மோகன் ஷர்மா நடிகை லக்ஷ்மி உறவு கெட்டுப் போன விஷயம் பற்றி முன்னர் பேட்டியில் விரிவாக பேசியவை நெகிழ்த்தும்படியாக இருந்தது.
லக்ஷ்மி சிவச்சந்திரனை மணந்து கொண்ட போது மகள் ஐஸ்வர்யா அம்மாவை விட்டு பிரிந்த போது
Step father மோகன் ஷர்மா பற்றி உயர்வாக " A gentle man of the first order" என்று சொல்லியிருந்தார்.
லக்ஷ்மி சிவச்சந்திரன் திருமணம் பற்றி success என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் முப்பத்தைந்து வருடங்களாக இணைந்து இருக்கிறார்கள். லக்ஷ்மிக்கு மூன்றாவது திருமணம் அமைந்து விட்டது. சிவச்சந்திரன் பேட்டி பார்க்க கிடைத்தது. Every Inch, he is a gentle person என்பது தெளிவாக தெரிகிறது.
மோகன் திரும்ப திரும்ப லக்ஷ்மியுடனான மண முறிவு பற்றியே பேசுகிறார்.
அதன் பிறகு இரண்டு முறை மோகன் திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அந்த திருமணங்கள் இரண்டும் கூட அடுத்தடுத்து failure தான் என்று கேள்வி.
அதைப்பற்றி ஒரு வரி கூட ஏன் சொல்லவில்லை.
பேட்டி எடுப்பவர்களுக்கு பிரபல நடிகை லக்ஷ்மியுடனான உறவு கெட்டுப் போனது தான் முக்கியம்.
லக்ஷ்மி consistent ஆக சிவச்சந்திரனுடன் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சுவையான விஷயம்.
லக்ஷ்மி நடிப்பில் காவிய நாயகி.
நகைச்சுவை ததும்ப நடிப்பதிலும் கொடி கட்டியவர்.
சிவச்சந்திரன் முதல் திருமணம் நடிகை அபர்ணாவுடன். சில்க் ஸ்மிதா இந்த நடிகை வீட்டில் தான் வேலை பார்த்தார்.
அபர்ணாவை ஆண்டனி என்ற சிவச்சந்திரன் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் விவாக ரத்து செய்து விட்டார்.
The chain of matrimony is so heavy, it takes two to carry it. Some times two, three, four, five...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.