகா பொண்ணு போலவே ஸ்திரிபார்ட் வேடத்தில் நளினமாக (தேவராஜ்) மோகன் இருப்பாராம்.

பீம்சிங்கிடம் அசிஸ்டெண்ட்களாக இருந்து சாது மிரண்டால், மதராஸ் டூ பாண்டிச்சேரி, புதிய மனிதன் போன்ற படங்களை இயக்கியர்கள் திருமலை - மகாலிங்கம்.
இந்த மகாலிங்கம் நாடகங்களில் ஸ்திரிபார்ட் ஆக வேடம் போட்ட நடிகர்.

பீம்சிங் மனைவி கிருஷ்ணன் (பஞ்சு) சகோதரி.ஆமாம் கிருஷ்ணனின் உடன் பிறந்த சகோதரி.

திருமலையின் சகோதரர் பட்டு 'கண்மலர்' படத்தை இயக்கியவர். 'காயத்ரி' படத்தையும் இயக்கியவர்

தேவிகாவின் கணவர் தேவதாஸ் பீம்சிங்கிடம் அசிஸ்டெண்ட். 
திருமலை - மகாலிங்கம் சாது மிரண்டாலில் கூட தேவதாஸ் அசிஸ்டெண்ட் டைரக்டர்.

Oct 14, 2025

வேடிக்க 53 பக்கத்தில் பருவ நிலா



ஆற்றை ஒட்டி வீடு.
வசதியான தனி காம்பவுண்ட் வீடு. தூசி தான் பெரும் பிரச்னை. எங்கிருந்து தான் அவ்வளவு தூசி வருமோ? சில மாதங்கள் அங்கிருக்க வேண்டியிருந்தது.

இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்று இல்லை அப்புறம் பல வீடுகளில் பல ஊர்களில் குடியிருந்த போதும் அம்மா எப்போதும் அந்த வீட்டை 'தூசி வீடு' என்றே குறிப்பிடுவது வழக்கம்.

வீட்டின் எதிராக தெருவைப்பார்த்த ஐந்து சின்ன சின்ன வீடுகள். கூரை வீடுகள் அல்ல.
வீடுகள் என்றால் ஒற்றை அறை மட்டுமே கொண்ட தீப்பெட்டி போல வறியவர்களுக்கான வீடுகள். காலைக்கடன் முடிக்க ஆற்றுப்பக்கம் ஒதுங்குவார்கள்.

ஒட்டியே பத்து பதினைந்து தென்னை மரங்கள்.

முதல் வீட்டில் சாண்டில்யன் கதாநாயகி போல உயரமான பெண் இருந்தாள். அவள் சாண்டில்யன் போல இருந்தாள் என்பதே சாண்டில்யன் படித்திருந்த சப்பக்காலன் சொல்லித்தான் தெரிய வந்தது. சாண்டில்யன் தொடர்கதையில் முக்கிய பெண் கதாபாத்திரம் இவள் போல் தான் இருப்பாளாம்.கருப்பில்லாத மாநிறம். இவள் புருஷன் முகம் ஞாபகமில்லை. அதிகாலையில் கூலி வேலைக்கு போய் விட்டு இருட்டிய பின் வருவான் போல.

அதை ஒட்டிய அடுத்த வீட்டில் சினிமா கதாநாயகி போலவே படு ஸ்டைலாக நல்ல சிவப்பாக இருந்தாள். நிலா. 
தனி நிலவு தான்.

மூன்றாவது வீட்டில் இருந்த குடும்பத்தில் மோகனா - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மோகனா மட்டும் இப்போது நினைவில். மோகனா துறு துறு குழந்தை. 
மாலை இருட்ட ஆரம்பிக்கும் போது ஐந்து சின்ன சின்ன வீட்டு பெண்களும் குழந்தைகளும் மோகனா பாட்டுக்கு ரசிகர்கள்.

"இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா 
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா...
இளமை தரும் இனிய பலா..
பார்க்கட்டும் இன்ப உலா..."

முழு பாடலையும் ரசித்து அந்த சிறுமி சுதியோடு பாடும் அழகு விசேடம்.

தினமும் மாலையில் மோகனா சொர்க்கத்தின் திறப்பு விழா முதலில் பாடி இன்னும் சில சினிமா பாட்டு பாடுவாள்.

நிலாவைப் பார்க்க வாராவாரம் எங்கிருந்தோ காரில் வரும் நபர் பற்றி எதுவும் தெரியாது. அந்த ஆள் வந்தவுடன் நிலாவின் ஒற்றை அறை வீட்டின் கதவு மூடிக்கொள்ளும். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அந்த நபர் தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நிலாவே சொன்ன தகவல் என தான் தகவலே.

இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிலாவை உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப சொன்னார்கள். அவமரியாதையுடன் அவர்கள் விகாரமாக பார்த்து அழைத்த போது அவமானம் தாங்கவே முடியாமல் நிலா அழுதாள்.

அதன் பிறகு அந்த வீட்டில் அவள் இல்லை.

சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆகி அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறும் போது 
 டான்ஸ் அசிஸ்டெண்ட் ஆக பார்த்த போது
நிலா நிறம் மங்கி பொலிவிழந்து தேய்ந்து..

 "நீங்க மதுரையில இருந்தீங்கல்ல?" 

முகம் இறுகி கண்கள் தவிக்க மறுத்து 
தலையாட்டினாள்.
விரிவாக ஆற்றை ஒட்டிய ஏரியா, 
தெரு பெயர் எல்லாம் சொன்னபோதும் 
அதே மறுத்த மௌன தலையாட்டல். 

