இந்த சம்பவம் ஃப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு முந்தைய வருடம் நாற்பதாவது வயதில் நடந்திருக்கிறது.
பூங்காவில் யாரோ பெண்குழந்தை தன்னுடைய பொம்மை காணாமல் போய் விட்டது என்று அழுது கொண்டிருப்பதைக் கண்டு சிறுமியோடு சேர்ந்து காஃகாவும் சேர்ந்து தேடியிருக்கிறான். பொம்மை கிடைக்கவில்லை.
மறு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம் என்று ஆறுதல் சொல்லி தேற்றி அனுப்பியிருக்கிறேன்.
மறுநாள் இருவரும் தேடிப்பார்த்தும் ஏமாற்றம் தான் மிச்சம். காஃப்கா அவளிடம் கடிதமொன்றை கண்டெடுத்ததாக காட்டியிருக்கிறான். பொம்மை எழுதிய கடிதம்.
" அழாதே பாப்பா, நான் உலகத்தை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். கவலைப்படாதே. என்னுடைய பயண சாகச அனுபவங்கள் பற்றி உனக்கு கடிதம் எழுதுவேன் பார்."
இப்படி சுவாரசியமான அழகிய கதை ஆரம்பித்து விட்டது.
காஃப்கா தான் எழுத்தாளராயிற்றே.
பூங்காவில் சிறுமியை சந்திக்கும் போதெல்லாம் பயணத்தின் சாகச அனுபவங்கள் பற்றி பொம்மையின் கடிதம் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறான்.
He loved the way of grace.
குழந்தைக்கு பேரானந்தம். கடிதங்களை அபிமானத்துடன் போஷித்து பத்திரப்படுத்தி வந்திருக்கிறாள்.
பொம்மை பெர்லீனுக்கு திரும்பி வந்துவிட்டதாக சொல்லி காஃப்கா
புது பொம்மை கொடுத்த போது
அந்த பெண் குழந்தை சந்தேகம்
" இது என் பொம்மை போலவே இல்லையே"
உடனே காஃப்கா பொம்மை எழுதிய இன்னொரு கடிதம் காட்டியிருக்கிறேன்.
" பாப்பா, இந்த பெரிய பயணம் என்னை
முழுமையாக மாற்றி விட்டது. நான் தான் இந்த பொம்மை. நம்பு"
காஃப்கா மறு வருடம் மரித்து விட்டான்.
பல வருடங்களுக்குப் பின்னர்
பதின் பருவத்தில் பெண்
அந்த பொம்மையின் உள்ளே காஃப்காவே கையெழுத்திட்ட கடிதம் பார்க்கிறாள்.
" நீ நேசிக்கும் எதுவுமே ஒரு வேளை காணாமல் தொலைந்து போகலாம். அன்பு செலுத்தியதை இழக்கும்படி ஆகலாம். ஆனால் முடிவில் நேசமிகு பாச அன்பு வேறு வழியில் திரும்பி வந்து விடும்"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.