Share

Apr 22, 2024

ஜெய்சங்கர் பாட்டு - ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா


ஜெய்சங்கர் பாட்டு - ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா’

 வருடம் 1976 
"ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா, 
தர்மம் நிலைக்கும் என்று சொன்னவனே, 
நீ நாடாள வர வேண்டும்" 
இந்த வாலி பாடல் பாடி நடித்தவர் ஜெய்சங்கர். 

செய்தித்தாளில் இந்த பாடல் வரிகளோடு ஜெய்சங்கர் தலையில் கும்பத்தோடு ஆடி பாடுகிற ஸ்டில் போட்டு 'பணக்காரப்பெண்' பட விளம்பரம். 

மறு வருடம் 1977ல் எம். ஜி.ஆர். ஆட்சி ஆரம்பம் என்பது தெரிந்த விஷயம். 
எம். ஜி.ஆர் முதல்வரான பிறகு 
மறு வருடம் 1978ல் 
'வண்டிக்காரன் மகன்' கலைஞர் படத்திற்கு மருமகன் அமிர்தம் இயக்குநர். 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' பாடல் வண்டிக்காரன் மகனில் தான். 

பின் கலைஞர் படங்கள் நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, 
1980ல் 'காலம் பதில் சொல்லும்'. இந்த படங்களில் ஜெய்சங்கர் தான் கதாநாயகன். 

ஜெய்சங்கரின் தாயார் மறைந்த போது கலைஞர் அவருடைய வீட்டிற்குப் போய் துக்கம் விசாரித்தார். 

'காலம் பதில் சொல்லும்' படத்திற்கு பிறகு கலைஞர் படங்களில் அமிர்தம் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்ததில்லை. 

1987ல் எம். ஜி.ஆர் மறைவு. 

1989 ல் கலைஞர் கருணாநிதி 13 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 
ஆட்சியை கைப்பற்ற நடந்த கடுமையான போராட்டம். 

கலைஞருக்கு எதிராக பெரு வியூகம். 
காங்கிரஸ் கலைஞருக்கு கை கொடுக்காமல் எதிராக தேர்தலை மூப்பனார் தலைமையில். 

உடைந்த அ.தி.மு.கவின் பகுதி எம்ஜியார் மனைவி ஜானகி தலைமையில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில். 

தி. மு. க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய போது நக்கீரனில் பிரபஞ்சன் 'தி. மு.க. வின் வெற்றி ஐயர்களின் தோல்வி'  என்று குறிப்பிட்டு 
தி. மு. க விற்கு எதிராக பிரசாரம் செய்த ஐயர்கள் பெயர்களை ஐயர் என்ற அடையாளமிட்டு குறிப்பிட்ட பெயர்களில் நடிகர் ஜெய்சங்கரையும் கூட ஜெய்சங்கர் ஐயர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆமாம். கலைஞருக்கு எதிராக ஜெய்சங்கர் 1989ல். 

மேஜர் பெயரையும் சுந்தர்ராஜ ஐயர் என்றே எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார். 

மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ. சுந்தர்ராஜன் அப்போது கோயம்புத்தூரில் பிரபஞ்சனின் அந்த நக்கீரன் கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்னார் : அடுத்த தடவை பிரபஞ்சனைப் பார்க்கும் போது.                          'என்னை தெரியுதா? நான் தான் சுந்தர்ராஜ ஐயர்'  என்று சொல்வேன் ' என்றார். 
சிட்டியின் இந்த மெல்லிய நகைச்சுவை பற்றி 1990ல் புதுவையில் பிரபஞ்சனிடம் நான் சொன்ன போது ரசித்து புன்னகைத்தார்

….

20.08.2021 பதிவு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.