ரயில் ஏற வந்த ஹேர் டிரஸ்ஸர் சுசிலா 
 " நிலா, இந்த படத்தில நீங்களும் ஒர்க் பண்றீங்களா?"

Oct 13, 2025

வேடிக்க - 52 கண்டதெல்லாம் கடிய விலையானால்

வேடிக்க - 52

Cost an arm and a leg

1.நாய் 

கேடபாம் ஒகாமி ( நாயோட ஜாதி பேர்) விலை ஐம்பது கோடி 

2.எருமை 

விதாயக் விலை எட்டு கோடி 

 அன்மோல் விலை முப்பது கோடி 

Pay top dollar 

கண்டதெல்லாம் கடிய விலையானால் 
இந்திராணி பட்டு இருந்த விலையாகும்

கடுவாப்புலிக்கி காலக்கோட்டான் எதிரி


ஹரிராம் சேட் கடுவாப்புலியை சிவாஜி கணேசனுடன் சேர்ந்து வேட்டையாடினாராம்.

ம்..வாழ்ந்துருக்காங்க. 

"கடுவாப்புலிக்கு காலைக்கோட்டான் எதிரி"ன்னு சொலவட.

காலைக்கோட்டான்  பறவை.

கடுவாப்புலி இரையில வாய் வக்குறப்ப காலக்கோட்டான் குரல் கேட்டுச்சின்னா கொடூரமான கடுவாப்புலி பதறி இரைய விட்டுட்டு பயந்து ஓடியே போயிடுமாம். விசித்திரம்.

சுள்ளான் டேவிட் சண்டியரு கோலியாத்த சாச்சிப்பட்டான்.

அறுவது வருஷத்துக்கு முன்ன மதுரையில 
பத்து வயசு சுள்ளான் 
 சண்டியரு சக்கரத்தேவர 
பொசுக்குன்னு  
கத்திய 'சக்'னு அல்லையில சொருகிட்டான். 

காலக்கோட்டான் சமாச்சாரம் வேற. கடுவாப்புலி இதோட குரலுக்கு பயப்பிடும்னு கூடத் தெரியாது. 
கடுவாப்புலிக்கிட்ட மாட்டிக்கிட்ட மானையோ, முயலையோ காப்பாத்துற நோக்கமெல்லாம் கெடயாது. அது இயல்பா சாதாரணமாகத்தான் குரல் கொடுக்குது. கடுவாப்புலி பெரிய ஆபத்துன்னு மெரண்டு போய், செரமப்பட்டு வெரட்டிப்பிடிச்ச மான விட்டுட்டு ஓடுது. காலக்கோட்டான கடுவாப்புலி பாக்கறதும் இல்ல. பாத்ததில்ல. ஆனா அதோட குரல கேக்க 
பயமாருக்கு.

The better part of valor is discretion. 
 - Shakespeare 
எரயே வேணாம். இப்போதக்கி தப்பிச்சாகனும்.

கடுவாப்புலிங்கறது புலியா? 
கழுதப்புலியா?

காலைக்கோட்டான் ஆந்தையா? ஆந்தை மாதிரி இன்னொரு பறவையா?

Comments

Chandhra Mouli S :

காலைக் கோட்டான் ஒரு வகை ஆந்தையாம். மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் வசிக்குமாம். அதன் குரல் பதிவு இல்லை

Guna Seelan K :

கடுவாப்புலி என்பது சிறுத்தைபுலி. அதுதான் சத்தம் கேட்டால் பயப்படும். கோட்டான் என்பது ஆந்தையின் இன்னொரு வகை. காலைக்கோட்டான் என்பது தனிப்பறவை அல்ல. அது கூகைதான் கோட்டான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆந்தை என்பது சிறிதாய் இருக்கும். கோட்டான் கொஞ்சம் பெரிதாக இருக்கும். 

Tamilselvan Siva : மலையாளத்துல புலிய கடுவான்னு சொல்லுவாங்க…

கோட்டான் கூகை =barn owl .

Interestingly when you search further

கடுவாய் (Hyena; hyaena hyaena):
பாலூட்டிகளிலே பற்களின் அழுத்தம் 800 கிலோகிராம் செலுத்தும் தன்மை உள்ளவை ஹைனா என்னும் கடுவாய் விலங்குகள் தாம். 1100 psi (pounds per square inch) pressure are exerted to break the bones of dead animals' carcasses. எனவே, கழுதைப்புலிகளுக்குப் பழம்பெயர் கடுவாய் என்பதாகும்.  இவை பட்டியில் இருக்கும் ஆடு மாடுகளை வேட்டையாட வரும் போது கோட்டான் (barn owl) கத்தும் எனக்கொள்ளலாம்…

Vijai Pandian  : 

கடுக்கா புலி ... சிறுத்தை புலி ஆந்தை பெரிய உருவத்தில் இருப்பது... கோட்டான்..
அதாவது மனிதர்கள் மற்றும் பெரிய உருவம் கொண்ட உயிரினம் வந்தால் மேல் பகுதியில் இருந்து தனக்காக சத்தமிடும் அந்த சத்தம் சிறு புலிக்கு ஆபத்து என உணர்ந்து ஓடும் ...


Oct 11, 2025

God's own country

மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட இரண்டு பெரியவர்கள். இருவருக்கும் 
 75 வயதிருக்கும்.

ஒருவர் சென்னை பச்சையப்பாஸ்ஸில் தான் படித்தவர். 

