கொம்புத்தேன்
- R.P.ராஜநாயஹம்
க.நா.சு விடம்
'மண்ணாசை' நாவல் எழுதிய சங்கர் ராம் சொன்னாராம்.
" எனக்கு இப்ப சாகித்ய அகாடமி விருது கிடைத்தால் நல்லாயிருக்கும்"
க.நா.சு : ஏன், என்ன விஷயம்?
சங்கர் ராம் : பணம் தேவைப்படுகிறது. அதனால் தான்.
(சங்கர் ராம் ஆயுளில் சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை)
Geethapriyan ஆசை :
R.p. Rajanayahem சார் உங்களுக்கு மீறி இங்கே இலக்கியவாதி, எழுத்தாளர், தத்துவஞானி , அல்லது கவிஞர் இல்லை,
தவிர தலைக்கனமின்றி முன்னோடிகளை கொண்டாடும் பண்பை உங்களிடம் அனைவரும் படிக்க வேண்டும், அபுனைவுக்கும் சாகித்ய விருதுகள் தரப்பட்டுள்ளன, சாகித்ய விருது உங்களுக்கு தரப்படுவது சரியானது,சாலப் பொருத்தமானது .
உலக இயல் இசை நாடகங்கள் குறித்து ஒரிஜினலாக மனிதில் இருந்து இங்கே எழுதுவது நீங்கள் மட்டுமே, உங்கள் எழுத்துகள் க்ளாஸிக் ஆக மாறுகிறது, நூறாண்டு தாண்டியும் வாசிக்கப்படும் அபுனைவுகள் உங்களுடையது, உங்களுக்கு கிடைக்காத விருதுகள் விருதுகளே அல்ல என்பேன், இதை எழுத எனக்கு எந்த தயக்கமும் இல்லை, முழுத்தகுதியும் கொண்ட தமிழ் இலக்கியவாதியின் மீதான சாபம் உண்டு, அது வாழும் காலத்தில் கொண்டாடப்படாதது, அது உங்களுக்கும் நடக்கிறது, இந்நிலை நிச்சயம் மாறும்.
உண்மை சார் , உங்கள் எழுத்து வல்லமையின் தகிப்பால் உங்கள் மீது விமர்சனம் வைக்க கூட முடிவதில்லை, நீங்கள் இழந்தவற்றிக்கு சாகித்ய விருது தான் ஆற்றுதலாக அமையும், அந்த அறிவிப்பு வரும் நாள் தான் எனக்கு திருநாள்.
Rebel Ravi :
"இவ்வளவு எளிமையாக, இவ்வளவு தெளிவாகத் தமிழில் எழுத ஒரு சிலராலேயே இயலும்: அதில் ஒருவர் தாங்கள். வெறும் வன்மத்தாலேயே உங்களுக்கு உரிய மரியாதை இந்நாட்டில் உங்களுக்கு இது வரை கிட்டவில்லை."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.