05. 04. 2024 மாலை
நடைப்பயிற்சியின் போது கையில் மொபைல் ஃபோன் வைத்துக் கொள்வதில்லை.
அந்தி மாலை வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் மிஸ்ட் கால்.
இயக்குநர் பாக்யராஜ் அழைப்பு.
அழைத்தேன்.
"காரணச்செறிவு" தலைப்பு விபரம் கேட்டார்.
'அன்னலட்சுமி' கட்டுரையின் முடிவில் எழுதியுள்ள
"When you are destined to be hanged, you will never be drowned" பற்றி பாக்யராஜ் விசாரித்தார்.
சில சம்பவங்கள் சொன்னார்.
'பைபிள் சத்தியம்' தொட்டு,
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்
கதை டிஸ்கஷனில் ரெண்டு நாளா வாளாவிருந்து பாக்யராஜிடம் 'நான் கிளம்புறேன்'ன்னு ஒதுங்கிக் கொண்ட விஷயம்..
ராசுக்குட்டி சமயம் பாக்யராஜ் பேசிய சுவையான பழைய விஷயங்கள் நினைவில் இருந்தெல்லாம் சிலவற்றை கூறினேன்.
நான்கு நாட்களில் டைரக்டருடன் ராஜநாயஹம் இரண்டாவது உரையாடல்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.