மற்றவர் மம்முட்டி ரசிகர். 
அன்று சென்னையில் மம்முட்டி வீட்டிலும் மகன் துல்ஹர் சல்மான் வீட்டிலும் வருமான வரி சோதனை. 
ரயிலில் ராஜநாயஹம் Otto T. Shirtல்.

மந்தைவெளி டவுசர் கடை, எல்டாம்ஸ் ரோட் Samco பற்றியெல்லாம் பேசினார்கள்.

ஒருவருடைய பாட்டி அப்பாவுக்கு சொத்து கொடுக்காமல் பேரனான இவருக்கு சொத்தை கொடுக்க விரும்பி கேரளாவில் சொந்த ஊருக்கு வந்து விடச்சொல்லி வரச்சொல்லி, இளமையில் இவரும் போயிருக்கிறார்.
ஆறு மாதத்தில் இவர் தன் பாட்டியிடம் 
 " உன் சொத்தே எனக்கு வேண்டவே வேண்டாம். நான் இங்கே இருக்கவே மாட்டேன்" என்று மலையாள மொழியில் சொல்லி விட்டு மெட்ராஸ் வந்து விட்டாராம்.
ஏன்?
அந்த ஜனங்கள் பிடிக்கவில்லை. 
நல்லவர்கள் இல்லை.
God's own country but
 Devil's own people.

அதோடு கேரளாவில் ரொம்ப stray dogs.

கேரளாவில் இப்போதும் பிடித்தவை
1.பச்சை பசேல் பசுமை அழகு.
2. அந்த தண்ணீர் Sweet water.

மம்முட்டி ரசிகரான மற்றவர் சொல்கிறார்.
God's own country gone to dogs.

ஆவடியில் இறங்கினார்கள்.

மோகன்லால் அந்திம காலத்தில் கேரளாவில் இருந்து வெளியேற விரும்புவது,
கமல்ஹாசன் கடைசி காலத்தில் கேரளாவுக்கு போக விரும்புவது..

Taste differs.
One man's food is another man's poison 

Oct 9, 2025

188, 189 Episodes Cinema Enum Bootham

188, 189 Episodes
R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

கவிஞர் வைர முத்து

கவிஞர் முத்துலிங்கம் 

12.10. 2025 ஞாயிற்றுக்கிழமை 

19. 10. 2025 ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில் 
ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு

Oct 7, 2025

பாண்டிச்சேரி எழுத்துலகம்

பாண்டிச்சேரி எழுத்துலகம்


R.P. ராஜநாயஹம் "தித்தித்தது" நூலில் 
காலக்கண்ணாடி காட்டும் கடிதம் 

பழைய கடிதங்களை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்த போது
 1989 ல் சரவணன் மாணிக்கவாசகத்திற்கு எழுதிய கடிதம் பார்க்க கிடைத்தது. 

அந்த கடிதத்தில் சாரு நிவேதிதா, அவர் எழுதிய முதல் நாவல்,
 விடுதலை சிறுத்தை ரவிக்குமார்(விழுப்புரம்M.P), 
பிரேம்-ரமேஷ், கவிஞர் மாலதி மைத்ரி பற்றியெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
கடிதத்தை இந்தப் பதிவில் தருகிறேன்.
நீங்க எழுதின கடிதம் உங்க கிட்டயே எப்படி சார் இருக்கு..போஸ்ட் பண்ணவே இல்லையா என்று கேட்கலாம். நான் எழுதும் முக்கிய கடிதங்களை நான் அப்போதெல்லாம் ஜெராக்ஸ் செய்து வைத்துக்கொள்வதுண்டு.
அப்படி க.நா.சு இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் அவருக்கு எழுதிய கடிதம் கூட என்னிடம் இருக்கிறது.

பாண்டிச்சேரி,

12-12-1989

அன்பு மிக்க சரவணன் மாணிக்கவாசகம்,

ராஜநாயஹம் எழுதும் கடிதம். வணக்கம். நலம் நலமே விளைக.

‘அறிவு ஜீவிகள் அந்தந்த நேரத்தில் நாகரீகமாக,அதிகச்செலாவணி உள்ளதாக உள்ள சிலச்சார்புகளை அபிநயித்துக்கொண்டு,சில ’தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு  உஞ்சவிருத்தி செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள்’
- ஆதவன்.

பிரேதா என்பது முக்கியமாக பிரேமானந்தன் கிரணம் இரண்டாம் இதழில் ரமேஷ் பிரேதன் என்ற பெயரிலும் உள்ள பகுதி அவருடைய நண்பர் ரமேஷ்.
சாரு நிவேதிதா கிரணத்தை பிரேதாவுக்காகவே நான்கு இதழ்கள் நடத்தியிருக்கிறார்.
நான் முன்னர் பழனியிலிருக்கும்போது உனக்கு அனுப்பிய கவிதைப் பகுதிகள் ரமேஷ் பிரேதனுடையவை.
இருவர் எழுத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. இது குறித்து இந்த இருவருக்குமே பெருமிதம் தான்.

பிரேதாவுக்கும் ரமேஷுக்கும் 25 வயது தான். பால்ய காலத்திலிருந்தே நண்பர்கள். எல்லா அறிவு ஜீவிகளுக்கும் உள்ள சகல கல்யாண குணங்களும் இவர்களிடமும் கண்டேன்.’இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல.தமிழிலக்கியம் குப்பை. அதில என்ன இருக்கு. பேசாம குமுதம் படிக்கலாம்’ என்றே பிரேமும் ரமேஷும் அபிப்ராயப் படுகிறார்கள்.

எனக்கு வியாபார எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்து விட்டது.
 ‘இந்த உலகத்திலுள்ள சூட்சுமமான வேதனைகளையெல்லாம் அனுபவித்தவன் பாரதி. இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல என்று நினைக்கிறவனெல்லாம் பாரதியை நினச்சா அழத்தான் முடியும்’ 
இதைச்சொல்லி, இங்க எதுவுமே சரியில்லங்கற கவலை பாரதியிடமே துவங்கி விட்டதே என்றேன்.

தீவிரமான தேடலுக்கு முன்னுதாரணமாக காலத்துக்கு முந்தியே பிறந்து காலத்துக்கு முந்தியே செத்துப் போவான் சிரஞ்சீவிக்கலைஞன் ஜி.நாகராஜன்’ என்று விக்ரமாதித்யன் விம்மியதை சுட்டினேன்.  
ஜி.நாகராஜன் கவனிக்கப்படவேண்டிய கலைஞன் என்று பிரேமின் தலையாட்டல்..

எனக்கு திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ கதை நினைவுக்கு வந்து விட்டது. 
 ‘ வாழ்க்கைக்கு முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை வழங்கி விட நாம் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறோம்.
அதற்காக கோபப்படுகிறோம்,போராடுகிறோம்...
நமக்கு பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நீளத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து இல்லாத இலக்குக்கு இரையாகிப் போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான மூலையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள்.
மீண்டும் புதிதான கோபங்கள்,புதிதான போராட்டங்கள்.’

இருவரும் அமைதியாக எந்த Expressionம் முகத்தில் காட்டாமல் உற்றுப்பார்த்தார்கள்.

 பிரமிள் திசை நான்கு பத்திரிக்கையில் பிரேதா கவிதைகளை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். இது குறித்து பிரேம்
 ‘ நான் இதையெல்லாம் பொருட்டாக எண்ணவில்லை.லத்தீன் அமெரிக்காவிலே பட்டினியால செத்துக்கிட்டிருக்காங்க.அதைப் பத்தி கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறேன் நான். மதுரையில் என் நண்பன் வீட்டில் போலீஸ் புகுந்து அடிச்சிருக்காங்க.அது தான் இப்ப என் பிரச்னை.
 பிரமிள்  Moralist. நான் ஒ Immoralist.'

நேரு ஸ்ட்ரீட்டில் ஒரு நாள் என் மனைவிக்கு சேலை எடுக்க Ram Silks என்ற கடைக்குப் போனபோது அங்கே வேலை செய்து கொண்டிருந்த மாலதியை சந்தித்தேன். ப்ரேம் ரமேஷின் தோழி மாலதி.

சிண்டிகேட் பேங்க் வேலையில் இருக்கும் ரவிக்குமார் இவர்களின் நல்ல நண்பர். அவர் மீது மிகுந்த அபிமானம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் ரவிக்குமார்.கையில்  Michel Foucault 's The History of Sexuality.

ரவிக்குமார், ப்ரேம்,ரமேஷ், மாலதி- இவர்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ள ஒருவர் உண்டென்றால் அவர் சாரு நிவேதிதா.

சாரு நிவேதிதா இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும், ஃபேன்ஸி பனியனும்’ என்ற Meta fiction novel விரைவில் வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆபுதின் எழுதிய நாவல்கள் கையெழுத்துப் பிரதியிலேயே இருக்கின்றன. பிரேதா :ரமேஷ் பிரேதன் எழுதிக்கொண்டிருப்பதும் கதையை  உடைக்கும் வகையைச் சார்ந்தது தான்.

இந்த நேரத்தில் ’திரைகளுக்கப்பால்’ என்ற இந்திரா பார்த்தசாரதியின் நாவலைப் படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இன்றைய இலக்கியவாதிகளின் current topics - லத்தீன் அமெரிக்க கலாச்சார மூவ்மெண்ட்ஸ்- நடுத்தர வர்க்க அபாயங்கள்- ஹென்றி மில்லர் என்றெல்லாம் இ.பா 1972லேயே எழுதியிருக்கிறார். 

அவரோடு அவருடைய ஏ.சி.அறையில் நேற்று காலையில் பேசிக் கொண்டிருக்கும்போது ‘ஃப்ரான்சில் இப்போது Meta Fiction அலுத்துப்போய் மீண்டும் Straight ஆக கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்’ என்று சொன்னார்.

நேற்று மாலை Chamber of Commerce ல் பாரதி முதலான கவிதை என்பதாக கருத்தரங்கு. 
சிறப்பு  விருந்தினராக கி.ராஜநாராயணன் கலந்து கொண்டு நடத்தினார்.

கி.ரா., இ.பா. போன்ற இலக்கியவாதிகளுடனான என் அனுபவங்கள் எழுத எழுத விரியும். (அருவியின் அருகில் நிற்பதாக உணர்கிறேன்.)

அன்புடன்

R.P.ராஜநாயஹம்

......

R.P. ராஜநாயஹம் "தித்தித்தது" புதிய நூலில் இடம் பெற்றிருக்கிறது.



https://www.facebook.com/share/p/16hGpecnN5/

https://www.facebook.com/share/1YTTd2rg1G/

https://www.facebook.com/share/p/17LvUbhzY4/

http://charuonline.com/blog/?p=8296&fbclid=IwdGRjcANN3CxjbGNrA0zUAwEdH4pyvMg83lb34XYb1oBaos7mejM1d_IsqH3JuRD_BaKpPhRMxaQXTvbG

Oct 1, 2025

வேடிக்க - 51

வேடிக்க - 51

Donald Trump Half Century 

அம்பது தடவ சொல்லிட்டாராம்.
இதல்லாம் யாரு வேல? மெனக்கெட்டு எத்தன தடவன்னு எண்ணிப்பாத்துக்கிட்டே, எண்ணி எண்ணி பாத்துக்கிட்டே இருக்கிறதோ?

அமைதிக்கான நோபல் பரிசு கடும் முயற்சி.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்துறாரு.

"நான் தான  இந்தியா பாகிஸ்தான் போர நிறுத்துனேன். என்ன நாஞ்சொறது.."

இதுல மந்திரவாதி யாரு? 
ரத்தங்கக்கறது யாரு?

ராமதாஸ் அன்புமணி ரெண்டு பேருல 
யாரு மந்திரவாதி? யாரு ரத்தங்கக்கறது?

பாக்ற சினிமா படங்கள்ளயே இப்பல்லாம் வில்லன் யாரு ஹீரோ யாருன்னு புரிய மாட்டேங்குது.

மரத்ல வால தொங்கப் போட்டு ஆட்றவன் தான் ஹீரோன்னு நெனச்சா 
இன்னொருத்தன் தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி நிக்றான். 
ஒடனே மரத்ல வால தொங்கப் போட்டு ஆடுனவன் குதிச்சி எறங்கி தும்பிக்கய தரையில ஊனி நாலு காலயும் மேல தூக்கி நின்னு " இங்க பாரு, இக்கட சூடு" ன்னு சங்கு சக்கரமா சுத்த ஆரம்பிச்ட்றான்.
ஹீரோ யாரு? வில்லன் யாரு? 
குழம்புது.
மந்த்ரவாதி யாரு ரத்தங்கக்கப்போறவன் யாரு?

'யானைக்கி தோட்டா நெத்தியில'ன்னு புரியிறமாரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கதயே கிடயாதா?

எலுமிச்சப் பழம் இருக்கு. புளியம்பழம் இருக்கு. 'அதுக்கு இது நீளந்தான், புளிப்புல அவுங்க அப்பன் தான்'னு தெளிவா இருக்குதே. 

'வெள்ளரிப்பழத்துக்கு பூண்' போடற மாதிரி  கத உட்றத  பாக்கும்படி 
சுத்திலும் 
நெறய நெறய வேடிக்க. தலயில மரம் மொளக்கிது.

Confusion has it's Masterpiece.
- Shakespeare 
Macbeth

Sep 28, 2025

Karur Sorrow

Karur Sorrow 
- R.P. ராஜநாயஹம் 

Steel heart against sentiments and emotions

சம கால நடப்புகள் பற்றிய 
கடும் அதிர்ச்சியோ, 
அதீத பரவசமோ எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை 
தொட விரும்பியதில்லை.

நிலை குலைய வைக்கும் தாங்கவே முடியாத பெருந்துயரம் 
பெண்களின் கண்ணீர் 
குழந்தைகளின் கண்ணீர் 

கரூரில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக பலியாகியிருக்கிறார்கள்.

"தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன் 
வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது"
- கவிஞர் நீலமணி 

Could not afford further thunderous shock.

தாங்கிக்கொள்ளவே முடியாத பெருந்துயரம். அழுதாலும் தீரவில்லை.

People were packed and squashed like sardines in a worst crowd. This Vijay crowd was worser than the worst. The congestion trauma came with being stuck and unable to move.

கொடூர மரணங்கள் நிகழ ஆரம்பிக்கிற போதே தான் Pompous விஜயின் திமிர்த்தனமான ஆணவப் பேச்சு.
இப்போது கேட்டுப்பார்த்தால்  எந்த சராசரிக்கும் கீழான மனிதனுக்கும் கூட கடுங்கோபம் ஏற்படும். Awkward delivery.
யாரை கிண்டலும் நையாண்டியும் செய்து பாடினாரோ அந்த செந்தில் பாலாஜி (soft target) தான் 
முதல் ஆளாக மருத்துவ மனையில் resque வேலையில் உடுக்கையிழந்தவன் கை போல பாதிக்கப்பட்டவர்களின் இடுக்கண் களைய பரிதவிப்புடன் இயங்கினார். 
Field worker Senthil Balaji.

தூங்காமலே கரூர் வரும் முதல்வர்.

துணை முதல்வர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ்களையே தாக்கிய த.வெ.க. தொண்டர்கள்.

சொன்னபடி பகலிலே வந்திருந்தால் மின்சாரத்தை துண்டிக்கும் சூழ்நிலை வந்திருக்காது.

Irresponsible TVK leaders. கட்சியின் தலையே சரியில்லை. 
தும்பிக்கய ஊனி நாலு கால தூக்கி நின்னு சங்கு சக்கரமா சுத்தும் போது
 இறுமாப்பில்  குரங்குகள் வாலை கிளைகளில் தொங்கப்போட்டு ஊஞ்சலாடாமல் இருக்குமா?

தலைவர் கலைஞர் தோல்வி முகம் கண்ட சமயத்திலேயே மதுரை தல்லாகுளத்தில் தேர்தல் கூட்டம் என்றால் இந்த பக்கம் கோரிப்பாளையம் தேவர் சிலை தாண்டி பாலத்திலும் அந்த பகுதியில் பாண்டியன் ஹோட்டல் வரையிலும் மக்கள் பரபரப்பாக நிற்பதை பார்க்கும்படியாகத்தான் அந்தக் காலம் இருந்திருக்கிறது. மரங்களில் கூட உட்கார்ந்து கலைஞர் பேச்சை கேட்டிருக்கிறார்கள்.

நடு நிசியில் எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம்.
கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கு முன் எம்.ஜி. ஆர் சொன்னார்: ”தயவு செய்து தாய்மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று விடுங்கள். நான் ஆண்களிடம் தனியாக கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளியேறி சென்று விட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர் சொன்னார்.”இப்போது ஆண்கள் செல்லலாம்.”
( எம்ஜிஆர் பேச்சு என்ற ராஜநாயஹம் ஆர்ட்டிக்கிள்ளில் இருந்து இதை மட்டும் கிள்ளி ஆனந்த விகடன் இதழில் போட்டுக் கொண்டார்கள். Copy cat )

இப்படியா சினிமா வெறி பிடித்த பைத்தியங்கள். 
அராஜகமான த.வெ.க. தொண்டர்கள்.

Oh wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"

-Shakespeare in ‘ Tempest’

இப்போது டி.வி. இருக்கிறது. எத்தனை சேனல்கள். Live telecast.
பெண்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று சொல்லக்கூடிய முதிர்ச்சியில்லை. Pompous leader.

சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்த போது கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அவர் ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

தி.மு.க. விற்கு எதிராக வலைத்தளத்தில் எப்போதும் நாராசமாக கொக்கரிக்கிற எதிரிகள்.
நையாண்டியும் ஏகடியம் ஏளனம் செய்கிற இண்ட்டர்நெட் திண்ணையர்.

"அறிவாலயம் அல்சேஷன் ராஜநாயஹம்" என்று பெருமைப்படுத்தப்படும் அளவுக்கு பெரிதாக தி.மு.க. விற்கு சேவைகள் செய்ததில்லை. எதிர் கட்சிகளுக்கு பதில் விளக்கம் கொடுத்ததில்லை.

தினம் முதல்வர், துணை முதலமைச்சர் F.B. பக்கங்களில் எதிர் கட்சிகளின் அருவருக்கத்தக்க,  மோசமான அநாகரீக தாக்குதல்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி 
(காலையில பேப்பர் பாத்தப்ப தான் தெரிஞ்சது) கேப்பையில் இப்போது நெய் வடிகிறது.

அன்பில் மகேஷ் குமுறி அழுவது நடிப்பாம்.

கரூர் இளமைக்கால நினைவுகளில் பசுமையாக நின்ற ஊர். 
அப்பா சுங்க இலாகா அதிகாரியாக திருச்சி, நாகை, கரூர், மதுரையில் பணியாற்றியதால் சொந்த ஊர் போல.





Sep 26, 2025

Grand parents day

26th September, 2025
3 pm
Grand parents day in
Pookkutti school 

Pookkutti Thatha sang "When I was just a child, 
I asked my mama what will I be?"

'National Model School', 
Peelamedu, Coimbatore

Sep 24, 2025

186, 187 Episodes - Cinema Enum Bootham

186, 187 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 

ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

28.09.2025

05.10. 2025

திரைப்பட பாடலாசிரியர்கள் 

1. தஞ்சை ராமையாதாஸ் 

2. M.K. ஆத்மநாதன்

......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Priyanka RJ

23. 09. 2025

Kovai super fast Express 

Kovai to Chennai 

Priyanka 
   RJ

நவில் - சொல்

23. 09. 2025

Kovai super fast Express 

இரண்டரை வயது குழந்தை பெயர் 
நவில் இனியன் 

நவில் 
அழகான வித்தியாசமான பெயர்.

Adorable child 

நவில்தல் - சொல்வது

அப்பா சேலம் டாக்டர் டாக்டர் சுபாஷ் 

படங்கள் எடுத்தவர்
 குழந்தையின் தாய் 
டென்டிஸ்ட் துர்கா

Sep 22, 2025

கொம்புத்தேன்? ஆசை எட்டாக்கனி? ஏக்கம்


கொம்புத்தேன் 
- R.P.ராஜநாயஹம் 

க.நா.சு விடம் 
'மண்ணாசை' நாவல் எழுதிய சங்கர் ராம் சொன்னாராம்.
" எனக்கு இப்ப சாகித்ய அகாடமி விருது கிடைத்தால் நல்லாயிருக்கும்" 

க.நா.சு : ஏன், என்ன விஷயம்?

சங்கர் ராம் : பணம் தேவைப்படுகிறது. அதனால் தான்.

(சங்கர் ராம் ஆயுளில் சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை)




Geethapriyan  ஆசை :
R.p. Rajanayahem சார் உங்களுக்கு மீறி இங்கே இலக்கியவாதி, எழுத்தாளர், தத்துவஞானி , அல்லது  கவிஞர் இல்லை,
தவிர தலைக்கனமின்றி முன்னோடிகளை கொண்டாடும் பண்பை உங்களிடம் அனைவரும் படிக்க வேண்டும்,  அபுனைவுக்கும் சாகித்ய விருதுகள் தரப்பட்டுள்ளன,   சாகித்ய விருது உங்களுக்கு தரப்படுவது சரியானது,சாலப் பொருத்தமானது .

உலக இயல் இசை நாடகங்கள் குறித்து ஒரிஜினலாக மனிதில் இருந்து இங்கே எழுதுவது நீங்கள் மட்டுமே, உங்கள் எழுத்துகள்  க்ளாஸிக் ஆக மாறுகிறது, நூறாண்டு தாண்டியும் வாசிக்கப்படும் அபுனைவுகள் உங்களுடையது, உங்களுக்கு கிடைக்காத விருதுகள் விருதுகளே அல்ல என்பேன், இதை எழுத எனக்கு எந்த தயக்கமும் இல்லை, முழுத்தகுதியும் கொண்ட தமிழ் இலக்கியவாதியின் மீதான சாபம் உண்டு, அது வாழும் காலத்தில் கொண்டாடப்படாதது, அது உங்களுக்கும் நடக்கிறது, இந்நிலை நிச்சயம் மாறும்.

உண்மை சார் , உங்கள் எழுத்து வல்லமையின் தகிப்பால் உங்கள் மீது விமர்சனம் வைக்க கூட முடிவதில்லை, நீங்கள் இழந்தவற்றிக்கு சாகித்ய விருது தான் ஆற்றுதலாக அமையும், அந்த அறிவிப்பு வரும் நாள் தான் எனக்கு திருநாள்.


Rebel Ravi : 
"இவ்வளவு எளிமையாக, இவ்வளவு தெளிவாகத் தமிழில் எழுத ஒரு சிலராலேயே இயலும்: அதில் ஒருவர் தாங்கள். வெறும் வன்மத்தாலேயே உங்களுக்கு உரிய மரியாதை இந்நாட்டில் உங்களுக்கு இது வரை கிட்டவில்லை."


Sep 21, 2025

அனலி களத்தில் R.P.ராஜநாயஹம்

கோவை 


"அனலி" நிறுவனர் அரிகர சுதன்.
பேராசிரியர். களப்பணியாளர்.

18 ஆண்டுகளாக செயல்படும் "அனலி" களத்தில் R.P.ராஜநாயஹம்

வேடிக்க - 50 வீட்டிற்குள் பாம்பு



கோவை 
21.09.2025
11 am

வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டது. நல்ல பாம்பு குட்டி.
A Cobra in your house may  soon clears it of rats and mice.
அடச்சே..எங்க வீட்டில் எலியேயில்லையே.
 It's a dangerous game with a snake on every level. 

கிச்சனுக்கும் பூஜையறைக்கும் இடையிலுள்ள வாஷ் பேசினுக்கு கீழ் உள்ள பகுதியில். வாஷ் பேசின் தாண்டி ஹால். வீட்டம்மா கிச்சனில் இருந்து ஹாலுக்கு வரும் போது பார்க்க நேர்ந்தது. இது மாதிரி அதிர்ச்சி இல்லத்தரசி பார்வையில் தான் எப்போதும் தெரிய வரும்.

ராஜநாயஹம் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு நுழைந்தால் அம்மாவும் மகனும் அந்த இடத்தில் இருந்து கண்ணை அகற்றாமல் பார்த்துக் கொண்டே பதற்றத்தோடு நிற்கிறார்கள்.

Fire serviceக்கு தகவல் கொடுத்தாயிற்று.

டைல்ஸை உடைத்து தான் ஃபயர் சர்விஸிலிருந்து வந்தவர்கள்
 பாம்பு குட்டியை பிடிக்க வேண்டியிருந்தது.

A serpent's deceitful nature : 

"Look like the innocent flower, But be the serpent under it".
- Shakespeare in Macbeth 

Shakespeare doesn't specifically mention "Cobra"

ரூபாய் இரண்டாயிரம் இதற்காக கொடுக்க வேண்டியிருந்தது.
பாம்பைக் பிடித்துக்கொண்டு போன பின் தான் மகனிடம் பணம் பெற்ற விஷயம் தெரிய வந்தது.

Sep 20, 2025

'ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்'

'அண்டப்புளுகன் ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்'

பத்து பேர் இருக்கிற இடத்தில் எப்போதும் ராஜநாயஹம் நகைச்சுவை வெடிகள் சரம் பட்டாசு போல கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும். சிரித்து முடியவில்லை என்று வயிற்றைப்பிடித்துக்கொள்வார்கள். I’m always seriously humourous.

இது இன்று நேற்று அல்ல. பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து என்னுடைய நகைச்சுவை விருந்து நடந்தே வந்திருக்கிறது. In the trueman there is a joker concealed – who wants to amuse and delight others.

சில வருடங்களுக்கு முன் என்னைப் பற்றி இணையத்திலேயே சினிமா நடிகர் ஒருவர் சொன்னார்.
“ ராஜநாயஹம் தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வந்திருக்க வேண்டியவர். இயக்குனராக முயன்று தோற்றார்.”

இந்த நடிகர் கல்லூரி கால நண்பர். சினிமாவில் கதாநாயகனாகக் கூட நடித்தவர்.
மேலே சொன்னது பற்றி நான் மறுக்க ஒன்றுமில்லை. என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கலாம். என் தகுதி, தோல்விகளை அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம்.

’இனிய நண்பர் ராஜநாயஹம்’ என்பதாக என்னை விளித்திருந்தார். சந்திக்க வேண்டும் என்ற தன் ஆர்வம், ஆவலையும் வெளிப்படுத்தியிருந்தார். சந்தோஷம். But I have to steel my heart against sentiments of kindness and pity.

 மிக அழகான விலையுயர்ந்த ஃபாரின் கோட் இவருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன். சட்டை கூட கொடுத்திருக்கிறேன். அதனால் நான் அந்த நடிகருக்கு  இனிய நண்பன் தான் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும்?

இதை அடுத்து அவர் சொன்ன ஒரு விஷயம் தான் வடி கட்டின பொய்.
“ ஆங்கில இலக்கியம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.” என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டிருந்தார்.

ஆங்கில இலக்கியம் படித்தவன் ராஜநாயஹம் என்பது உண்மை தான். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் அதை அடுத்து அந்த நடிகர் சொன்ன வார்த்தைகள் தான் கடைந்தெடுத்த புளுகு.
ராஜநாயஹத்திற்கு இலக்கிய உலகில் ஏதோ அடையாளம் இருக்கிறது. அதற்கான க்ரெடிட்டை இவர் தனக்கு எடுத்துக்கொண்டு விட்டார்.
இலக்கியத்திற்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லாத  நபர்.
’நாங்கள்’ என்பது ஏதோ பெரிய இலக்கிய வட்டமோ?

“…. ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.”

Why should one dress me in deceptive, false statement?
ராஜநாயஹம் செத்த பிறகு தானே இப்படி பொய் சொல்லலாம்.

எனக்கு தெரியும். அந்த நடிகருக்கும் தெரியும். இவரோ அல்லது இவரைச் சேர்ந்த யாருமோ எனக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவே இல்லை என்கிற உண்மை.
இந்த க்ரெடிட்டை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் சவ்வாஸ் பரூக் alias பெரிய சேட்டுக்குத் தான் கொடுக்க முடியும். ஆங்கில இலக்கியம் நான் முதலாமாண்டு படிக்கும்போது பெரிய சேட்டு மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவர். ஜெயகாந்தனை இவர் தான் எனக்கு வாசிக்கக் கொடுத்தவர்.
சுந்தர ராமசாமியை கல்லூரி காலத்தில்  எப்படி முதல் முதலாக வாசித்தேன் என்பதை ’பிரசாதம் செய்த மாயம்’ என்ற என் கட்டுரையில் தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்.
அந்த நடிகரோ அப்போது எகனாமிக்ஸ் தமிழ் மீடியம்.
இவரிடம் காலத்தால் கொஞ்சமும் transformation ஏற்படவேயில்லை என்பதே இந்தப்பொய் மூலம் தெரிய வருகிறது. பக்குவமடையவேயில்லை. Stagnant person. Hypocrisy இருப்பதால் தான் இப்படியெல்லாம் தம்பட்டமான புளுகு வந்தது.

அந்த நடிகனின் இந்த அண்டப்புளுகு பற்றி 
நடிகர் ராஜேஷ் தெறிக்க விட்ட சுவாரஸ்யமான, ரசிக்கத்தக்க கமெண்ட் :
"ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்!"

Foucault's Pendulam - Umberto Eco

January25, 2009 post 

R.P. ராஜநாயஹம் 'தித்தித்தது" புதிய நூலில் இடம் பெற்றிருக்கிறது 

Foucault's Pendulum
- R.P. ராஜநாயஹம் 

டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும் அறிவர். டான் பிரவுன் நாவல் மிகவும் பிரபலம். டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து, எல்லோரும் பார்த்து ரசிக்கப்பட்ட படமானது.

ஆனால் அதை படித்தவர்கள், படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் “Foucault’s pendulum “.
உம்பெர்டோ ஈகோ எழுதிய நாவல் “Foucault’s pendulum “.

 டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி 

ஈகோ சொல்வார் :

“Don Brown is one of my creatures.”

ஃபூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட  வரியே போதும்.

குசும்பன் நாவலின் தலைப்பைப் பார்த்து விட்டு என்னிடம் 

'' மிச்சல் ஃபூக்கோவின் 'ஆடுகிற சாமான்' பற்றி உம்பர்ட்டோ எழுதியிருக்கிறாரா? '' என்று வெள்ளந்தியாகக் கேட்டுத் தொலைத்தான்.

 மிச்சல் ஃபூக்கோவிற்கும் இந்த நாவலுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.

The title refers to an actual pendulum designed by the French physicist Léon Foucault to demonstrate the rotation of the earth, and has symbolic significance within the novel.

Changes in motion—speeding up, slowing down, changing direction—are due to the effects of forces. Any object maintains a constant speed and direction of motion unless an unbalanced outside force acts on it. 

The principle of universal gravitation explains the architecture of the universe and much that happens on the earth. The principle will become familiar from many different examples (star formation, tides, comet orbits, etc.)

ஃபூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது. 
டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான். ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க  திறன் தேவை. ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது.

Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code!

ஈகோ எழுதிய பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது  'தவம்.'

Christ never laughed
"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational, and the property of man is the capacity for laughing.

The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து 1986ல் வந்தது. ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர்.
அமடியூஸ் படத்தில் கலக்கிய மர்ரே ஆப்ரகாம் நல்ல ரோலில் நடித்திருந்தார்.

உம்பர்ட்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது. 

......

மீள்பதிவு 


Sep 11, 2025

வேடிக்க - 49

வேடிக்க 49

ரயிலில் 
துப்பாக்கியோடு வந்த ப்ரியதர்ஷினி

Priyadharshini is a National player 

10 metres Air rifle peepsight

அபினவ் பிந்த்ரா,
மனு பார்க்கர்,
இளவேனில் வாலறிவன் வழியில் 

ப்ரியதர்ஷினியும்

மெட்ராஸ் க்ரிஸ்டியன் காலேஜில் 
Plant biotech முடித்து விட்டு இப்போது முழுக்க ambition in  "AIMING" rifle.

'Rifle Coaching training course' முடித்திருக்கிறார் .